CIBIL ஸ்கோருக்கு திடீர் மாற்றம்.. Google Pay, PhonePe கதையை முடித்த BHIM UPI ஆப்.. இதை மட்டும் பண்ணிடுங்க!
என்பிசிஐ (NPCI) என்று அழைக்கப்படும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) ஆனது டிரான்ஸ்யூனியன் சிபில் வழியாக பீம் ஆப்பில் (BHIM App) இலவச சிபில் ஸ்கோர் (Free CIBIL Score) விருப்பத்தை கொண்டுவந்துள்ளது.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆனது இந்திய அரசின் கீழ் செயல்படுவதால், யுபிஐ பரிவர்த்தனைகள் மட்டுமல்லாமல், மற்ற டிஜிட்டல் சேவைகளிலும் பீம் ஆப்புக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது. இப்போது, கூகுள் பே, போன்பே, பேடிஎம் ஆப்களில் கிடைத்துவந்த சிபில் ஸ்கோர் விருப்பத்தை பீம் ஆப்பில் கொண்டுவந்துள்ளது.

இதில் இலவமாக சிபில் ஸ்கோரை பார்த்து கொள்ளலாம். இந்த சிபில் ஸ்கோர் விவரங்களானது நேரடியாக டிரான்ஸ்யூனியன் சிபில் (TransUnion CIBIL) வழியாக கொடுக்கப்படுகிறது. ஆகவே, பேங்க் கஸ்டமர்கள் எந்த கூடுதல் செலவும் இல்லாமல், பீம் ஆப் வழியாக சிபில் ஸ்கோரை பார்த்து கொள்ளலாம். பான் கார்டு விவரங்கள் கட்டாயம் தேவைப்படும்.
BHIM ஆப்பில் CIBIL ஸ்கோரை சரிபார்ப்பது எப்படி?
1. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) அல்லது ஆப் ஸ்டோருக்கு (App Store) சென்று பீம் ஆப்பை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். ஏற்கனவே, பீம் ஆப் இருந்தால், அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
2. பீம் ஆப்பை ஓப்பன் அல்லது முதல்முறை பயன்படுத்தும்பட்சத்தில் வழக்கம்போல பேங்குடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள். இப்போது, ஹோம் பேஜ்ஜில் பல்வேறு விருப்பங்கள் தோன்றும்.
3. முதலில் பேமெண்ட்கள் & டிரான்ஸ்பர்கள் (Payments & Transfers), இரண்டாவது பாப்புலர் பில்கள் (Popular Bills), மூன்றாவது ஃபைனான்சில் சர்வீசஸ் (Financial Services) விருப்பங்கள் இருக்கும். இதில் மூன்றாவதாக இருக்கும் ஃபைனான்சில் சர்வீசஸ் விருப்பத்தின் கீழ் ப்ரீ சிபில் ஸ்கோர் (Free CIBIL Score) தோன்றும்.
4. இதை கிளிக் செய்தால், சிபில் ஸ்கோரை தெரிந்து கொள்வதற்கு முன்பாக அதுகுறித்த விளக்கங்கள் இருக்கும். இதை படித்துவிட்டு கீழே இருக்கும் ப்ரொசீடு (Proceed) விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
5. இப்போது, உங்களது மொபைல் நம்பர் மேலே தோற்றும். கீழே பான் கார்டு (PAN Card) விவரங்களை கொடுக்க வேண்டும். இதில் பான் கார்டில் இருக்கும்படி பெயரை கொடுக்க வேண்டும். இதை எல்லாம் கொடுத்துவிட்டு, 2 பாக்ஸ்களை டிக் செய்துவிட்டு, மீண்டும் ப்ரொசீடு கொடுக்க வேண்டும்.
6. இப்போது, உங்களது விவரங்களின் அடிப்படையில் சிபில் ஸ்கோர் விவரங்கள் காண்பிக்கப்படும். இந்த விவரங்களை இலவமாக பார்த்து கொள்ளலாம்.
பிம் ஆப் ஆனது என்பிசிஐ (NPCI) என்று அழைக்கப்படும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் கீழ் செயல்படுகிறது. இது இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பேமெண்ட் சர்வீஸ் பகுதியாகும். ஆகவே, சிபில் ஸ்கோர் விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும்.
கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) மற்றும் பேடிஎம் (Paytm) ஆப்களிலும் சிபில் ஸ்கோர் விவரங்கள் கொடுக்கப்படுகின்றன. இருப்பினும், இந்த மூன்று ஆப்களும் தனியாரிடம் இருப்பதால், இந்திய அரசின் கீழ் செயல்படும் பீம் ஆப்புக்கு பேங்க் கஸ்டமர்களை மாற்ற நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications