Home
News

ATM கார்டுக்கு டாட்டா.. ஸ்கேன் பண்ணா பணம் போகாது.. பணம் வரும்.. UPI-ஐ வைத்து Jio புதிய ஆட்டம்!

கிராமப்புற மற்றும் ஓரளவு நகர்ப்புற பகுதிகளில் வங்கி சேவைகளை (Bank Services) எளிதாக அணுகும் வகையில், ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி (Jio Payments Bank) ஆனது தனது பிசினஸ் கரஸ்பாண்டன்ட் நெட்வொர்க் (BC - Business Correspondent Network) மூலம் யுபிஐ அடிப்படையிலான பணம் எடுக்கும் சேவைகளை (UPI based cash withdrawal services) அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த வசதியானது வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டுகள் (Debit Cards) அல்லது ஏடிஎம் கார்டுகள் (ATM Cards) தேவையின்றி, ஒரு யுபிஐ க்யூஆர் குறியீட்டை (UPI QR Code) ஸ்கேன் செய்து, தங்களின் யுபிஐ ஆப்கள் (UPI Apps) மூலம் பரிவர்த்தனைக்கு அங்கீகாரம் அளித்து பணம் எடுக்க அனுமதிக்கிறது என்று கூறுகிறது.

ATM கார்டுக்கு டாட்டா.. UPI-ஐ வைத்து Jio புதிய ஆட்டம்!

அறியாதோர்களுக்கு ஜேபிபிஎல் (JPBL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (Jio Payments Bank Ltd) ஆனது, ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட்டின் (Jio Financial Services Ltd) முழு உரிமையுடைய துணை நிறுவனம் ஆகும். இதன் கீழ் புதிதாக அறிமுகம் யுபிஐ அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை சேவை ஆனது அதன் பிசி டச்பாயிண்ட்கள் (BC Touchpoints) மூலம் கிடைக்கும் என்றும் ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் கூறியுள்ளது.

பிசி டச்பாயிண்ட்களில் கார்டு இல்லாத பணப்பரிவர்த்தனைகளை (Cardless cash withdrawals) செயல்படுத்துவதன் மூலம், இந்த முயற்சி டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் (digital payments) நேரடி பண (physical cash) அணுகலுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கிறது. அதே நேரத்தில், முதல் முறையாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பயன்படுத்தும் பயனர்களுக்கு, யுபிஐ பரிவர்த்தனைகளை எக்ஸ்பீரியன்ஸ் செய்ய, உதவியுடன் சேர்த்து பாதுகாப்பான வழியையும் வழங்குகிறது.

வங்கி சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்தவும், ரொக்கத்தை (பணத்தை) சார்ந்திருக்கும் பிரிவினரிடையே யுபிஐ என்கிற ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தின் (Unified Payments Interface) பரவலை ஆழப்படுத்தவும் தனது லாஸ்ட்-மைல் பிசி நெட்வொர்க்கை பயன்படுத்த போவதாகவும் ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் கூறி உள்ளது.

இதுகுறித்த அறிவிப்பில் - இந்த அம்சம், குறிப்பாக கிராமப்புற மற்றும் பகுதி நகர்ப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்கள், ஒரு யுபிஐ க்யூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்து, தங்களின் யுபிஐ ஆப் மூலம் பரிவர்த்தனையை அங்கீகரிப்பதன் மூலம், டெபிட் கார்டுகள் அல்லது பாரம்பரிய ஏடிஎம் உள்கட்டமைப்பை பயன்படுத்த வேண்டிய தேவையை நீக்கி, வசதியாக பணத்தை எடுக்க உதவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் க்யூ3 முடிவுகள்: ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ், 2025-26 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (Q3FY26), தனது ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் ஆண்டுக்கு ஆண்டு (YoY) 8.75% சரிவை சந்தித்து ரூ.268.98 கோடியாக பதிவு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில், இந்நிறுவனம் ரூ.294.78 கோடி லாபம் ஈட்டியிருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், ரிலையன்ஸ் குழும நிறுவனத்தின் (Reliance Group firm) செயல்பாடுகள் மூலமான மொத்த வருவாய், FY25-இன் டிசம்பர் காலாண்டில் ரூ.294.78 கோடியாக இருந்த நிலையில், மதிப்பாய்வுக்குட்பட்ட காலாண்டில் ஆண்டுக்கு ஒரு மடங்கு அதிகரித்து ரூ.900.90 கோடியாக உயர்ந்து உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
No More ATM Card Needed Jio Payments Bank Launched UPI cash withdrawal Feature How it Works
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X