"அதுக்கு வாய்ப்பேயில்ல"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா?
டிக்டாக் தடையை எதிர்த்து நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக வெளியான தகவலுக்கு நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. டிக்டாக் செயலிக்கு இந்தியாவின் நிலை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை
டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்து அறிவித்தது. இந்த தடையை எதிர்த்து நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக வெளியான தகவலுக்கு நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று வெளியான தகவல்
இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று வெளியான தகவலை டிக்டாக் மறுத்துள்ளது. மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எந்த திட்டமும் இல்லை என்பதை டிக்டாக் உறுதிப்படுத்தியுள்ளது.

பைட் டான்ஸூக்கு சொந்தமான டிக்டாக்
சீனாவின் பைட் டான்ஸூக்கு சொந்தமான வீடியோ பதிவேற்றம் தளமான டிக்டாக், இந்த செயலியை இந்தியாவில் மீண்டும் ஓபன் செய்வது குறித்து அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணுகலை தடுக்க நடவடிக்கை
இந்தியாவில் 59 சீன செயலிகள் தடைசெய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த பயன்பாடுகள் அனைத்தையும் அணுகுவதைத் தடுக்குமாறு இணைய சேவை வழங்குநர்கள் (ஐ.எஸ்.பி) மற்றும் டெல்காம் நிறுவனங்களை வலியுறுத்தப்பட்டனர்.

சட்ட நடவடிக்கை தொடர்பான தகவலுக்கு மறுப்பு
இந்திய அரசாங்கத்தின் தடை தொடர்பாக டிக்டாக் சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக பத்திரிகைகளில் அறிக்கைகள் வெளியாகின. ஆனால் அத்தகைய நடவடிக்கையைத் தொடர எங்களுக்கு எந்த திட்டமும் இல்லை என டிக்டாக் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பு
59 செயலிகள் தடை குறித்து இந்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், தரவு பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் மற்றும் 130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாத்தல் குறித்து கடுமையான கவலைகள் உள்ளன. இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்பும் அச்சுறுத்தலாக இருப்பதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முற்றிலும் தடை
இதையடுத்து டிக்டாக் செயலி இந்தியாவில் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு இணங்க, டிக்டாக் நிறுவனம் முன்கூட்டியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. டிக்டாக் செயலி ஓபனாகவில்லை என சிலர் வருத்தம் தெரிவித்தாலும் முன்னதாக டிக்டாக் தரப்பில் இருந்து ஒரு அறிக்கையும் அனுப்பப்பட்டது.

இந்திய தலைமை அதிகாரி
முன்னதாக டிக்டாக் இந்திய தலைமை அதிகாரி நிகில் காந்தி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் மத்திய அரசின் உத்தரவுக்கு தங்கள் நிறுவனம் கீழ்படிந்து நடக்கும் எனவும், பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் தொடர்ந்து ரகசியத்தை காக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதோடு தங்களது பயனர்களின் எந்த ஒரு சிறு விவரங்களையும் சீன உள்ளிட்ட வெளிநாட்டு அரசுகளுக்கு பகிர்ந்துக் கொண்டது கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்
லடாக் எல்லையில் சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின சீன தரப்பில் உயரிழப்பு எண்ணிக்கை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அணு ஆயுத பலம் கொண்ட இந்திய சீன ராணுவம் இடையே ஏற்படும் மோதல் போக்கு சர்வதேச நாடுகளிடையே பேசு பொருளாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
source: gadgets.ndtv.com


Click it and Unblock the Notifications