Home
News

SIM கார்டு ட்ரே-விற்கு குட்பை.. Google எடுத்த அதிரடி முடிவு.. ஆகஸ்ட் 20 பெரிய சம்பவம் இருக்கு!

ஆகஸ்ட் 20 ஆம் தேதி "நெருங்க நெருங்க" பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் குறித்த பல விஷயங்கள் லீக் ஆன வண்ணம் உள்ளன. அறியாதோர்களுக்கு - ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடக்கும் மேட் பை கூகுள் நிகழ்வில் பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இந்த முறை (2025 ஆம் ஆண்டில்) அறிமுகமாகும் கூகுளின் பிக்சல் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது சில மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்.. நாங்க இவ்ளோ பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலப்பா" என்று கூறவைக்கும் படியான ஒரு லீக்ஸ் வெளியாகி உள்ளது.

SIM கார்டு ட்ரே-விற்கு குட்பை.. Google எடுத்த அதிரடி முடிவு!

பிக்சல் 10 சீரிஸின் (Pixel 10 Series) கீழ் அறிமுகமாகும் 3 மாடல்களுமே சிம் கார்டு ட்ரே (SIM Card Tray) இல்லாமல் வரும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் ஆன எவன் பிளாஸின் (Evan Blass) எக்ஸ் தளபதிவின்படி, கூகுள் அதன் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்களான பிக்சல் 10, பிக்சல் 10 ப்ரோ மற்றும் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் ஆகியவற்றிலிருந்து பிஸிக்கல் சிம் ஸ்லாட்டை அகற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கு பதிலாக, இந்த ஸ்மார்ட்போன்களில் இசிம் (eSIM) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம். குறிப்பாக பிக்சல் 10 சீரிஸில் உள்ள இரண்டு சிம்களுமே முழுமையாக இசிம் ஸ்லாட்டுகளை தான் நம்பியிருக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த லீக் உண்மையாகும் பட்சத்தில் உங்கள் ஸ்மார்ட்போனின் சிம் ஸ்லாட்டை சிறிய பின்-ஆல் குத்த வேண்டிய அவசியம் இனி இருக்காது; கூடவே பயணத்தின்போது விரைவாக சிம்களை மாற்றும் திறனையும் நீங்கள் இழக்க நேரிடும்.

சுவாரஸ்யமாக, ஆகஸ்ட் 20 நடக்கும் பிக்சல் 10 சீரீஸின் கீழ் அறிமுகம் செய்யப்படமால், பின்னர் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் மடிக்கக்கூடிய பிக்சல் 10 ப்ரோ ஃபோல்டு (Pixel 10 Pro Fold) மாடல் ஆனது பிஸிக்கல் சிம் ட்ரேவுடன் வரலாம் என்பதையும் இவான் பிளாஸ் வெளிப்படுத்தியுள்ளார்.

பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் (Android Headlines) வழியாக கிடைத்த சமீபத்திய அறிக்கையின்படி, கூகுள் பிக்சல் 10 சீரிஸின் வெளியீட்டு விலை நிர்ணயம் ஆனது பழைய பிக்சல் 9 சீரிஸின் விலையை போலவே இருக்கும்.

அமெரிக்காவில் பேஸிக் கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் 128ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.70,000 க்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல 256ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.78,800 க்கு அறிமுகம் செய்யப்படலாம். கனடாவில், இந்த வகைகளின் விலைகள் முறையே சுமார் ரூ.69,700 மற்றும் சுமார் ரூ.77,900 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.

கூகுள் பிக்சல் 10 ப்ரோவின் (128ஜிபி) ஆரம்ப விலை அமெரிக்காவில் தோராயமாக ரூ.87,500 ஆகவும் மற்றும் கனடாவில் சுமார் ரூ.85,500 ஆகவும் இருக்கலாம். இது 256ஜிபி, 512ஜிபி மற்றும் 1டிபி வேரியண்ட்களிலும் அறிமுகமாகும். இவைகளின் விலை அமெரிக்காவில் முறையே தோராயமாக ரூ.96,300, ரூ.1,13,800 மற்றும் ரூ.1,26,900 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவில், இதே வகைகளின் விலை சுமார் ரூ.93,800, ரூ.1,06,500 மற்றும் ரூ.1,23,600 ஆக இருக்கலாம்.

கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல்லின் 256ஜிபி ஆப்ஷன் அமெரிக்காவில் தோராயமாக ரூ.1,05,000 க்கும் கனடாவில் சுமார் ரூ.1,03,300) க்கும் அறிமுகம்ஸ் செய்யப்படலாம். இதே ஸ்மார்ட்போனின் 512ஜிபி மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் (அமெரிக்கா அலல்து கனடாவில்) முறையே ரூ.1,15,600 அல்லது ரூ.1,14,100 மற்றும் ரூ.1,35,700 அல்லது ரூ.1,33,100 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
No SIM Card Tray in Pixel 10 Series Google To Start eSIM Revolution Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X