ஏப்.30 உடன் இந்த 6 Xiaomi, Redmi போன்களும் காலி.. புது போன் வாங்குறது தான் ஒரே வழி.. ஏன்னா?
ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் அதன் தொடர்ச்சியான முறையில் அதன் ஷாவ்மீ, ரெட்மி சீரீஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு, அதன் லேட்டஸ்ட் ஹைப்பர் ஓஎஸ் (HyperOS) அப்டேட்களை வெளியிட்டு வருவது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் சில பழைய மாடல்கள் அப்டேட் சுழற்சியின் முடிவுக்கு வந்துள்ளன
அதாவது குறிப்பிட்ட சில ஷாவ்மீ மற்றும் ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு இனிமேல் ஆண்ட்ராய்டு (Android) அப்டேட்கள் கிடைக்காது; அவைகளில் உள்ள ஹைப்பர் ஓஎஸ் வெர்ஷன்களுக்கு (HyperOS Versions) அப்டேட் கிடைக்காது என்று அர்த்தம். கூடவே செக்யூரிட்டி பேட்ச்களும் (Security Patches) கிடைக்காது. அப்படியாக ஏப்ரல் 2025 (April 2025) நிலவரப்படி, 6 ஷாவ்மீ மற்றும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் அதிகாரப்பூர்வமாக அனைத்து வகையான சாஃப்ட்வேர் ஆதரவையும் இழக்க உள்ளன.

01. ஷாவ்மீ 11ஐ (Xiaomi 11i)
02. ஷாவ்மீ 11 ஹைப்பர்சார்ஜ் (Xiaomi 11i HyperCharge)
03. ரெட்மி கே50 கேமிங் எடிஷன் (Redmi K50 Gaming Edition)
04. ரெட்மி நோட் 11எஸ் (Redmi Note 11S)
05. ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 11 Pro Plus 5G)
06. ரெட்மி நோட் 10ஏ (Redmi Note 10A)
இனிமேல் இந்த 6 ஷாவ்மீ மற்றும் ரெட்மி ஸ்மார்ட்போன்களும் ஹைப்பர்ஓஎஸ் அல்லது ஆண்ட்ராய்டு அப்டேட்களை பெறாது; எதிர்காலங்களில் செக்யூரிட்டி பேட்ச்களை பெறாது. இதனால் குறிப்பிட்ட 6 ஸ்மார்ட்போன்களை உடனடியாக பாதுகாப்பற்றதாக (Insecure) மாற போவதில்லை என்றாலும், காலப்போக்கில் அவைகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக (vulnerable) மாறும்; மேலும் பயனர்கள் தங்களுக்கு பிடித்த ஆப்கள் சரியாக வேலை செய்யாமல் போவதை காணக்கூடும்.
இந்த நடவடிக்கை ஷாவ்மீ நிறுவனத்திற்கு மட்டும் பிரத்தியேகமானது அல்ல. அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் (Android Smartphone) உற்பத்தியாளர்களும், பழைய மாடல்களுக்கான ஓஎஸ் அப்டேட்களை படிப்படியாக நீக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒருவேளை மேற்கண்ட 6 ஸ்மார்ட்போன்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால்.. லேட்டஸ்ட் ஜெனரேஷன் ஸ்மார்ட்போனை வாங்க வேண்டிய யோசனை / திட்டத்தை இப்போதே தொடங்கவும். ஏப்ரல் 2025 இல் என்னென்ன புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன என்கிற லிஸ்ட் (Upcoming New Smartphones in April 2025) இதோ:
01. மோட்டோ எட்ஜ் 60 பியூஷன் (Moto Edge 60 Fusion):
- இந்திய வெளியீட்டு தேதி: ஏப்ரல் 2
- 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே (நான்கு பக்கமும் கர்வ்டு டிசைன்)
- மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட்
- மோட்டோ AI அம்சங்கள்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup)
- 50MP ப்ரைமரி கேமரா + 13MP அல்ட்ராவைடு கேமரா + மேக்ரோ லென்ஸ்
- 68W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5500mAh பேட்டரி
- விலை சுமார் ரூ.25,000 என எதிர்பார்க்கப்படுகிறது
02. ஒப்போ பைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா (OPPO Find X8 Ultra)
