Home
News

தனியாரிடம் விற்கப்படுமா BSNL?- மத்திய அரசு முக்கிய பதில்

தொலைதொடா்பு துறையின் வளா்ச்சியில் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் முக்கிய பங்காற்றியது. இந்த நிறுவனத்துக்கு சுமாா் 12 கோடி வாடிக்கையாளா்கள் உள்ளனா். இதில் சுமாா் ஒரு லட்சத்து 53 ஆயிரம் பணியாளா்கள் பணியாற்றினர்.

தொடர்ந்து நஷ்டத்தில் BSNL

தொடர்ந்து நஷ்டத்தில் BSNL

பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அறிமுகத்தின் காரணமாக பிஎஸ்என்எல் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக 4ஜி அலைக்கற்றை பொருத்த வரையில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு உடனடியாக அனுமதி கிடைத்தது.

அனுமதி கிடைப்பதில் தாமதம்

அனுமதி கிடைப்பதில் தாமதம்

ஆனால் பிஎஸ்என்எல்-க்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே பிஎஸ்என்எல் தனியார் நிறுவனங்களோடு போட்டிப் போட முடியவில்லை. இதையடுத்து அனைத்து தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை பெருக்கிக் கொண்டனர்.

பொருளாதார சிக்கலில் பிஎஸ்என்எல்

பொருளாதார சிக்கலில் பிஎஸ்என்எல்

இந்த நிலையில் மத்திய அரசு தனது பங்குகளை விலக்கிக்கொள்ளவதாக அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றே கூறலாம். இதன் காரணமாக பிஎஸ்என்எல் பொருளாதார சிக்கலில் மாட்டியது. இதை ஈடுகட்டும் விதமாக பிஎஸ்என்எல் விருப்ப ஓய்வு திட்டத்தை அறிமுகம் செய்தது.

78 ஆயிரத்து 569 பணியாளா்கள் ஓய்வு

78 ஆயிரத்து 569 பணியாளா்கள் ஓய்வு

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக 4 ஜி சேவைக்கு அனுமதி விரைந்து வழங்குவதோடு, நிதி ஒதுக்கப்படும் எனவும் அரசு அறிவித்தது. பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த கட்டாய ஓய்வு திட்டத்தில் நாடு முழுவதும் 78 ஆயிரத்து 569 பணியாளா்கள் ஓய்வு பெற்றனா்.

போதிய பணியாளா்கள் இல்லாத நிலை

போதிய பணியாளா்கள் இல்லாத நிலை

இந்த விருப்ப ஓய்வு காரணமாக பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையங்களிலும் போதிய பணியாளா்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வாடிக்கையாளா்களுக்கு நிறைவான சேவையை அளிக்க முடியாமல் அந்நிறுவனம் திணறி வருகிறது.

திரிணமூல் காங்கிரஸ் எம்பி

திரிணமூல் காங்கிரஸ் எம்பி

இது குறித்து நாடாளுமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்பி கேள்வி எழுப்பினார். அதில் பிஎஸ்என்எல் தனியார் வசம் விற்கப்படுமா என்ற கேள்வியை முன்வைத்தார். இந்த கேள்விக்கு தொலைத்தொடர்பு துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே பதிலளித்தார். அதில், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிலவிவரும் நிதி நிலைமையை அரசு தீவிரமான நடவடிக்கை எடுத்து தீர்த்து வருகிறது.

தனியாருக்கு விற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை

தனியாருக்கு விற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை

எனவே, நிறுவனத்தைத் தனியாருக்கு விற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என ஆணித்தரமாக தெரிவித்தார். அதேபோல் பிஎஸ்என்எல்க்கு 4ஜி அலைக்கற்று ஒதுக்கீடு விரைந்து அளிக்கவேண்டும் என அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையில் இருப்பதை எதிர்கட்சிகள் குறிப்பிட்டு பேசினர்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

புதிய தொலைத் தொடர்பு கொள்கையின்படி தங்களது வருவாயில் ஒரு பகுதியை மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். இந்த நிலையில் வருவாய் குறைத்து காட்டியது தொடர்பான வழக்கில் ரூ. 1 லட்சத்து 33 ஆயிரம் கோடி கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 92 ஆயிரத்து 641 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

பிஎஸ்என்எல் நிலுவைத் தொகை

பிஎஸ்என்எல் நிலுவைத் தொகை

அரசின் பொதுத் துறை நிறுவனங்களான பாரத் சஞ்சாா் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ரூ.4,989.4 கோடியும், மகாநகா் டெலிபோன் நிகம் லிமிடெட்(எம்டிஎன்எல்) ரூ.3,122.8 கோடியும் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், இந்த நிறுவனங்கள் தங்கள் நிலுவைத்தொகையை செலுத்தவில்லை.

விலை ஏற்ற முடிவு

விலை ஏற்ற முடிவு

பிஎஸ்என்எல் மட்டுமின்றி வோடபோன் மிகப் பெரிய சிக்கலில் தவித்து வருகிறது. இதையடுத்து வோடாபோன் ஐடியா நிறுவனம் தொலை தொடர்புத் துறைக்கு சமீபத்தில் எழுதிய கடிதத்தில், வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 1 ஜிபி டேட்டாவிற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ 35 ஆக இருக்க வேண்டும், குறைந்தபட்ச மாதாந்திர இணைப்பு கட்டணம் ரூ 50 ஆக இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளது. அவுட்கோயிங் அழைப்புகளின் குறைந்தபட்ச விலையை நிமிடத்திற்கு 6 பைசா என நிர்ணயம் உள்ள விரும்புவதாகவும் தெரிவித்தது.

மலிவு விலையில் பிஎஸ்என்எல்

மலிவு விலையில் பிஎஸ்என்எல்

இருப்பினும் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் பிஎஸ்என்எல் மலிவு விலையில் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வந்தாலும். தற்போது ஊழியர்கள் இன்மை காரணத்தால் பிஎஸ்என்எல் தனது சேவையை வாடிக்கையாளர்களுக்கு முழுவதுமாக வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
No plan to sell or make BSNL privatisation says modi government
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X