ரூ.12 ஆயிரத்துக்கு குறைவான சீன ஸ்மார்ட்போன்களுக்கு தடையா? மத்திய அமைச்சர் விளக்கம்.!

|

இந்தியாவில் சீன நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக சியோமி, விவோ, ஒப்போ போன்ற சில நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தான் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

 5ஜி போன்

5ஜி போன்

குறிப்பாக இந்நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை கூட அறிமுகம் செய்கின்றன. இந்நிலையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்து, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ரூ.12,000-க்கு குறைவான ஸ்மார்ட்போன்களை தடை செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.

பூமியை விட ஆழமான கடல்கள்..2 சூரியனுடன் NASA கண்டுபிடித்த சூப்பர் எர்த்.! மனிதன் வாழ முடியுமா?பூமியை விட ஆழமான கடல்கள்..2 சூரியனுடன் NASA கண்டுபிடித்த சூப்பர் எர்த்.! மனிதன் வாழ முடியுமா?

 ராஜீவ் சந்திரசேகர்

ராஜீவ் சந்திரசேகர்

ஆனால் இந்த செய்தி உண்மை அல்ல என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்ட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மறுத்துள்ளார். அதாவது இந்தியாவுடன் பல்வேறு விதமாக சீனா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.

அறிமுகமானது எலிஸ்டா ஸ்மார்ட் எல்இடி டிவி: பெசல்லெஸ் வடிவமைப்பு, வெப்ஓஸ் ஆதரவு- அம்சம்தான் ப்ரீமியம் விலையல்ல!அறிமுகமானது எலிஸ்டா ஸ்மார்ட் எல்இடி டிவி: பெசல்லெஸ் வடிவமைப்பு, வெப்ஓஸ் ஆதரவு- அம்சம்தான் ப்ரீமியம் விலையல்ல!

லடாக்

லடாக்

குறிப்பாக லடாக் எல்லையில் சீனா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. லடாக் எல்லையில் சீனா திடீரென்று ஆக்கிரமிப்பை தொடங்கியதால் இந்தியா-சீனா வீரர்கள் மோதிக்கொண்டு இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதை தொடர்ந்து இந்தியாவும் எல்லையில் ஆயிரக்கணக்கில்
வீரர்களை குவித்துவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வீட்டையே வாங்கிருவோமே- இந்தியாவில் ரூ.75,00,000 மதிப்புள்ள எல்ஜி ரோலபிள் டிவி: அப்படி என்ன ஸ்பெஷல்?ஒரு வீட்டையே வாங்கிருவோமே- இந்தியாவில் ரூ.75,00,000 மதிப்புள்ள எல்ஜி ரோலபிள் டிவி: அப்படி என்ன ஸ்பெஷல்?

சீனாவுக்கு பதிலடி

சீனாவுக்கு பதிலடி

லடாக் எல்லை பிரச்சனையில், சீனாவுக்கு பதிலடி தரும் விதமாக சீன நிறுவனங்களை கட்டுப்படுத்தும் வகையில் டிக் டாக், வீ சாட் போன்ற பல செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதுதவிர ஹூவாய்,zte போன்ற நிறுவனங்களுக்கு 5ஜி தொழில்நுட்ப சாதனங்களை வழங்கவும்மத்திய அரசு அனுமதி மறுத்தது.

உலக ஹேக்கிங் ரேங்கிங் பட்டியலில் இந்தியாவிற்கு என்ன இடம்? நம்பமுடியாத அளவு சைபர் குற்றங்கள் பதிவு..உலக ஹேக்கிங் ரேங்கிங் பட்டியலில் இந்தியாவிற்கு என்ன இடம்? நம்பமுடியாத அளவு சைபர் குற்றங்கள் பதிவு..

வரி ஏய்ப்பு

வரி ஏய்ப்பு

அதன்பின்பு சீன ஸ்மார்ட்போன்களின் வர்த்தக பரிவர்த்தனைகளை மத்திய அரசு கண்காணித்தது. அதில் முக்கியமான சீன நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபட்டு பல ஆயிரம் கோடி ரூபாய்களை வரி ஏய்ப்பு செய்வது தெரியவந்தது. எனவே அந்த முக்கியமான நிறுவனங்களுக்கு
அபராதம் விதிக்கப்பட்டது.

Android vs iPhone: ஆண்ட்ராய்டை விட ஐபோன் ஏன் சிறந்தது தெரியுமா? காரணம் தெரிஞ்சு ஐபோன் வாங்குங்க..Android vs iPhone: ஆண்ட்ராய்டை விட ஐபோன் ஏன் சிறந்தது தெரியுமா? காரணம் தெரிஞ்சு ஐபோன் வாங்குங்க..

ரூ.12,000-க்கு குறைவான ஸ்மார்ட்போன்

ரூ.12,000-க்கு குறைவான ஸ்மார்ட்போன்

அதேபோல் சீன செல்போன் நிறுவனங்களுக்கு கடிவாளம் போடும் விதமாகவும் இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாகவும் சீன நாட்டில் இருந்து இறக்குமதி செய்து, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ரூ.12,000-க்கு குறைவான ஸ்மார்ட்போன்களை மத்திய அரசு தடை செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.

மத்திய அரசு

மத்திய அரசு

ஆனால் மத்திய அரசுக்கு ரூ.12,000-க்கு குறைவான ஸ்மார்ட்போன்களை தடை செய்யும் எண்ணம் ஏதும் இல்லை என மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விளக்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், வெளிநாட்டு பிராண்டுகளை இந்திய சந்தையில் இருந்து நீக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. அதேசமயம் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை வெளிப்படை தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும்என்பதே அரசின் இலக்கு என்று கூறியுள்ளார்.

2 புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்த யமஹா! விலையை சொன்னா நம்புவீங்களா?2 புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்த யமஹா! விலையை சொன்னா நம்புவீங்களா?

இந்திய பிராண்டுகளுக்கு சந்தையில்

அதேபோல் இந்திய பிராண்டுகளுக்கு சந்தையில் உரிய இடம் கிடைத்து அவற்றை ஊக்குவிக்க தேவையான நடைவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர். இனிமேல் இந்திய நிறுவனங்களின் போன்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
No plan to ban Chinese phones below Rs 12,000: Minister: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X