UPI க்கு புது சிக்கல்.. மே 10 முதல் பெட்ரோல் பங்கில் Google Pay, PhonePe ஏற்றுக்கொள்ள படாது.. ஏன்? எந்த ஊரில்?
மே 10 ஆம் தேதி முதல் பெட்ரோல் பங்குகளில் யுபிஐ (UPI) மற்றும் டிஜிட்டல் வழியிலான பணம் செலுத்தும் முறை ஏற்றுக்கொள்ளப்படாடது என்கிற தகவல் உண்மைதான். ஆனால் இது இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வரப்போகும் மாற்றம் இல்லை. குறிப்பிட்ட இந்திய நகரம் ஒன்றில் மட்டுமே வரப்போகும் மாற்றமாகும்.
இப்போதைக்கு இது நாக்பூரில் உள்ள பெட்ரோல் பங்குகளில் மட்டுமே (மே 10 ஆம் தேதி முதல்) அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் ஏற்படும் சைபர் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாக்பூரில் உள்ள பெட்ரோல் பம்பு உரிமையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) போன்ற யுபிஐ பேமண்ட்களை ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில், விதர்பா பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியேஷன், அதிகரித்து வரும் சைபர் மோசடி வழக்குகள் காரணமாக, பெட்ரோல் பம்ப் உரிமையாளர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்வதா தெரிவித்து இருந்ததும், இதனால் அவர்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறியதும் இங்கே குறிப்பிடத்தக்கது
மோசடி செய்பவர்கள் பொது மக்களின் பேங்க் கார்ட்டை அல்லது நெட் பேங்கிங் ஹேக் செய்து அதிலிருந்து பணம் செலுத்துகிறார்கள். பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கும்போது, காவல்துறை குறிப்பிட்ட பரிவர்த்தனையை ரத்து செய்கிறது. இதுபோன்ற சைபர் மோசடி காரணமாக, பல பெட்ரோல் பம்ப் உரிமையாளர்களின் அக்கவுண்ட்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
யுபிஐ தொடர்பான மற்ற சமீபத்திய அப்டேட்களை பொருத்தவ்ரு எச்டிஎப்சி வங்கி (HDFC Bank) ஆனது 2025 ஆம் ஆண்டு மே 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகளை அறிவித்துள்ளது. இந்த 2 நாட்களில் எச்டிஎப்சி வங்கியின் யுபிஐ (UPI) சேவை, நெட் பேங்கிங், டெபிட் / கிரெடிட் கார்டு பயன்பாடு, லோன் மற்றும் டீமேட் சேவைகள் உள்ளிட்ட பல முக்கிய சேவைகள் தற்காலிகமாக வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் மே 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஏதேனும் முக்கியமான பரிவர்த்தனையை செய்ய வேண்டி இருந்தால், அதை முன்கூட்டியே செய்யுமாறு எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மே 9 ஆம் தேதி அன்று.. டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை
கிடைக்காது. டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இ-காமர்ஸ் பரிவர்த்தனைகளை செய்வது அதிகாலை 12:30 மணி முதல் அதிகாலை 2:00 மணி வரை செயல்படுத்தப்படாது. அதிகாலை 1:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை எச்டிஎப்சி வங்கியின் கிரெடிட் கார்டு சேவைகள் மற்றும் ஸ்டேட்மென்ட் அம்சங்களும் செயல்படாது.
மே 10 ஆம் தேதி அன்று.. அதிகாலை 2:30 மணி முதல் அதிகாலை 5:30 மணி வரை, பயனர்கள் தங்கள் அக்கவுண்ட் தகவலை அணுகவோ, பணம் செலுத்தவோ அல்லது நிதி பரிமாற்றங்களை தொடங்கவோ முடியாது. இதன்கீழ் யுபிஐ (UPI), ஐஎம்பிஎஸ் (IMPS), என்இஎப்டி (NEFT) மற்றும் ஆர்டிஜிஎஸ் (RTGS) போன்ற முக்கிய கட்டண முறைகளும் அடங்கும். கிரெடிட் கார்டு சேவைகள் ஆனது மே 10 ஆம் தேதி அன்று காலை 5:00 மணி முதல் காலை 7:00 மணி வரை மற்றொரு இடையூறையும் சந்திக்கும். மிகவும் முக்கியமாக மே 10 அன்று அதிகாலை 2:30 மணி முதல் காலை 6:30 மணி வரை யுபிஐ சேவைகளுக்கான 4 மணிநேர செயலிழப்பு நடக்கும்.


Click it and Unblock the Notifications








