2026 இல் நோ ஒரிஜினல் கார்டு.. 10 பைசா செலவு இல்லாமல் இ-ஆதார் கார்டு.. டவுன்லோட் செய்வது எப்படி?
2026 வந்து விட்டது, டிஜிட்டல் யுகத்தின் அடுத்த கட்டத்தில் காலடி எடுத்து வைத்து உள்ளோம். ஜெராக்ஸ் காப்பி கிடைத்தாலே விட்டு வைக்காத காலத்தில், ஆதார் (Aadhaar) போன்ற மிகவும் முக்கியமான ஒரிஜினல் ஆவணங்களை கையில் எடுத்து செல்வது எப்போதும் ரிஸ்க் தான்.
ஆகையால் தான் யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது இ-ஆதாரை (e-Aadhaar) வழங்குவதன் மூலம் ஆதாரை இன்னும் எளிமையாக அணுகக்கூடியதாக மாற்றியுள்ளது. தெரியாதவர்களுக்கு, இ-ஆதார் என்பது பாஸ்வேர்ட் மூலம் பாதுகாக்கப்பட்ட உங்களுடைய ஆதார் அட்டையின் மின்னணு நகல் (Electronic copy of Aadhaar) ஆகும்.

சுவாரசியமாக இது 10 பைசா செலவு இல்லாமல் முற்றிலும் இலவசமாக டவுன்லோட் செய்ய கிடைக்கிறது. இ-ஆதார் என்கிற இந்த "டிஜிட்டல் ஆதார்" ஆனது உங்களுடைய உண்மையான ஆதார் அட்டையை போலவே சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் மற்றும் அடையாளம் மற்றும் முகவரிக்கான உடனடி சான்றாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
எனவே நீங்கள் ஒரு புதிய வங்கி கணக்கை திறக்கிறீர்கள் என்றால் அல்லது பயணத்தை முன்பதிவு செய்கிறீர்கள் என்றால் அல்லது அரசாங்க ஆவணங்களை நிரப்புகிறீர்கள் என்றால்.. இ-ஆதார் ஆனது உங்களுடைய உண்மையான ஒரிஜினல் ஆதார் அட்டையை எடுத்து செல்வதில் இருந்து உங்களை தடுக்கிறது. சரி இப்படிப்பட்ட இ-ஆதாரை ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்யும் 2 வழிகள் இதோ:
முதல் வழி - யுஐடிஏஐ வலைத்தளம் வழியாக: முதலில் யுஐடிஏஐ போர்ட்டலுக்கு செல்லவும். இப்போது ஆதார் பதிவிறக்க விருப்பத்தை கிளிக் செய்யவும். அதை தொடர்ந்து உங்கள் ஆதார் எண், பதிவு ஐடி (EID) அல்லது மெய்நிகர் ஐடி (VID) ஐ உள்ளிடவும். செய்து முடிந்ததும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
இப்போது ஒடிபி அனுப்பு என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும். இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஒடிபி அனுப்பப்படும். இறுதியாக, அந்த ஒடிபி ஐ உள்ளிட்டு உங்கள் இ‑ஆதார் பிடிஎப் (e-Aadhaar PDF) ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
இரண்டவது வழி - எம்ஆதார் ஆப் வழியாக: கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) வழியாக எம்ஆதார் ஆப்பை பதிவிறக்கவும். உங்கள் ஆதார் விவரங்களை பயன்படுத்தி லாக்-இன் செய்யவும். டவுன்லோட் ஆதார் என்பதை தேர்ந்தெடுக்கவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒடிபி மூலம் அங்கீகரிக்கவும். பின் உங்கள் இ‑ஆதார் இன் பிடிஎப் நகலை சேமிக்கவும்.
இ‑ஆதார் பிடிஎப் ஐ எவ்வாறு திறப்பது? நீங்கள் டவுன்லோட் செய்யும் இ‑ஆதார் பிடிஎப் ஆனது கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்டதாக இருக்கும். சுவாரசியமாக இந்த கடவுச்சொல் ஆனது ஒரே மாதிரியான வடிவத்தையே கொண்டிருக்கும்: உங்கள் பெயரின் முதல் நான்கு எழுத்துக்கள் (கேப்ஸ் லெட்டரில் ) + பிறந்த ஆண்டு. எடுத்துக்காட்டுக்கு உங்கள் பெயர் முத்துராஜ் மற்றும் உங்கள் பிறந்த ஆண்டு 1990 எனில், உங்களுக்கான கடவுச்சொல் MUTH1990 ஆக இருக்கும்.
ஆதார் தொடர்பான மற்ற முக்கிய அப்டேட்டை பொறுத்தவரை நாடு முழுவதும் ஆதார் சேர்க்கை மற்றும் புதுப்பிப்பு மையங்களை விரிவுபடுத்த இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) திட்டமிட்டுள்ளது. தற்போது வரை 88 முழுமையான ஆதார் மையங்களே ( Full Fledged Aadhaar Centres) உள்ளன. இந்த எண்ணிக்கை, செப்டம்பர் 2026 க்குள் 473 ஆக உயரும் என்று யுஐடிஏஐ தலைமை நிர்வாக அதிகாரி ஆன புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
குறைந்த வசதிகள் காரணமாக ஆதார் சேர்க்கை மற்றும் திருத்தங்களுக்காக பலரும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். புதிய மையங்கள் இந்த சுமையைக் குறைக்கவும், ஆதார் சேவைகளை மேலும் அணுகக்கூடியதாக மாற்றவும், தேவையற்ற பயணங்களை குறைக்கவும் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Click it and Unblock the Notifications








