Home
News

இனி அந்த தொல்லை இல்லை.. Google-க்கு குட்பை சொன்ன மார்க்.. QR Code போதும்.. WhatsApp யூசர்கள் பெருமூச்சு!

புயல் வேகத்துல போய்கிட்டு இருக்கேன் ஆண்டவா.. குறுக்க மண்ணு லாரி எதுவும் வராம பார்த்துக்க! என்று கூறும் அளவிற்கு, வாட்ஸ்அப் (WhatsApp) தொடர்ச்சியான முறையில் புதிய அப்டேட்களை / அப்கிரேட்களை / அம்சங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. டெலிகிராம் (Telegram) உட்பட மற்ற இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்ஃபார்ம்களால் (Instant Messaging Platforms) தொட முடியாத இடத்தில் இருந்தாலும் கூட வாட்ஸ்அப் நிறுவனம் "ஓவர் கான்ஃபிடென்ஸ் உடம்புக்கு ஆகாது" என்பதை நன்றாக புரிந்து வைத்துள்ளதே இதற்கு காரணமாகும்!

வாட்ஸ்அப்பை பயன்படுத்துபவர்களின் யூசர் எக்ஸ்பீரியன்ஸை எவ்வளவுக்கு எவ்வளவு ஸ்மூத் ஆக, ஸ்ட்ராங் ஆக வைத்து இருக்கிறோமோ அந்த அளவிற்க்கு போட்டி நிறுவனங்களை பற்றி கவலைப்படாமல் இருக்கலாம் என்கிற மைண்ட்-செட்டில் உள்ள வாட்ஸ்அப் நிறுவனம், சில தினங்களுக்கு முன்னர் க்ரூப் கால் (Group Call) மற்றும் வீடியோ கால்களுக்கான (Video Call) 3 புதிய அம்சங்களை அறிமுகம் செய்திருந்தது.

இனி அந்த தொல்லை இல்லை.. QR Code போதும்.. WhatsApp யூசர்கள் பெருமூச்சு!

அதை தொடர்ந்து வாய்ஸ் நோட்களை அப்படியே டெக்ஸ்ட் ஆக மாற்ற அனுமதிக்கும் (Transcribe Voice Notes To Text) புதிய அம்சத்தையும் சோதனை செய்வதாகவும், இது 5 மொழிகளுக்கான ஆதரவுடன் டெஸ்டிங்கில் உள்ளது என்கிற விவரங்கள் வெளியானது. இப்போது போன்களுக்கு இடையேயான சாட் டிரான்ஸ்பர் (Chat transfer between phones) வசதியில் புதிய மாற்றம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.

டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ (WABetaInfo) வழியாக கிடைத்த தகவலின்படி, வாட்ஸ்அப் நிறுவனம் அதன் 2.24.9.19 பீட்டா வெர்ஷன் வழியாக சாட் டிரான்ஸ்பருக்கான புதிய அம்சம் ஒன்றை சோதனை செய்து வருகிறது. இந்த அம்சம் க்யூஆர் கோட்களை பயன்படுத்தி சாட் டேட்டாவை நேரடியாக ஒரு டிவைஸில் இருந்து மற்றொரு டிவைஸிற்கு மாற்ற உதவுகிறது.

அதாவது ஒரு பயனர் புதிய ஸ்மார்ட்போனுக்கு மாறும் போது, ​​பழைய ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப் வழியாக அணுக கிடைக்கும் க்யூஆர் கோட்-ஐ பயன்படுத்தி, அதில் உள்ள அனைத்து சாட் ஹிஸ்டரியையும், டேட்டாக்களையும் புதிய ஸ்மார்ட்போனுக்கு மிகவும் எளிதாக டிரான்ஸ்பர் (Transfer) செய்யலாம்.

இந்த புதிய அம்சத்தின் மூலம் வாட்ஸ்அப்பில் உள்ள சாட்களை டிரான்ஸ்பர் செய்வதற்காக கூகுள் டிரைவ்வை நம்பியிருக்கும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது. அறியாதோர்களுக்கு இது நீண்டகாலமாகவே ஆண்ட்ராய்டு பயனர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களில் ஒன்றாக உள்ளது. இப்போது தான் இதை நிவர்த்தி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு வந்துள்ளது.

இந்த புதிய அம்சம் டிவைஸ்களுக்கு இடையிலான சாட் ஹிஸ்டரியை மாற்றும் செயல்முறையை கணிசமாக எளிதாக்கும், கூடவே கூகுள் டிரைவ்வை பயன்படுத்த வேண்டிய தேவையையும் நீக்குகிறது. முந்தைய (கூகுள் டிரைவ் வழியிலான) அணுகுமுறையுடன் ஒப்பிடும்போது இந்த அம்சம் மிகவும் யூசர் பிரென்டலி ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த செயல்முறை கேட்பதற்கு நேரடியானதாக இருந்தாலும் கூட, இதில் இன்னும் பல படிகள் மற்றும் பாதுகாப்பு செயல்முறைகள் இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

வாட்ஸ்அப்பின் புதிய டிரான்ஸ்க்ரைப் வாய்ஸ் நோட்ஸ் டூ டெக்ஸ்ட் அம்சத்தை பொறுத்தவரை, இது ஆங்கிலம், ரஷ்யன், ஸ்பானிஷ், போர்த்துகீசியம் (பிரேசில்) மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் சோதனை செய்யப்படுகிறது. டெஸ்டிங் ஸ்டேஜை தாண்டிய பின்னர் இந்த அம்சத்தின் கீழ் இன்னும் பல மொழிகள் சேர்க்கப்படலாம்

இப்போதைக்கு இந்த புதிய அம்சம் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) வழியாக அணுக கிடைக்கும் ஆண்ட்ராய்டு 2.24.13.8 வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் (Android Beta Version) காணப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த அம்சம் இன்னமும் டெவெலப்மென்ட் கட்டத்தில் இருப்பதால் பீட்டா டெஸ்டர்களுக்கு (Beta Testers) இது கிடைக்கவில்லை.

இதற்கு முன்பாக வாட்ஸ்அப்பில் அறிமுகமான க்ரூப் கால் மற்றும் வீடியோ கால் அம்சங்களை பொறுத்தவரை, ஆடியோவுடன் ஸ்கிரீன் ஷேரிங் (Video Sharing With Audio), வீடியோ காலில் அதிக பங்கேற்பாளர்களை (More Participants in a Video Call) சேர்க்கும் ஆதரவு மற்றும் ஸ்பீக்கர் ஸ்பாட்லைட் (Speaker Spotlight) போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
No More Google Drive Help Needed to Transfer Chat History Data in WhatsApp New QR Code is Coming
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X