இனி ட்ரூகாலர் செயலிக்கு சுத்தமா வேலை இருக்காது போலயே.! ஏன்னா ட்ராய் செய்த சம்பவம் அப்படி.!

|

ட்ராய் அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் ட்ரூகாலர் செயலி பயன்படுத்தத் தேவையே இல்லாத ஒரு நிலைமையைக் கொண்டுவர உள்ளது ட்ராய் அமைப்பு.

 விரைவில் அறிமுகம்

விரைவில் அறிமுகம்

அதாவது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் போனில் எதிர்முனையில் அழைப்பவர்களின் பெயர்களைத் திரையில் காட்டும் தொழில்நுட்பத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த வசதி கண்டிப்பாகப் பயனுள்ள வகையில் இருக்கும்.

பட்ஜெட் விலையில் ப்ரீமியம் அம்சங்கள்: 108 எம்பி கேமராவுடன் அறிமுகமான Realme 10 Pro 5ஜி! விற்பனை தேதி இதோ.!பட்ஜெட் விலையில் ப்ரீமியம் அம்சங்கள்: 108 எம்பி கேமராவுடன் அறிமுகமான Realme 10 Pro 5ஜி! விற்பனை தேதி இதோ.!

அவசியம் இருக்காது

அவசியம் இருக்காது

குறிப்பாக இந்த புதிய தொழில்நுட்பம் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டால் யார் செல்போனில் நம்மை அழைக்கிறார்கள் என்பதை எளிமையாகத் தெரிந்துகொள்ள முடியும். இதற்கு வேண்டி தனியாக ஆப்ஸ்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இனிமேல் இருக்காது.

5Gக்கு மாற வேண்டிய நேரம் வந்துருச்சு: யோசிக்காம இந்த Realme போன் வாங்கி கெத்து காட்டுங்க.. விலை இதோ!5Gக்கு மாற வேண்டிய நேரம் வந்துருச்சு: யோசிக்காம இந்த Realme போன் வாங்கி கெத்து காட்டுங்க.. விலை இதோ!

புதிய தொழில்நுட்பத்தின் சிறப்பு

இதுதவிர நமது செல்போனுக்கு வரும் தேவையற்ற அழைப்புகள், ஸ்கேம் கால்களையும் எளிமையாக அடையாளம் கண்டு அவற்றைத் தவிர்க்க முடியும் என்பது இந்த புதிய தொழில்நுட்பத்தின் சிறப்பு.

அதிரடி தள்ளுபடி: iPhone 14, 13 மற்றும் 12 மீது ஆப்பிள் டே சேல் தள்ளுபடி.! ஐபோன் வாங்க பெஸ்ட் டைம்.!அதிரடி தள்ளுபடி: iPhone 14, 13 மற்றும் 12 மீது ஆப்பிள் டே சேல் தள்ளுபடி.! ஐபோன் வாங்க பெஸ்ட் டைம்.!

மோசடி?

குறிப்பாக தற்போது ஸ்மார்ட்போன்கள் தான் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. குறிப்பாக தினசரி வேலைகளைக் கூட இந்த ஸ்மார்ட்போன்கள் எளிமையாக்குகிறது என்றே கூறலாம். ஆனாலும் இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைகிறதோ அந்த அளவுக்கு அதைப் பயன்படுத்தி மோசடி செய்யும் செயல்களும் அதிகரித்து வருகின்றன.

பேசாமல்.. 55-இன்ச் TV வாங்கலாம் போலயே! ஆசையை தூண்டும் விலையில் OnePlus-ன் லேட்டஸ்ட் டிவி!பேசாமல்.. 55-இன்ச் TV வாங்கலாம் போலயே! ஆசையை தூண்டும் விலையில் OnePlus-ன் லேட்டஸ்ட் டிவி!

நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது

நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது

அதாவது சில முக்கியமான நேரங்களில் கடன் வேண்டுமா, லோன் வேண்டுமா, வீட்டு மணை தேவைப்படுகிறதா என செல்போனில் தொடர்புகொண்டு தொந்தரவு செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக இது போன்ற அழைப்புகள் அதிக கோபத்தை ஏற்படுத்தும் என்றே கூறலாம்.

300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ட்ரூகாலர்

ட்ரூகாலர்

எனவே இந்த பிரச்சனையை புரிந்து கொண்ட சில தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் எதிர்முனையில் அழைப்பவர்களின் பெயர்களை நமக்குத் தெரியப்படுத்தும் ஆப்ஸ்களை அறிமுகம் செய்தன. அதாவது ட்ரூகாலர், கால் ஆப்,ஷோ காலர் போன்றவை இவற்றில் அடங்கும்.

இந்திய வரலாற்றில் முதல்முறை.. இந்திய வரலாற்றில் முதல்முறை.. "விண்ணில் பாயும் விக்ரம்" உற்று நோக்கும் உலக நாடுகள்- ரெடியா இருங்க!

சிக்கல்கள் இருப்பதாக ஏற்கனவே செய்திகள்

ஆனாலும் இதுபோன்ற ஆப்ஸ்களை பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அதாவது இந்த ஆப்ஸ்கள் தரவுகளின் அடிப்படையில் செயல்படுபவை அல்ல. யார் யாரெல்லாம் இந்த செயலிகளை பயன்படுத்துகிறார்களோ, அவர்களின் தொடர்புகளை மட்டும் பதிவு செய்துவைத்துக் கொள்ளும். அதிலும் இந்த ட்ரூகாலரில் செயலியில் (ஆப்) பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன.

வாவ்.. என்னா மனுஷன்யா! திடீரென ஆட்டோ டிரைவர்களை கொண்டாடும் பெங்களூர் வாசிகள்! ஏன்?வாவ்.. என்னா மனுஷன்யா! திடீரென ஆட்டோ டிரைவர்களை கொண்டாடும் பெங்களூர் வாசிகள்! ஏன்?

 கேஒய்சி அடிப்படையில் செயல்படும்

கேஒய்சி அடிப்படையில் செயல்படும்

மேலும் ஆப்ஸ்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் எதிர்முனையில் யார் அழைக்கிறார்கள் என்பதைக் கண்டறியும் வசதியை ட்ராய் அமைப்பு அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது பயனர்களின் கேஒய்சி (Know your customer) தகவல்களின் அடிப்படையில் இந்த புதிய தொழில்நுட்பம் செயல்படும் என்றும், எதிர்முனையில் யார் அழைக்கிறார்கள் என்பதையும் இது துல்லியமாகக் காட்டிவிடும் என்றும் கூறப்படுகிறது.

ட்ராய் அமைப்பு

மேலும் ட்ராய் அமைப்பு கொண்டுவரும் இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் எளிமையாக ஸ்கேம் கால்களை அடையாளம் காண முடியும். பின்பு இந்த தொழில்நுட்பத்தை அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் நடைமுறைப்படுத்த ட்ராய் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
No more unknown calls: TRAI is soon to introduce KYC-based measures: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X