Home
News

நான் தான் இருக்கேன்ல.. NO விலை உயர்வு.. மாசம் ரூ.159 க்கு ஆட்டத்தை முடித்த அம்பானி.. 336 நாட்கள் வேலிடிட்டி!

ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய 2 நிறுவனங்களுமே தத்தம் பிரதான திட்டங்கள் மீது - ரீசார்ஜ் கட்டண விலை உயர்வை அறிவித்துள்ள நிலையில் "அடுத்தது அம்பானியின் ஜியோ தான்" என்கிற சந்தேகம் எழுந்துள்ள நிலையில்.. ஜியோ நிறுவனமானது எந்த விலை உயர்வையும் அறிவிக்காமல், தொடர்ந்து அதன் பேஸிக் ரீசார்ஜ்களை அதே விலையில் வழங்கி வருகிறது.

அதாவது டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் உடன் வரும் பேஸிக் ப்ரீபெய்ட் திட்டங்கள், ப்ரீடம் பிளான் மற்றும் வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் என எந்த பிளான்களின் விலையும் அதிகரிக்கவில்லை. குறிப்பாக மாதாந்திரம் ரூ.159 என்கிற செலவில் 336 நாட்களுக்கு வேலிடிட்டியை வழங்கும் திட்டம், அதே விலையில் தான் கிடைக்கிறது.

மாசம் ரூ.159 க்கு ஆட்டத்தை முடித்த அம்பானி.. 336 நாட்கள் வேலிடிட்டி!

அது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.1748 ப்ரீபெய்ட் திட்டம் ஆகும். இது 336 நாட்கள் செல்லுபடியாகும்; அதாவது 11 மாதங்களுக்கு மேல் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. நன்மைகளை பொறுத்தவரை இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் மொத்தம் 3600 எஸ்எம்எஸ்களை வழங்கும்.

கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இது ஜியோடிவி மற்றும் ஜியோஏஐகிளவுட் ஆகியவைகளுக்கான அணுகல்களை வழங்கும். இந்த திட்டத்தின் தினசரி செலவு சுமார் ரூ.5.20 ஆகும். இது நீண்ட கால திட்டங்களை தேடும் பயனர்களுக்கும், மலிவான விலைக்கு நீண்ட நாட்களுக்கு சிம் கார்ட்டை ஆக்டிவ் ஆக வைத்துக்கொள்ள விரும்பும் பயனர்களுக்கும் - ஒரு சூப்பர் ஆப்ஷன் ஆகும்.

ஒருவேளை நீங்கள் இன்னும் மலிவான விலைக்கு 3 மாத கால சர்வீஸ் வேலிடிட்டியை வழங்கும் வாய்ஸ் ஒன்லி திட்டத்தை தேடினால் ஜியோவின் ரூ.448 திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். இது 84 நாட்கள் செல்லுபடியாகும். இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 1000 எஸ்எம்எஸ்கள், ஜியோடிவி மற்றும் ஜியோஏஐகிளவுடுக்கான அணுகல்களை வழங்கும், இந்த திட்டத்தின் தினசரி செலவு சுமார் ரூ.5.33 ஆகும்.

ஒருவேளை உங்களுக்கு 28 நாட்களுக்கு டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கும் பேஸிக் பிளான் வேண்டுமா? இருக்கவே இருக்கு ஜியோவின் ரூ.189 திட்டம். இது அன்லிமிடெட் வாய்ஸ், 300 எஸ்எம்எஸ் மற்றும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது, கூடவே ஜியோடிவி மற்றும் ஜியோஏஐகிளவுடுக்கான அணுகலையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் தினசரி செலவு ஒரு நாளைக்கு சுமார் ரூ.6.75 ஆகும்.

இதே போன்ற நன்மைகள் தினசரி அடிப்படையில் 84 நாட்களுக்கு வேண்டுமா? அப்போது ஜியோ ரூ.799 திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். இது அன்லிமிடெட் வாய்ஸ், டெய்லி 100 எஸ்எம்எஸ் மற்றும் டெய்லி 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது, கூடவே ஜியோடிவி மற்றும் ஜியோஏஐகிளவுடுக்கான அணுகலையும் வழங்குகிறது.

கடைசியாக ஜியோ ஃப்ரீடம் திட்டம் உள்ளது. இது ரூ.355 க்கு 30 நாட்கள் செல்லுபடியாகும். இது அன்லிமிடெட் வாய்ஸ், டெய்லி 100 எஸ்எம்எஸ் மற்றும் மொத்தம் 25 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. முக்கிய நன்மைகளுக்கு அப்பால், இந்த திட்டம் ஜியோவின் சிறப்பு சலுகை திட்டத்தின் கீழ் வருகிறது, இது கூடுதல் டிஜிட்டல் சலுகைகளை வழங்குகிறது:

1. புதிய பயனர்களுக்கு ஜியோஹோம் 2 மாத இலவச சோதனை
2. ஜியோஹாட்ஸ்டார் மொபைல் / டிவி சந்தா (3 மாதங்களுக்கு)
3. இலவச 50 ஜிபி ஜியோஏஐகிளவுட் ஸ்டோரேஜ்
4. ரூ.35,100 மதிப்புள்ள இலவச 18 மாத கூகுள் ஜெமினி ப்ரோ சந்தா ( இதை தொடர்ந்து பெற சலுகை காலம் முழுவதும் பயனர்கள் ரூ.349 அல்லது அதற்கு மேற்பட்ட விலையில் வரும் அன்லிமிடெட் 5ஜி திட்டத்தில் இருக்க வேண்டும்)

Best Mobiles in India

English summary
No Price Hike in Jio Still Offering Affordable prepaid Plans Including Rs 189 Rs 355 Rs 1748 and more
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X