UPI.. ரூ.2,000 மேல் அனுப்ப சார்ஜ்? EMI கட்ட தவறினால் லாக்? RBI கவர்னர் போட்ட ஒரே போடு.. ஆனால், இது கன்பார்ம்!
கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm), போன்பே (PhonePe) மற்றும் பீம் (BHIM) உள்ளிட்ட யுபிஐ ஆப்களை பயன்படுத்தும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் பணம் அனுப்ப கட்டணம் இருக்குமா? இருக்காதா? என்பது குறித்து ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா சொன்ன அந்த வார்த்தை வேத வாக்காக மாறி இருக்கிறது. அதே நேரத்தில் ஈஎம்ஐ கட்ட தவறினால், ஸ்மார்ட்போன் லாக் செய்யப்படுமா என்பதற்கான விளக்கத்தையும் சஞ்சய் மல்ஹோத்ரா கொடுத்துள்ளார்.
யுபிஐ ஆப்கள் மூலம் செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் எப்போதும் இலவசமாக இருக்காது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா முன்கூட்டியே கூறியிருந்தார். அதே நேரத்தில் ரூ.2,000 மேல் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்கள் மூலம் செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி கட்டணம் இருக்கும் என்று கூறப்பட்டது.

இதுபோக ஈஎம்ஐ மூலம் வாங்கப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு தவணை செலுத்த தவறினால், அந்த ஸ்மார்ட்போன்களை டிஜிட்டல் லாக் செய்யும் அதிகாரத்தை பேங்குகள் மற்றும் பைனான்ஸ் நிறுவனங்களுக்கு கொடுக்கும்படியும் புதிய நடைமுறைகள் அமலுக்கு வர இருப்பதாகவும் கூறப்பட்டது. இவற்றை ரிசர்வ் வங்கி மறுக்காமல் இருந்ததால், அது பலருக்கு வயிற்றில் புளியை கரைத்தது.
இவற்றுக்கு ஒரே நேரத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம் அளித்துள்ளார். இதில் ஒன்று பாலை வார்த்துள்ளது, மற்றொன்று மீண்டும் புளியை கரைத்துள்ளது. அதாவது, யுபிஐ பரிவர்த்தனைக்குக்கு கட்டணம் விதிக்கப்படாது. அது ஜீரோ சார்ஜ் நடைமுறையில் தொடர்ந்து கொடுக்கப்படும் என்று கூறி பாலை வார்த்துள்ளார். யுபிஐ சேவைக்கு யாராவது கட்டணம் செலுத்த வேண்டும்.
எப்போதும், அது இலவசமாக கிடைக்காது என்று அவர் சொன்னாலும், இப்போது வரை யுபிஐ சேவைகளை கொடுப்பதற்கான செலவை மத்திய அரசு ஏற்று கொண்டு வருகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே சஞ்சய் மல்ஹோத்ரா ஜீரோ சார்ஜ் யுபிஐ சேவைகள் கொடுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். ஆனால், ஈஎம்ஐ விஷயம் அப்படி கிடையாது.
ஈஎம்ஐ செலுத்தப்படாத ஸ்மார்ட்போனை லாக் செய்வதற்கான அதிகாரத்தை பேங்குகள் மற்றும் பைனான்ஸ் நிறுவனங்களுக்கு கொடுக்க பரிசீலனை செய்யப்பட்டு வருதவாக அவர் கூறியிருக்கிறார். இந்த டிஜிட்டல் லாக்கிங் நடைமுறையின் அவசியம், கஸ்டமர்களின் உரிமைகள் மற்றும் அவர்களது தனியுரிமை ஆகியவை பரிசீலனை செய்யப்பட இருக்கிறது.
அதேபோல கடன் வழங்குநர்களின் தேவைகளும் பரிசீலனை செய்யப்பட்டு இந்த முடிவு இறுதியாக எடுக்கப்படும் என்று ஆர்பிஐ (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே, டிஜிட்டல் லாக் செய்யப்படுவதற்கு முன்னதாக அந்த ஸ்மார்ட்போன்களின் உரிமையாளர்களின் அனுமதி பெறப்படும் என்று கூறப்பட்டது.
ஆகவே, இந்த டிஜிட்டல் லாக்கிங் நடைமுறை வந்தாலும், கஸ்டமர்களின் அனுமதிக்கு பிறகே ஸ்மார்ட்போன்கள் லாக் செய்யப்படும் என்பது தெரிகிறது. மேலும், என்பிசிஐ (NPCI) என்று அழைக்கப்படும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) விதித்த யுபிஐ கலெக்ட் ரெக்கொஸ்ட் (UPI Collect Request) விதிகளானது அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டது.
ஆகவே, ரூ.2,000 வரையில் பணத்தை பெற்று கொள்ளும்படி பி2பி (P2P) என்று அழைக்கப்படும் பீர்-டு-பீர் (Peer-to-Peer) பரிவர்த்தனைகளில் ரெக்கொஸ்ட் கொடுக்க முடியாது. ஆகவே, தனிநபர்களுக்கு இடையே பயன்படுத்தப்படும் பரிவர்த்தனைகளில் யுபிஐ கலெக்ட் ரெக்கொஸ்ட் கொடுக்க முடியாது. பி2எம் (P2M) பரிவர்த்தனைகள் வழக்கம் போல கிடைக்கிறது.
ஆர்பிஐ (RBI) என்று அழைக்கப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) ஆனது ஒட்டுமொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் கூடுதல் வெரிபிகேஷனை கொண்டுவர இருக்கிறது. ஆகவே, ஓடிபி மட்டுமல்லாமல் கூடுதலாக ஒரு வெரிபிகேஷன் கிடைக்க இருக்கிறது. இது அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அமலுக்கு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








