Home
News

ரூ.50,000-ஐ மறந்துடுங்க.. புது மினிமம் பேலன்ஸ் ரூல்.. திரும்ப பெற்ற ICICI வங்கி.. இப்போது எவ்வளவு?

பெரும் எதிர்ப்புகளை பெற்றதை தொடர்ந்து, ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) ஆனது மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள தனது வங்கியில் புதிய அக்கவுண்ட் திறப்பவர்களுக்கு குறைந்தபட்ச பேலன்ஸ் (Minimum Balance) ரூ.50,000 இருக்க வேண்டும் என்ற தனது சமீபத்திய விதிமுறையை திரும்ப பெற்றது.

நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் கடன் வழங்குநரான ஐசிஐசிஐ வங்கி ஆனது அதன் குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்பு (MAB) விதிமுறைகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவந்துள்ளது. அதாவது மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களுக்கு ரூ.15,000 ஆகவும், அரை நகர்ப்புறங்களுக்கு ரூ.7,500 ஆகவும், கிராமப்புறங்களுக்கு ரூ.2,500 ஆகவும் திருத்தியுள்ளது.

புது மினிமம் பேலன்ஸ் ரூல்.. திரும்ப பெற்ற ICICI வங்கி!

இதுகுறித்த ஒரு அறிக்கையில், ஆகஸ்ட் 1, 2025 முதல் திறக்கப்பட்ட புதிய சேமிப்பு கணக்குகளுக்கான புதிய மினிமம் பேலன்ஸ் தேவைகளை அறிமுகப்படுத்தினோம். எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த மதிப்புமிக்க கருத்துக்களை தொடர்ந்து, அவர்களின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் சிறப்பாக பிரதிபலிக்கும் வகையில் இந்த தேவைகளை திருத்தியுள்ளோம்" ஐசிஐசிஐ வங்கி கூறியுள்ளது.

கடந்த வார இறுதியில் வெளியிடப்பட்ட முந்தைய அறிவிப்பின்படி, புதிய சேமிப்பு கணக்குகளுக்கான மினிமம் பேலன்ஸ் ஆனது பெருநகர மற்றும் நகர்ப்புற கிளைகளில் ரூ.10,000 லிருந்து ரூ.50,000 ஆகவும், அரை நகர்ப்புற கிளைகளில் ரூ.5,000 லிருந்து ரூ.25,000 ஆகவும், கிராமப்புற கிளைகளில் ரூ.2,000 லிருந்து ரூ.10,000 ஆகவும் கடுமையாக உயர்த்தப்பட்டது.

ஐசிஐசிஐ வங்கியின் எம்ஏபி-ஐ பூர்த்தி செய்யத் தவறிய வாடிக்கையாளர்களிடம் பற்றாக்குறையில் 6% அல்லது ரூ.500, எது குறைவாக இருக்கிறதோ அது வசூலிக்கப்பட்டிருக்கும். இந்த அறிவிப்புக்கு பிறகு, பல வாடிக்கையாளர்கள், ஐசிஐசிஐ வங்கியின் நடவடிக்கையால் குழப்பமடைந்தனர். இது "குறைந்த மதிப்புள்ள" வாடிக்கையாளர்களை "பில்டர்" செய்வதை நோக்கமாக கொண்டுள்ளதாக கடும் விமர்சனம் எழுந்தது; தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளது.

ஐசிஐசிஐ வங்கி வெளியிட்ட அறிக்கையில் ஏடிஎம் கட்டணம் தொடர்பான விவரங்களும் உள்ளன. அதன்படி ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்களில் (ரொக்கமாக பணம் எடுப்பது) 5 பரிவர்த்தனைகளுக்குப் பிறகு ஒரு நிதி பரிவர்த்தனைக்கு ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படும். அனைத்து நிதி அல்லாத பரிவர்த்தனைகளும் இலவசமாகவே இருக்கும்: இதில் நிதி பரிவர்த்தனையில் ரொக்கம் திரும்பப் பெறுதல் அடங்கும்; நிதி அல்லாத பரிவர்த்தனைகளில் பேலன்ஸ் செக்கப், மினி ஸ்டேட்மெண்ட் மற்றும் பின் மாற்றம் ஆகியவை அடங்கும்.

மேலும் ஐசிஐசிஐ வங்கி அல்லாத ஏடிஎம்களுக்கான கட்டணங்களும் விவரிக்கப்பட்டுள்ளது. அதன்படி மும்பை, புது தில்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய ஆறு பெருநகரங்களில், முதல் மூன்று பரிவர்த்தனைகள் இலவசம். இதில் நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் ஆகிய இரண்டும் அடங்கும். அதன் பிறகு, நிதி பரிவர்த்தனைக்கு ரூ.23 மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு ரூ.8.5 வசூலிக்கப்படும்.

மற்ற எல்லா இடங்களிலும், முதல் ஐந்து பரிவர்த்தனைகள் இலவசம், அதன் பிறகு, ஒரு நிதி பரிவர்த்தனைக்கு ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படும் மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு ரூ.8.5 கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஐசிஐசிஐ வங்கி குறிப்பிட்டுள்ளது. அதாவது அனைத்து இடங்களிலும் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக ஐந்து இலவச பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படுகின்றன, ஆறு பெருநகர இடங்களில் மூன்று இலவச பரிவர்த்தனைகள் என்ற வரம்புடன்!

மேலும் ஐசிஐசிஐ வங்கி ஆனது புதிய எம்ஏபி மற்றும் ஷெட்யூல் செய்யப்பட்டுள்ள கட்டணங்கள் ஆனது - சம்பளக் கணக்குகள், மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்), BSBDA / PMJDY கணக்குகள் அல்லது சிறப்பு தேவைகள் உள்ளவர்களுக்கான கணக்குகளுக்கு பொருந்தாது என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும் இந்த விலக்கு - ஜூலை 31, 2025 க்கு முன் திறக்கப்பட்ட சேமிப்பு கணக்குகளுக்கும் பபொருந்தும் என்று ஐசிஐசிஐ கூறியுள்ளது

More from GizBot

Best Mobiles in India

English summary
No Need Rs 50000 MAB New Minimum Balance Rule From ICICI Bank Revised to Normal After Backlash
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X