Home
News

பேங்க் அக்கவுண்ட்.. 8 புதிய ரூல்ஸ் அமல்.. தலை கீழ் மாறி பணப் பரிவர்த்தனை லிமிட்.. PAN-க்கு என்னென்ன மாறுது?

மத்திய வருமான வரித்துறை ஆனது பான் கார்டு (PAN Card) தொடர்பான விதிமுறைகளில் மிக முக்கிய மாற்றங்களை 2026 ஆம் ஆண்டு புதிய வருமான வரி விதிகளின் கீழ் (Income Tax Rules 2026) கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளின்படி, வங்கி கணக்கு வழியாக செய்யப்படும் சில பணப் பரிவர்த்தனைகளுக்கு இனி பான் கார்டு தேவைப்படாது. அதே நேரத்தில், அதிக மதிப்புள்ள சில குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு வழங்குவது முற்றிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பான் கார்டு தேவையில்லாத 8 முக்கிய பரிவர்த்தனைகள் (PAN Relaxed Transactions):
வங்கி வாடிக்கையாளர்களின் வசதிக்காகவும், டிஜிட்டல் நடைமுறைகளை எளிதாக்கவும் 8 வகையான முக்கிய பரிவர்த்தனைகளுக்கு பான் எண்ணை குறிப்பிடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் சாதாரண சேமிப்பு கணக்கு அல்லது நடப்பு கணக்குகளைத் தொடங்குவதற்கு பான் கார்டு இனி கட்டாயமில்லை.

பேங்க் அக்கவுண்ட்.. 8 புதிய ரூல்ஸ் அமல்.. தலை கீழ் மாறி பரிவர்த்தனை!

வங்கி கணக்குகளுக்கு புதிய ஏடிஎம் அல்லது டெபிட் கார்டுகளைப் பெற விண்ணப்பிக்கும் போது பான் கார்டு தேவையில்லை. குறிப்பிட்ட வரம்புக்குட்பட்ட ரொக்க வைப்புக்கு (Cash Deposits) பான் கார்டு கேட்கப்படாது. வாடிக்கையாளர் கணக்கு புதுப்பித்தலுக்கு ரீ-கேஒய்சி (Re-KYC) போது பான் எண் சமர்ப்பிப்பதில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

போஸ்ட் ஆஃபீஸ் கணக்குகளில் (Post Office Savings) குறிப்பிட்ட அளவிலான சிறிய முதலீடுகள் மற்றும் சேமிப்பு கணக்குகளுக்கு பான் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. சிறிய அளவிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் பான் தேவையில்லை. ஆகவே, வாலெட்டுகள் மற்றும் யுபிஐ போன்ற தளங்களில் சாதாரண வரம்புகளுக்குள் நடக்கும் பணப் பரிமாற்றங்களுக்கு பான் அவசியமில்லை.

நிறுவனங்களின் சிறிய முதலீட்டுத் திட்டங்களுக்கு விலக்கு இருக்கிறது. அதாவது, பெரிய அளவில் அல்லாத சிறு சேமிப்பு பத்திரங்கள் வாங்குவதற்கு பான் விலக்கு ஏற்று கொள்ளப்படுகிறது.
அடிப்படை வங்கி சேவைகள் (Basic Banking), ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் (Jan Dhan accounts) ஆகியவற்றுக்கு பான் எண் கேட்கப்படாது. இது பான் எண் தேவையில்லாத விதிகளாகும்.

பான் கார்டு எவற்றுக்கெல்லாம் முற்றிலும் கட்டாயம்? (PAN Mandatory):
ஆண்டிற்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் ரொக்கப் பணம் எடுத்தல் (Cash Withdrawal Limit) தேவைப்படும். இது ஒரு நிதியாண்டில் வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ் கணக்குகளில் இருந்து ஒட்டுமொத்தமாக (Cumulative) ரூ.10 லட்சத்திற்கு மேல் ரொக்கப் பணம் எடுத்தாலும் பொருந்தும். ஆகவே, பான் கார்டு விவரங்களை குறிப்பிடுவது கட்டாயமாகும்.

இந்த ரூ.10 லட்சம் என்பது ஒரே முறையில் எடுக்கப்படும் பணம் அல்ல. ஒரே நிதியாண்டில் நீங்கள் பலமுறை எடுக்கும் பணத்தின் மொத்த கூட்டுத்தொகையாகும். சொத்து வாங்குதல் மற்றும் விற்றல் (Property Transactions) பரிவர்த்தனைகளில் நிலம், வீடு அல்லது வணிக வளாகங்கள் போன்ற அசையா சொத்துக்களை வாங்கும் போதோ அல்லது விற்கும் போதோ பான் கார்டு விவரங்கள் கட்டாயமாகும்.

ஃபார்ம் 60 (Form 60) நீக்கம் - புதிய ஃபார்ம் 97 (Form 97) அறிமுகம்:
இதுவரை பான் கார்டு இல்லாதவர்கள் பெரிய பரிவர்த்தனைகளின் போது தங்களின் சுய விவரங்களை அறிவிக்க ஃபார்ம் 60 (Form 60) படிவத்தை பயன்படுத்தி வந்தனர். புதிய விதிமுறைகளின்படி, இந்த ஃபார்ம் 60 முழுமையாக ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக ஃபார்ம் 97 (Form 97) என்ற புதிய படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் செய்ய வேண்டியவை என்ன?
உங்களின் வங்கி கணக்கில் பான் கார்டு எண் இணைக்கப்பட்டுள்ளதா (PAN-Bank Linking) என்பதை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக நடப்பு நிதியாண்டில் வணிகத் தேவைகளுக்காகவோ அல்லது சுபநிகழ்ச்சிகளுக்காகவோ அதிக அளவில் ரொக்கப் பணம் எடுக்கத் திட்டமிட்டிருந்தால், வங்கி கணக்குடன் பான் கார்டு இணைக்கப்பட்டிருப்பது அவசியமாகும்.

Best Mobiles in India

English summary
No PAN Card Needed For These 8 Transactions in 2026 Check New Income Tax Rules 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X