புதிய விதி.. சேவிங்ஸ் அக்கவுண்ட் மினிமம் பேலன்ஸ் இனி ரூ.50,000.. இல்லனா அபராதம்.. பிரபல வங்கி அறிவிப்பு!
ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) ஆனது எம்ஏபி (MAB) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மினிமம் ஆவரேஜ் பேலன்ஸ் (Minimum Average Balance) தேவைகளை, அதாவது வங்கியின் சேமிப்பு கணக்குகளுக்கான (Savings Account) குறைந்தபட்ச சராசரி இருப்பை பெரிய அளவில் அதிகரித்து உள்ளது.
சத்தமின்றி கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதலே அமலுக்கு வந்து உள்ள மாற்றம் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. ஏனென்றால் இது ஆகஸ்ட் 1 அல்லது அதன் பின்னர் ஐசிஐசிஐ வங்கியின் இணையும் புதிய கஸ்டமர்களுக்கான (New ICICI Bank Customers) மினிமம் பேலன்ஸ் வரம்புகள் ஆகும்.

ஐசிசிஐசி-யின் திருத்தப்பட்ட கட்டமைப்பின் கீழ், பெருநகர மற்றும் நகர்ப்புறங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச சராசரி இருப்பு ரூ.50,000 ஐ பராமரிக்க வேண்டும், இது முந்தைய ரூ.10,000 என்கிற தொகையுடன் ஒப்பிடும் போது மிகப்பெரிய அதிகரிப்பு ஆகும்
இதேபோல அரை நகர்ப்புற கிளை வாடிக்கையாளர்கள் இப்போது சராசரியாக ரூ.25,000 ஐ வைத்திருக்க வேண்டும், இது முன்னதாக இருந்த ரூ.5,000 இல் இருந்து கடுமையாக அதிகரித்துள்ளது. கிராமப்புற கிளைகளுக்கான எம்ஏபி ஆனது ரூ.2,500 இல் இருந்து ரூ.10,000 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்த உயர்வு - பெருநகர, நகர்ப்புற, அரை நகர்ப்புற மற்றும் கிராமப்புற கிளைகளில் உள்ள வாடிக்கையாளர்களை கடுமையாக பாதிக்கிறது. மேலும் இந்த நடவடிக்கையின் வழியாக இந்தியாவில் உள்ள உள்நாட்டு வங்கிகளில் மிக உயர்ந்த எம்ஏபி-ஐ கொண்ட வங்கியாக ஐசிஐசிஐ உருமாறி உள்ளது.
குறைந்தபட்ச சராசரி இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இது பற்றாக்குறையில் 6% அல்லது ரூ.500, இந்த இரண்டில் எது குறைவாக இருக்கிறதோ அதுவாக நிர்ணயிக்கப்படும். முன்னரே குறிப்பிட்டபடி உள்நாட்டு வங்கிகளில், இது மிக உயர்ந்த குறைந்தபட்ச இருப்பு தேவையாகும்.
நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ஆனது கடந்த 2020 ஆம் ஆண்டில் குறைந்தபட்ச இருப்பு விதியை முற்றிலுமாக ரத்து செய்தது என்பதும், அதே நேரத்தில் பெரும்பாலான பிற வங்கிகள் செயல்பாட்டுச் செலவுகளை நிர்வகிக்க குறைந்த அளவிலான வரம்புகலையே - பொதுவாக ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை - பராமரிக்கின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இதுவொருபக்கம் இருக்க ஆக்சிஸ் வங்கி (Axis Bank) மற்றும் யெஸ் வங்கியை (Yes Bank) தொடர்ந்து, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஐசிஐசிஐ வங்கியும் பிஏ-க்கள் (PAs) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பேமண்ட் அக்ரிகேட்டர்களிடம் (Payment Aggregators) யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை (UPI Transactions Charge) வசூலிப்புதாக தெரிகிறது.
எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்? ஐசிஐசிஐ வங்கியில் எஸ்க்ரோ அக்கவுண்ட்டை (Escrow account) பராமரிக்கும் பிஏக்களுக்கு, ஐசிஐசிஐ வங்கி ஆனது ஒரு பரிவர்த்தனைக்கு 2 அபேஸிஸ் பாயிண்ட்களை (Basis Points) வசூலிக்கும், இது அதிகபட்சமாக ரூ.6 இருக்கும். எஸ்க்ரோ அக்கவுண்ட்டை பராமரிக்காத பிஏக்களுக்கு, கட்டணம் 4 பேஸிஸ் பாயிண்ட்களாக இருக்கும், அதாவது ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படலாம்.
இருப்பினும், ஒரு வணிகரின் ஐசிஐசிஐ வங்கி கணக்கில், பிஏக்கள் வழியாக நேரடியாக செலுத்தும் பரிவர்த்தனைகளுக்கு மேற்கண்ட கட்டணங்கள் பொருந்தாது என்றும் கூறப்படுகிறது. யெஸ் பேங்க் மற்றும் ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்ட பிற வங்கிகள், கடந்த 8 முதல் 10 மாதங்களாக யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு, பேமண்ட் அக்ரிகேட்டர்களிடம் ஏற்கனவே கட்டணம் வசூலித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








