Home
News

அம்பானியை வெறுப்பேத்திய BSNL.. மாதாந்திரம் ரூ.172 க்கு 11 மாத பிளானை இறக்கிய Jio.. பேக் அடிக்கும் கஸ்டமர்கள்!

தனியார் டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ (Jio), பார்தி ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vi) ஆகிய மூன்றும் கடந்த 2024 செப்டம்பரில் ஒட்டுமொத்தமாக 1 கோடிக்கும் அதிகமான வயர்லெஸ் சந்தாதாரர்களை இழந்துள்ளன. அதே சமயம் அரசங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் கிட்டத்தட்ட 8.5 லட்சம் புதிய பயனர்களை சேர்த்துள்ளது.

இதற்கு என்ன காரணம் என்பதை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய தேவையில்லை என்று நம்புகிறோம். இம்மூன்று தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுமே கடந்த ஜூலை மாதத்தில் தத்தம் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை 10% முதல் 27 சதவீதம் வரை உயர்த்தியதே இதற்கு காரணம். இதன் விளைவாக மிகவும் மலிவான விலைக்கு 1 மாத, 3 மாத மற்றும் 1 ஆண்டு வேலிடிட்டி திட்டங்களை வழங்கும் பிஎஸ்என்எல்-க்கு மக்கள் படையெடுக்க தொடங்கின.

மாதாந்திரம் ரூ.172 க்கு 11 மாத பிளானை இறக்கிய Jio!

ஆனால் உண்மை என்னவென்றால் (விலை உயர்விற்கு பின்னர்) ஜியோவிமும் கூட மிகவும் மலிவான விலைக்கு நீண்ட கால வேலிடிட்டியை வழங்குமொரு திட்டம் உள்ளது. அது மாதாந்திர ரூ.172 என்கிற செலவின் கீழ் 11 மாத கால வேலிடிட்டியை (அதாவது 336 நாட்கள் என்கிற வேலிடிட்டியை) வழங்குகிறது. இந்த திட்டத்தின் விலை என்ன? இதன்கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

என்ன திட்டம்? அது ஜியோவின் திட்டம் ரூ.1899 ஆகும். இந்த திட்டத்தின் கீழ் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகள் 336 நாட்களுக்கும் கிடைக்கும். டேட்டா நன்மையை பொறுத்தவரை இந்த திட்டம் மொத்தம் 24ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்

அதாவது உங்களுக்கோ அல்லது உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கோ அதிக அளவிலான டேட்டா தேவைப்படாது. மாறாக காலிங் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் இருந்தாலே போதும் என்றால்.. ஜியோவின் ரூ.1899 திட்டத்தை கண்களை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்யலாம். ஒருவேளை, 336 நாட்களுக்கு இடையே எங்கெங்கும் அதிகப்படியான டேட்டா தேவை இருந்தால் ரூ.19 (1ஜிபி டேட்டா) முதல் ரூ.139 (12ஜிபி டேட்டா) வரை செல்லும் ஜியோவின் டேட்டா பேக்குகளில் ஏதேனும் ஒன்றை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

ஜியோவின் விலை உயர்வுக்கு பிறகு, பல பயனர்கள் மலிவு விலை திட்டங்களை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு பிஎஸ்என்எல்-ன் பக்கம் சாய்ந்தனர். ஆனால் உள்ளே சென்ற பிறகே அவர்கள் பிஎஸ்என்எல்-ன் நெட்வொர்க் தரத்தின் நிலையை புரிந்துகொண்டனர். இப்போது "விலைக்கு ஏற்ற பொருள் தானே கிடைக்கும்" என்று புலம்பிக்கொன்டே மீண்டும் ஜியோவிற்குள் நுழைந்த வண்ணம் உள்ளனர். அப்படியானோர்களுக்கு ரூ.1899 பெஸ்ட் சாய்ஸ் ஆக இருக்கும்!

சுவாரசியமாக ஜியோவின் ரூ.1899 திட்டமானது வாய்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா போன்ற வழக்கமான நன்மைகளை மட்டுமின்றி, ஓடிடி போன்ற கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது. இதன் கீழ் ஜியோ டிவி, ஜியோ சினிமா ஆகியவைகளுக்கான இலவச அணுகல்கள் கிடைக்கும். கூடவே ஜியோ கிளவுட் சந்தாவும் இலவசமாக கிடைக்கும்.

ஒருவேளை உங்களுக்கு ரூ.1899-ன் கீழ் கிடைக்கும் ஓடிடி நன்மைகள் போதவில்லை என்றால் 10ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் ஜியோவின் ரூ.175 டேட்டா பிளானை ரீசார்ஜ் செய்துகொள்ளவும். இது வழக்கமான டேட்டா பேக்குகளை போல டேட்டாவை நன்மையை மட்டுமின்றி, 10ஜிபி உடன் சேர்த்து 11 ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல்களையும் வழங்குகிறது.

ரூ.175-ன் கீழ் சோனிலைவ், ஜீ5, ஜியோ சினிமா பிரீமியம் (JioCinema Premium), லயன்ஸ்கேட் பிளஸ், டிஸ்கவரி பிளஸ், சன்நெக்ஸ்ட் (SunXNT), கான்ச்சா லங்கா, பிளானட் மராத்தி, சௌபால், ஹொய்சொய் மற்றும் ஜியோ டிவி உள்ளிட்ட ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல்கள் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
No More BSNL Dominance This 11 Month Validity Budget Plan From Jio Will get Back The Users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X