Home
News

இதுக்கு தானே காத்திருந்தோம்.. சுங்கச்சாவடியில் வந்தது புதிய தொழில்நுட்பம்.. இனி சிரமம் இருக்காது.. இதோ விவரம்!

இப்போது நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்காமல், உடனுக்குடன் சுங்கக் கட்டணத்தைச் செலுத்த ஃபாஸ்டேக் (FASTag) பெரிதும் பயன்படுகிறது. முன்பு சுங்கச்சாவடிகளை நாம் கடந்து செல்லும்போது வானத்தை நிறுத்தி பணமாகச் செலுத்தி மீதமுள்ள தொகை வாங்கி செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசைகளில் வாகனங்கள் காத்திருக்க வேண்டி நிலைமையும் உண்டானது.

அதுவும் வார இறுதி நாட்கள் மற்றும் முக்கியமான பண்டிகை நாட்களில் சுங்கச்சாவடிகளிலேயே பல மணி நேரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அதன்பிறகு ஃபாஸ்டேக் நடைமுறைக்கு வந்த பிறகு இது முற்றிலுமாக மாறிவிட்டது. சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய அனைத்து வாகனங்களில் ஃபாஸ்டேக் ஒட்டப்பட்டு இருந்து.

சுங்கச்சாவடியில் வந்தது புதிய தொழில்நுட்பம்.. இனி சிரமம் இருக்காது..

குறிப்பாக ஃபாஸ்டேக் வாகன உரிமையாளரின் வங்கி கணக்கோடு தொடர்பு படுத்தப்பட்டிருக்கும். அதுவும் சுங்கச்சாவடி கடந்து செல்லும்போது தானாகவே ஃபாஸ்டேக் ஸ்கேன் செய்யப்பட்டு சுங்க கட்டணம் வங்கி கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும். இந்த ஃபாஸ்டேக் வசதி வந்தது முதல் இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பது பெருமளவு குறைந்து இருக்கிறது.

இந்நிலையில் சுங்கச்சாவடியில் (Toll Plaza) மீண்டும் ஒரு தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது குஜராத் மாநிலத்தில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் போதே, சுங்கச்சாவடியில் தானாகவே கட்டணம் வசூலிக்கும் தொழில்நுட்பம் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முன்பு கூறியபடி, கட்டணத்தை ஃபாஸ்டேக் முறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வாகனத்தின் கண்ணாடியில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் மூலம் வங்கிக்கணக்கிலிருந்து நேரடியாகச் செலுத்த முடியும். இந்த நடைமுறையில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக, குஜராத் மாநிலத்தில் உள்ள சோர்யாசி சுங்கச்சாவடியில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் போதே, சுங்கச்சாவடியில் தானாகவே கட்டணம் வசூலிக்கும் தொழில்நுட்பம் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த புதிய முறையில், சென்சார்கள், கேமராக்கள் மூலம் வாகனத்தைக் கண்டறிந்து தானாகவே கட்டணம் வசூலிக்கப்படும். குஜராத்தில் உள்ள NH-48 நெடுஞ்சாலையில் இந்திய முதல் தடையற்ற சுங்கச்சாவடி முறை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த முதல் தடையற்ற சுங்கக் கட்டண முறை அறிமுகப்படுத்துவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார். இந்த புதிய முறையில் வாகனங்கள் சுங்கச்சாவடிகளை நிறுத்தாமல் கடந்த செல்ல அனுமதிக்கிறது. நாட்டின் நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை டிஜிட்டல்மயமாக்குவதில் இந்த நடவடிக்கை ஒரு முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

சுங்கச்சாவடியில் வந்தது புதிய தொழில்நுட்பம்.. இனி சிரமம் இருக்காது..

குறிப்பாக இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல், பயண நேரத்தைக் குறைத்தல், எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்துதல் மற்றும் வாகனப் புகையைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது திறமையான, வெளிப்படையான மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் முயற்சியைப் பிரதிபலிக்கிறது என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

அதேபோல் இந்த புதிய தொழில்நுட்பம் நாடு முழுவதும் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஃபாஸ்டேக் விதிகளில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதைத் தொடர்ந்து இந்த புதிய தொழில்நுட்ப வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

photo credits: cartoq

Best Mobiles in India

English summary
No queues, no barriers: New toll system launched on NH-48 in Gujarat
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X