வேலை மாறினாலும் இனி கவலை வேண்டாம்.. PF குறித்து மத்திய அரசின் புதிய அறிவிப்பு இதோ!
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வசதியின் மூலம், நீங்கள் வேலை மாறும் போது, உங்கள் பிஎஃப் (PF) கணக்கும் அதிலுள்ள சேமிப்புத் தொகையும் புதிய நிறுவனத்திற்குத் தானாகவே (Automatic Transfer) மாற்றப்படும். இதற்காக நீங்கள் தனியாக எங்கும் விண்ணப்பிக்கவோ, காத்திருக்கவோ இனி அவசியம் இல்லை.
வேலை மாறும்போது பி.எஃப். (PF) கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்றுவதற்காக இனி தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறையின்படி, ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு வேலை மாறும் ஊழியர்களின் பிஎஃப் கணக்கும், அதிலுள்ள சேமிப்புத் தொகையும் தானாகவே (Automatic Transfer) புதிய நிறுவனத்திற்கு மாற்றப்படும். இதன் மூலம், விண்ணப்பம் அளித்தல், ஒப்புதல் பெறுதல் போன்ற நடைமுறைகள் தவிர்க்கப்பட்டு, பணியாளர்களுக்கு எளிமையான சேவை கிடைக்கும்.

இபிஎஃப்ஓ (EPFO) அமைப்பின் மையப்படுத்தப்பட்ட தரவுத்தளம் (Centralised Platform) முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் பிஎஃப் கணக்கு பரிமாற்றம் வேகமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறும் என அரசு தெரிவித்துள்ளது.
ஆதார்-யுஏஎன் (Aadhaar-UAN) இணைப்பு
இந்த புதிய வசதியின்படி, வேலை மாறும் போது உங்கள் பிஎஃப் (PF) கணக்கு தானாகவே புதிய நிறுவனத்திற்கு மாற்றப்படும். இதற்காகத் தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், இந்த சேவையைப் பெற உங்கள் யுனிவர்சல் கணக்கு எண் (UAN) ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
முன்பு வேலை மாறும்போது, பிஎஃப் (PF) தொகையை புதிய நிறுவனத்திற்கு மாற்றுவதற்குப் பழைய நிறுவனத்திடம் Date of Exit-ஐ புதுப்பிக்கக் கோரிக்கை விடுத்து, இரு நிறுவனங்களின் ஒப்புதலுடன் தனியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது அந்த நடைமுறை நீக்கப்பட்டுள்ளதால், ஆதார்-யுஏஎன் (Aadhaar-UAN) இணைப்பு செய்யப்பட்டிருந்தால், பிஎஃப் கணக்கு மற்றும் தொகை தானாகவே புதிய நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு, அனைத்து சிரமங்களும் தவிர்க்கப்படும்.
குறிப்பாக வேலை மாறினாலும், பிஎஃப் கணக்குகளை ஒருங்கிணைத்து வைத்திருப்பது, எதிர்காலத்தில் பிஎஃப் தொகையை முழுமையாக எடுப்பதற்கும், முன்கூட்டியே பெறுவதற்கும் (Advances) மிகவும் உதவியாக இருக்கும்.
இபிஎஃப்ஓ (EPFO) அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய முறையின்படி, நீங்கள் எத்தனை முறை வேலை மாறினாலும், புதிய நிறுவனத்தில் சேரும் போது உங்கள் யுஏஎன் (UAN) எண்ணை மட்டும் வழங்கினால் போதும். இபிஎஃப்ஒ கொண்டுவந்துள்ள புதிய மையப்படுத்தப்பட்ட தரவுத்தளம் (Centralised Platform) மூலம் இந்த செயல்முறை எளிதாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முறை மூலம் பிஎஃப் (PF) கணக்குகளை நிர்வகிப்பது மிகவும் எளிதாகும். மேலும், கணக்கு பரிமாற்றத்தில் வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதுடன், தேவையற்ற தாமதங்கள் மற்றும் நடைமுறைச் சிக்கல்களும் குறையும். இதனால், பிஎஃப் உறுப்பினர்கள் வேகமான மற்றும் எளிமையான சேவையைப் பெற முடியும்.
அதேபோல் இபிஎஃப்ஓ (EPFO) அமைப்பு விரைவில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதியை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த வசதிகள் மட்டும் வந்தால் பிஎஃப் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications