நாடு முழுவதிற்கும் இலவச ரோமிங் சேவை - இன்று முதல் அமல்படுத்தியது பிஎஸ்என்எல்

By Meganathan
|

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இன்று முதல் ரோமிங் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதிலும் எவ்வித ரோமிங் கட்டணமும் இன்றி அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

பல் விலக்க டூத்-பேஸ்ட் வேணாம், பிரஷ் மட்டும் போதும்..!

இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு பயனம் செய்யும் வாடிக்கையாளர்கள் இனி கூடுதல் ரீசார்ஜ் அல்லது ரோமிங் கட்டணத்தை குறைக்கும் ரேட் கட்டர் பேக்களை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. "ஒரு தேசம் ஒரு எண்" கனவு திட்டம் நனவாகியுள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைமை மேலாண்மை இயக்குனர் அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்திருக்கிறார்.

உயிரைக் காக்கும் தொழில்நுட்பங்கள்..!

பிஎஸ்என்எல் பயனாளர்களுக்கு நன்மை விளைவிக்கும் இந்த செய்தி மற்ற நெட்வர்க்களை பயன்படுத்துவோருக்கு நன்மையாக இருக்க முடியாது. இங்கு பிஎஸ்என்எல் அல்லாத மற்ற நெட்வர்க் பயன்படுத்துவர்களுக்கு தகுந்த ரோமிங் பேக் கட்டணங்களை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ஏர்செல்

ஏர்செல்

ஏர்செல் நிறுவனம் ரூ.49க்கு ரீசார்ஜ் செய்தால் இலவச இன்கமிங் அழைப்புகளும், அவுட்கோயிங் அழைப்புகள் நிமிடத்திற்கு 60 பைசாவும் வசூலிக்கின்றது. இந்த பேக் வேலிடிட்டி 28 நாட்களாகும்.

ஏர்டெல்

ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனம் ரூ.33 ரீசார்ஜ் செய்தால் இன்கமிங் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 10 பைசாவும், அவுட்கோயிங் லோக்கல் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 80 பைசாவும், எஸ்டிடி அழைப்புகள் நிமிடத்திற்கு 1.15 பைசாவும் வசூலிக்கின்றது. இந்த பேக் வேலிடிட்டி முப்பது நாட்களாகும்.

ஐடியா

ஐடியா

ஐடியா நிறுவனம் ரூ.71 ரீசார்ஜ் செய்தால் ரோமிங் இன் போது இலவச இன்கமிங், அவுட்கோயிங் அழைப்புகள் நிமிடத்திற்கு 80 பைசாவும் எஸ்டிடி அழைப்புகள் 1.15 பைசாவும் வசூலுக்கின்றது.இந்த பேக் வேலிடிட்டி 30 நாட்களாகும்.

எம்டிஎஸ்

எம்டிஎஸ்

எம்டிஸ் நெட்வர்க் ரூ.42க்கு ரீசார்ஜ் செய்தால் 600 ரோமிங் நிமிடங்கள் இலவசமாகவும், 100 நிமிட ரோமிங் அவுட்கோயிங் இலவசமாகவும் வழங்குகின்றது. இதன் வேலிடிட்டி 30 நாட்களாகும்.

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.67 ரீசார்ஜ் செய்தால் மற்ற நிறுவனங்களுக்கு அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்புகளும், அன்லிமிட்டெட் ரோமிங், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் அதிகபட்சம் (100 எஸ்எம்எஸ்) வழங்குகின்றது. இந்த பேக் வேலிடிட்டி 15 நாட்களாகும்.

டாடா டோகோமோ

டாடா டோகோமோ

டாடா டோகோமோவில் ரூ.41க்கு ராசார்ஜ் செய்தால் அனைத்து லோக்கல் அழைப்புகளும் ரூ.1.50 பைசாவும், அனைத்து எஸ்டிடி அழைப்புகளும் 1.50 பைசாவும் கிடைக்கின்றது. இந்த பேக் வேலிடிட்டி 30 நாட்களாகும்.

வோடாஃபோன்

வோடாஃபோன்

வோடாஃபோன் நெட்வர்க் பயன்படுத்துபவர்கள் ரூ.42க்கு ரீசார்ஜ் செய்தால் அனைத்து அவுட்கோயிங் லோக்கல் அழைப்புகளும் நொடிக்கு 1.3 பைசாவும், எஸ்டிடி அழைப்புகளுக்கு நொடிக்கு 1.6 பைசாவிற்கும் மேற்கொள்ள முடியும். இந்த பேக் வேலிடிட்டி ஏழு நாட்களாகும்.

Best Mobiles in India

Read more about:
English summary
State-run BSNL will launch free roaming, starting today, which will allow all its mobile customers across the country to receive incoming calls at no cost.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X