ஜியோ டிடிஎச் சேவை பற்றி முக்கிய அறிவிப்பு; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!

அதை மேலோட்டமாக உறுதி செய்யும் வண்ணம், 4ஜி சேவைகளை தொடர்ந்து பிராட்பேண்ட் மற்றும் டிடிஎச் சந்தை பிரிவுகளுக்குள்ளும் ரிலையன்ஸ் ஜியோ நுழைவதாக அறிக்கைகள் வெளியாகின.

|

மிகவும் மலிவான விலைக்கு அதிவேக டேட்டாவை வழங்க தொடங்கிய நாள் முதலே, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடமிருந்து "அதே பாணியிலான" டிடிஎச் சேவையும் மிக மலிவான விலைக்கு வழங்கப்படுமென்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.

அதை மேலோட்டமாக உறுதி செய்யும் வண்ணம், 4ஜி சேவைகளை தொடர்ந்து பிராட்பேண்ட் மற்றும் டிடிஎச் சந்தை பிரிவுகளுக்குள்ளும் ரிலையன்ஸ் ஜியோ நுழைவதாக அறிக்கைகள் வெளியாகின. அதனை தொடர்ந்து, மிகவும் மலிவான விலைக்கு ஜியோவின் டிடிஎச் சேவை மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை அணுகவும், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காகவும் பெரும்பாலான ஜியோவாசிகள் காத்திருக்க தொடங்கின, அந்த அறிவிப்பு தற்போது நிகழ்ந்துள்ளது.

அடுத்த தலைமுறைக்கான இணைப்பு அம்சங்கள்.!

அடுத்த தலைமுறைக்கான இணைப்பு அம்சங்கள்.!

ஜியோவின் அதிகாரபூர்வமான அறிவிப்பிற்கு முன்னர் வெளியான செய்தி ஊடக அறிக்கைகளின்படி, ஜியோ டிடிஎச் என்பது ஒரு ஜியோ செட் டாப் பாக்ஸ் மூலம் இயக்கப்படும் என்று கூறப்பட்டது மற்றும் இதர வழக்கமான டிடிஎச் சேவைகளிலிருந்து வேறுபடுமென்றும் கூறப்பட்டது. லீக்ஸ் புகைப்படங்களின்படி, ஜியோ செட் டாப் பாக்ஸ் ஆனது ஒரு மிகத்தீவிரமான மெலிந்த வடிவமைப்பு மற்றும் அடுத்த தலைமுறைக்கான இணைப்பு அம்சங்களை கொண்டு வரும் என்பதை காட்சிப்படுத்தியது.

சாதாரண டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றும் வல்லமை.?

சாதாரண டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றும் வல்லமை.?

அதாவது அமேசான் ஃபயர் ஸ்டிக் மற்றும் கூகுள் க்ரோம்கேஸ்ட் போன்றே தரநிலை எச்டிஎம்ஐ தொலைக்காட்சிகளோடு இணைக்கப்படும் திறனை கொண்டிற்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. அதாவது, ஜியோ டிடிஎச் சேவையானது ஒரு சாதாரண டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றும் வல்லமை கொண்டிருக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது.

செட் டாப் பாக்ஸ் புரளிகள்

செட் டாப் பாக்ஸ் புரளிகள்

எல்லாவற்றிக்கும் மேலாக ஜியோ டிடிஎச் செட் டாப் பாக்ஸ் ஆனது ஜியோ ஸ்டோர் மற்றும் கூகிள் ப்ளே ஸ்டோர் மூலம் ஒருங்கிணைக்கப்படும் என்றும் யூகிக்கப்பட்டது. உடன் செட் டாப் பாக்ஸ்-ல் பதிவிறக்கம் செய்யப்பட்ட உள்ளடக்கத்தை சேமிக்க 16ஜிபி அளவிலான இயல்புநிலை மெமரி கொள்ளளவும், 2டிபி அளவிலான எக்ஸ்டெர்னல் ஹார்டு ட்ரைவ் கொள்ளவும் கொண்டிருக்குமென லீக்ஸ் தகவல்கள் தெரிவித்தன.

அப்படி ஒரு திட்டமே ஜியோவிற்கு கிடையாது.!

அப்படி ஒரு திட்டமே ஜியோவிற்கு கிடையாது.!

இந்த அனைத்து யூகங்களுக்கும் மற்றும் லீக்ஸ் தகவல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்படி, ரிலையன்ஸ் ஜியோ ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின் ஜியோ எந்தவிதமான டிடிஎச் சேவை சார்ந்த பணிகளிலும் ஈடுபடவில்லை, அப்படி ஒரு திட்டமே ஜியோவிற்கு கிடையாது என்று கூறியுள்ளது. ஜியோவின் இந்த அறிவிப்பானது இதுநாள் வரை வெளியான லீக்ஸ் தகவல்கள் மற்றும் புகைப்படங்களை மட்டுமின்றி, மலிவு விலையின்கீழ் ஜியோ டிடிச் சேவை கிடைக்குமென்று காத்திருந்த ஜியோவாசிகளின் கனவுகளையும் தவிடு பொடியாக்கியுள்ளது.

ரிமோட் கூட கசிந்தது.!

ரிமோட் கூட கசிந்தது.!

முன்னர் வெளியானதொரு ஆன்லைன் கசிவில், ஜியோ டிடிஎச் செட் டாப் பாக்ஸின் ரிமோட் கண்ட்ரோல் வெளியானது தான் இந்த ஏமாற்று வேலையின் மிகப்பெரிய ஹை-லைட் ஆகும். ரிலையன்ஸ் ஜியோவிடம் இருந்து எந்தவொரு நம்பகத்தன்மையான உறுதிப்படுத்தலும் இல்லாத காலத்தில் வெளியானது அந்த ரிமோட் ஆனது கூகுள் க்ரோம்கேஸ்ட் ரிமோட்டை ஒத்திருந்தது.

How to check PF Balance in online (TAMIL)
ஜீரணிக்கவே முடியாத பொய்.!

ஜீரணிக்கவே முடியாத பொய்.!

ஜியோபோனில் காணப்படும் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் ஜியோவின் ஹலோ ஜியோவைப் பயன்படுத்தி குரல் கட்டளைகளை ஆதரிக்கும் மைக்ரோபோன் ஒன்றும் டிடிஎச் செட் டாப் பாக்ஸில் ஒருங்கிணைக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது ஜீரணிக்கவே முடியாத பொய்யாகி போனதில், வேதனை.

Best Mobiles in India

English summary
No.! Reliance Jio DTH isn’t in plans. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X