- சீனாவில் வெளியீட்டு தேதி: ஏப்ரல் 10
- 2கே ரெசல்யூஷன் உடனான 6.82-இன்ச் AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- குவாட் ரியர் கேமரா செட்டப்
- 50எம்பி 1-இன்ச் சோனி சென்சார்
- 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP டெலிஃபோட்டோ லென்ஸ்
- 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ்
- 50MP அல்ட்ராவைடு லென்ஸ்
- 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்
- 6000mAh பேட்டரி
- விலை சுமார் ரூ.75,000 என எதிர்பார்க்கப்படுகிறது
03. ஐக்யூ இஸட்10 5ஜி (iQOO Z10 5G)
- இந்தியாவில் வெளியீட்டு தேதி: ஏப்ரல் 11
- 7,300mAh பேட்டரி
- 90W பாஸ்ட் சார்ஜி
- 6.67-இன்ச் AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்
- 50 எம்பி பிரைமரி + 2MP இரண்டாம் நிலை லென்ஸ்
- 32எம்பி செல்பீ கேமரா
- விலை சுமார் ரூ.25,000 என எதிர்பார்க்கப்படுகிறது
04. சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge)
- இந்தியாவில் ஏப்ரல் 2025 இல் அறிமுகம் செய்யப்படலாம்
- 6.6-இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்
- 200MP ப்ரைமரி சென்சார் மற்றும் 12MP அல்ட்ராவைடு லென்ஸ்
- 3900mAh பேட்டரி
- விலை ரூ.1,10,000 ஆக இருக்கலாம்
05. விவோ எக்ஸ்200 அல்ட்ரா (Vivo X200 Ultra)
- சீனாவில் ஏப்ரல் 2025 இல் அறிமுகம் செய்யப்படலாம்
- 6.82-இன்ச் AMOLED டிஸ்பிளே
- 200MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ராவைடு லென்ஸ், 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ மற்றும் 50MP ஜூம் லென்ஸ்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட்
- 90W சார்ஜிங் ஆதரவுடன் 6000mAh பேட்டரி
- விலை ரூ.79,990 ஆக இருக்கலாம்
06. விவோ எக்ஸ்200எஸ் (Vivo X200s)
- சீனாவில் ஏப்ரல் 2025 இல் அறிமுகம் செய்யப்படலாம்
- 6.67-இன்ச் LTPS AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 9400+ சிப்செட்
- 50MP ப்ரைமரி, 50MP அல்ட்ராவைடு மற்றும் 64MP டெலிஃபோட்டோ லென்ஸ்
- 6000mAh பேட்டரி
- விலை ரூ.48,990 ஆக இருக்கலாம்
07. ரியல்மி சி75எக்ஸ் (Realme C75x):
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 625 நிட்ஸ் ப்ரைட்னஸ் உடனான 6.67-இன்ச் HD+ டிஸ்பிளே
- மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்ட்ரா சிப்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ரியல்மி UI 6.0
- 24GB ரேம் (8GB பிஸிக்கல் + 16GB விர்ச்சுவல்)
- 50MP டூயல் ரியர் கேமரா செட்டப் & 5MP செல்பீ கேமரா
- 45W பாஸ்ட் சார்ஜிங் உடனான 5600mAh பேட்டரி
- ஐபி68 / ஐபி69 ரேட்டிங்
- SGS இராணுவ-தர சான்றிதழ்
- ஆர்மர்ஷெல்ப்ரொடெக்ஷன்
- விலை ரூ.14,990 ஆக இருக்கலாம்
08. ரியல்மி 14டி (Realme 14T):
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்
- 50MP OmniVision OV50D சென்சார் + 2MP இரண்டாம் நிலை கேமரா
- 16MP Sony IMX480 செல்பீ கேமரா
- 45W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6,000mAh பேட்டரி
- 8GB+128GB மற்றும் 8GB+256GB ஆப்ஷன்கள்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ரியல்மி UI 6.0
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- என்எப்சி
- ஐபி69 ரேட்டிங்
- எடையில் 196 கிராம்
- 7.9 மிமீ ஸ்லிம் டிசைன்
- இதுவும் ரூ.14,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








