அம்பானி அடாவடி.. Jio சேவையின் பேஸிக் ரீசார்ஜ் நீக்கம்.. இனி டெய்லி 1GB கிடையாது!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம், தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் தொகுப்பில் இருந்து ரூ.249 மதிப்புள்ள திட்டத்தை அமைதியாக (Rs 249 Prepaid Plan) நீக்கி உள்ளது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து, ஜியோ சேவையின் கீழ் டெய்லி 1ஜிபி டேட்டாவுடன் வரும் எந்த பேஸிக் ரீசார்ஜும் (Basic Recharge With 1GB Daily Data) இல்லை என்கிற சூழ்நிலை உருவாகியுள்ளது.
அறியாதோர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டாவை வழங்கிய ஒரே ஒரு ப்ரீபெய்ட் திட்டம் ரூ.249 ரீசார்ஜ் ஆகத்தான் இருந்தது. இனிமேல் இது ரீசார்ஜ் செய்ய கிடைக்காது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து ஜியோ நிறுவனம் 1ஜிபி தினசரி டேட்டாவுடன் வரும் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

இருப்பினும் ஜியோவின் ரூ.249 திட்டத்தை விட மலிவான திட்டங்கள் இன்னமும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. அதாவது ரூ.189, ரூ.198 மற்றும் ரூ.239 ஆகிய திட்டங்கள் இன்னமும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. ஆனால் இந்த திட்டங்கள் ரூ.249 திட்டத்தை விட கணிசமாக குறைவான வேலிடிட்டியை வழங்குகின்றன.
நினைவூட்டும் வண்ணம் ரூ.249 திட்டத்தின் கீழ் பயனர்கள் தினசரி 1 ஜிபி டேட்டாவை பெற்றனர், அதனுடன் இது மொத்தம் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி (28 Days Validity) உடன் வந்தது. இதற்காகத்தான் - குறைந்த வருமானம் கொண்ட மற்றும் "மாதந்தோறும்" பட்ஜெட் நிர்ணயம் செய்யும் ஜியோ பயனர்கள் மத்தியில் ரூ.249 திட்டம் மிகவும் பிரபலமான திட்டமாக உள்ளது.
முன்னதாக, ரூ.249 திட்டம் 1.5 ஜிபி தினசரி டேட்டாவுடன் வந்தது. பின்னர் இந்த திட்டத்தின்டேட்டா நன்மை டெய்லி 1ஜிபி ஆக குறைக்கப்பட்டது. இருப்பினும் கூட ரூ.250 பட்ஜெட்டில், கிட்டத்தட்ட 1 மாதம் செல்லுபடியாவதால், பெரும்பாலான ஜியோ கஸ்டமர்கள் டேட்டா நன்மை குறைக்கப்பட்டதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ரிலையன்ஸ் ஜியோ கஸ்டமர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை ஜியோ நிறுவனம் திடீரென நீக்க என்ன காரணம்? ஜியோவின் நெட்வொர்க்குகளின் மொத்த டேட்டா நுகர்வு கணிசமாக வளர்ந்திருந்தாலும், 5ஜி டேட்டா நுகர்வு தான் அதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
ஜியோ சேவையின் கீழ் உள்ள 4ஜி பயனர்கள் தொடர்ந்து ரூ.249 திட்டத்தை ரீசார்ஜ் செய்வது ஜியோவின் ஒரு பயனருக்கான சராசரி வருவாய் (Average revenue per user - ARPU) வளர்ச்சியைத் தடுத்து இருக்கலாம். அந்த அடிப்படையில் ஜியோ நிறுவனம் இந்த திட்டத்தை நீக்க முடிவு செய்திருக்கலாம்
இந்த நடவடிக்கை, க்யூ2 எப்ஒய்Y25 இல் ஜியோவின் ஏஆர்பியு-வை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் ரூ.249 க்கு அடுத்தபடியாக உள்ள, குறைவான வேலிடிட்டியை வழங்கும் திட்டங்களை பயனர்கள் இனி அடிக்கடி ரீசார்ஜ்களை செய்வார்கள். இல்லையென்றால் இன்னும் அதிக வேலிடிட்டி அல்லது டேட்டா நன்மையை வழங்கும் இல்லை உயர்ந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்வார்கள்.
இதன் விளைவாக ஜியோவின் வருவாயில் உயர்வு இருக்கும். ஆக எப்படி பார்த்தாலும் ஜியோ நிறுவனத்திற்கு அதிக வருவாய் கிடைக்கும். ஜியோ விரைவில் ஐபிஓ (IPO) க்கு, அதாவது இனிஷியல் பப்ளிக் ஆப்ரிங்-க்கு (Initial Public Offering) செல்ல திட்டமிட்டுள்ளதால், இந்நிறுவனம் அதன் ஏஆர்பியு-வை மேலும் மேம்படுத்த விரும்புகிறது. 2026 ஆம் ஆண்டில் ஜியோ பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் என்று ஆய்வாளர்கள் மற்றும் சந்தை நிபுணர்கள் நம்புகின்றனர்.


Click it and Unblock the Notifications








