ஜூன் 30 முதல் பழைய காகித நோட்டுகள் செல்லாதா? பிளாஸ்டிக் நோட்டுகள் வருகிறதா? இந்திய அரசு போட்டுடைத்த உண்மை!
இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் பழைய காகித நோட்டுகளுக்கு (Paper Currency Notes) பதிலாக பிளாஸ்டிக் நோட்டுகள் (Plastic Currency Notes) வர இருப்பதாக கூறப்பட்ட நிலையில் ஜூன் 30ஆம் தேதி முதல் காகித நோட்டுக்கள் திரும்பப் பெறப்படும் என்று வெளியாகிவரும் தகவல்களுக்கு இந்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ரூ.500 நோட்டுக்கள் மற்றும் ரூ.1,000 நோட்டுக்குள் மதிப்பிழப்பு செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டன. இதனால், மதிப்பிழப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பெரும் கவனம் பெறுகின்றன. இந்த நேரத்தில் காகிதத்தில் அச்சிடப்பட்ட நோட்டுகள் கிழிந்து போவதை தவிர்க்க ஆர்பிஐ பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், ஆர்பிஐ இதை உறுதி செய்யவில்லை. ஆகவே, இதைத்தொடர்ந்து, ஜூன் 30ஆம் முதல் புழக்கத்தில் இருக்கும் பழைய காகித நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என்றும் அந்த நோட்டுகளுக்கு பதிலாக புதியாக பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவலும் வெளியாகி இருக்கின்றன. இதனால், பழைய காகித நோட்டுக்கள் செல்லாதா என்னும் கேள்வி எழுந்தது.
இதுதொடர்பான வீடியோ ஒன்றும் சமூக ஊடக பக்கங்களில் பரவலாக உலா வந்தது. இதில் பிரதமர் மோடி பேசுவதை போலவும் ஆடியோ இடம்பெற்றிருந்தது. ஆனால், இதுபோன்று நடக்க வாய்ப்பில்லை என்று பலருக்கு தெரியும். இருப்பினும், தவறான தகவல் பரவுவதால், ஆர்பிஐ இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளது. இது முற்றிலும் பொய்யான தகவல் என்பதை உறுதி செய்துள்ளது.
அதாவது, பழைய காகித நோட்டுகளுக்கு திரும்பப் பெறுதல் அல்லது அதற்கு மாற்றாக பிளாஸ்டிக் நோட்டுகள் கொண்டுவருவதல் ஆகியவை குறித்த திட்டங்கள் கூட கிடையாது என்று விளக்கம் கொடுத்துள்ளது. இதை பிஐபி (PIB) உறுதி செய்துள்ளது. ஆகவே, இந்த காகித நோட்டுகள் திரும்பப்பெறுதல் தொடர்பான செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
இதுபோன்று பணம் தொடர்பான செய்திகள் வரும்போது, ஆர்பிஐ (https://www.rbi.org.in/) அல்லது பிஐபி (PIB) என்று அழைக்கப்படும் செய்தித் தகவல் அலுவலகம் (Press Information Bureau) ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ இணைய தளம் அல்லது எக்ஸ் தளத்துக்கு (@PIBFactCheck) சென்று உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். இதில் பிஐபி பேக்ட் செக் தளத்தில் பொய்யான செய்திகள் வெளிச்சம்போட்டு காட்டப்படும்.
ஆகவே, பிஐபி பேக்ட் செக்கின் எக்ஸ் தளத்துக்கு சென்று பார்த்தாலே போதும், உண்மையாள விவரங்கள் தெரியவரும். ஆகவே, பழைய காகித நோட்டுக்களை வைத்திருந்தால், எந்த கவலையும் இல்லாமல், அதை வழக்கம்போல பயன்படுத்தலாம். அந்த நோட்டுக்கள் கிழிந்து இருந்தாலும் அதற்கு மாற்ற காகித நோட்டுக்கள் மட்டுமே கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது.
பிளாஸ்டிக் நோட்டுக்களை பொறுத்தவரையில், பாலிமர் கரன்சி (Polymer Currency) என்று அழைக்கப்படுகிறது. இந்த நோட்டுகளை அச்சடிக்க பாலிமர் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படும். இது காகித நோட்டுக்களை போலல்லாமல், ஈரமாகது, எளிதில் எரியாது, நீடித்துக்கு உழைக்கக் கூடியதாக இருக்கும். ஆகவே, ஆண்டுக்கணக்கில் பயன்படுத்தி கொள்ளவும் முடியும்.
இது சில நாடுகளில் புழக்கத்தில் இருக்கிறது. ஆகவே, இந்தியாவிலும் ரூ.10 மற்றும் ரூ.20 நோட்டுக்களை சோதனை முயற்சியில் பாலிமர் நோட்டுக்களாக அச்சடிக்கலாமா என்று ஆர்பிஐ பரிசீலனை செய்து வருவதாக சொல்லப்பட்டது. இந்த பரிசீலனையை கூட ஆர்பிஐ உறுதி செய்யவில்லை. இந்த நேரத்திலேயே இதுபோன்ற பொய்யான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


Click it and Unblock the Notifications