இனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை

|

கூகுள் நிறுவனம் அடுத்தடுத்து புதிய அறிமுகத்தையும், முன்னதாகவே உள்ள செயலியில் அடுத்தக்கட்ட நகர்வையும் அறிமுகம் செய்து கொண்டேதான் இருக்கிறது. அதுபோன்ற அறிமுகத்துக்கு கூகுள் நிறுவனம் குழு வாரியாக தங்களது அர்ப்பணிப்பை புரிந்துக் கொண்டே இருக்கின்றனர். இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு மெயில் மூலம் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அது குறித்து பார்க்கலாம்.

புதிய வழிமுறைகள் வழங்கப்படும்

புதிய வழிமுறைகள் வழங்கப்படும்

கூகுள் நிறுவன ஊழியர்களை பூர்த்தி செய்யும் விதமாக இந்த ஆண்டு அமையவில்லை. கடந்த மாதம் பல செயல்களில் கூகுள் நிறுவனம் பெருமையை ஏற்படுத்தியுள்ளது. குவாண்டம் கணினியில் நம்ப முடியாத பல முன்னேற்றங்களை அடைந்திருக்கிறோம். இது அடுத்த ஆண்டு கணக்கீட்டு சிக்கல்களைத் தீர்ப்பதற்கான புதிய வழியை வழங்கும் என்றார்.

டிஜிஐஎஃப் உரையாடல் கூட்டம்

டிஜிஐஎஃப் உரையாடல் கூட்டம்

கூகுள் நிறுவனத்தில் டிஜிஐஎஃப் மூலம் வாரந்தோறும் உரையாடல் கூட்டம் நடைபெறும். இதன்மூலம் ஊழியர்கள் தங்களது அதிகாரிகள் மற்றும் பிற குழுவினர்களிடம் சந்தேகங்களை கேட்டு அறிந்துக் கொள்வார்கள். இந்த சந்தேகத்திற்கு அனைத்து தரப்பினரும் மறுக்காது பதில் அளித்துக் கொண்டே இருந்தனர். ஆனால் இனிமேல் டிஜிஐஎஃப் மூலம் அந்த கூட்டம் நடக்காது என அறிவித்துள்ளார்.

https://tamil.gizbot.com/news/realme-india-ceo-uses-an-iphone-and-here-s-the-evidence-023750.htmlhttps://tamil.gizbot.com/news/realme-india-ceo-uses-an-iphone-and-here-s-the-evidence-023750.html

தகவல்கள் கசியப்படுவதாக குற்றச்சாட்டு

தகவல்கள் கசியப்படுவதாக குற்றச்சாட்டு

டிஜிஐஎஃப் மூலம் நடத்தப்படும் கருத்துபரிமாற்றாம் வெளியில் எளிதாக கசிந்து விடுகிறது. இந்த தகவல் ஊழியர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம் ஆனால் உண்மை. எனவே டிஜிஐஎஃப் கூட்டம் மாதாந்திர கூட்டமாக மாற்றப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

வீடியோக்கள் மூலம் பகிரத்திட்டம்

வீடியோக்கள் மூலம் பகிரத்திட்டம்

பார்வையாளர்கள் படிப்படியாக குறைகின்றனர். ஒரு வாரத்திற்கு முன்பு 80% உடன் ஒப்பிடும்போது, ​​இப்போது நம்மில் 25% மட்டுமே டிஜிஐஎஃப்-ஐ பார்க்கிறோம். இனி நிறுவனம் என்ன செய்கிறது என்பதை ஊழியர்கள் தெரிந்துகொள்ள கூகிள் அதிக வீடியோக்களை ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ளும்.

 ஒவ்வொருமுறையும் புதிய கூகுளை உருவாக்க வேண்டும்

ஒவ்வொருமுறையும் புதிய கூகுளை உருவாக்க வேண்டும்

கூகுள் ஊழியர்கள், பயனர்களுக்கு கடன்பட்டிருக்கிறோம். அனைவரும் சிறந்த கூகுளை ஒவ்வொரு முறையும் உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். நம் பயனர்களே நமது நோக்கம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள கூகுளை உருவாக்குவதற்கு இடைவிடாமல் கவனம் செலுத்த வேண்டும்.

புதிய வழிகளுக்கு முதலீடு செய்ய விருப்பம்

புதிய வழிகளுக்கு முதலீடு செய்ய விருப்பம்

கூகுள் நிறுவனத்தில் புதிய நடவடிக்கைகள் குறித்து நிறுவனம் ஊழியர்களிடம் கண்டிப்பாக கருத்துகள் கேட்கும். எதிர்காலத்தில் ஊழியர்களுடன் தொடர்புகொள்வதற்கான புதிய வழிகளுக்கு கூகுள் முதலீடு செய்ய விரும்புகிறது எனவும் தெரிவித்தார்.


Best Mobiles in India

Read more about:
English summary
No more weekly all-hands meetings in Google

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X