Home
News

WhatsApp-ல் லாங் வாய்ஸ் ஸ்டேட்டஸ் அறிமுகம்! என்ன பயன்? Android மற்றும் iOS இரண்டுக்குமே!

வாட்ஸ்அப் அதன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கான புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அது லாங் வாய்ஸ் ஸ்டேட்டஸ் (Long Voice Status) என்று அழைக்கப்படுகிறது. பெயர் குறிப்பிடுவது போலவே இது நீளமான வாய்ஸ் மெசேஜ்களை ஸ்டேட்டஸ் அப்டேட் ஆக ஷேர்ஸ் செய்ய அனுமதிக்கிறது.

முன்னதாக, வாட்ஸ்அப் பயனர்கள் 30 வினாடிகள் வரையிலான வாய்ஸ் நோட்களை மட்டுமே ஸ்டேஸ்ட் அப்டேட் ஆக்க பகிர முடிந்தது. தற்போது இது மேலும் 30 வினாடிகளுக்கு நீட்டிக்கப்பட்டு, மொத்தம் 1 நிமிடமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட்டஸ் அப்டேட் பக்கத்திற்கு சென்று, மைக்ரோஃபோன் ஐகானை லாங் பிரஸ் செய்வதன் மூலம்.. லாங் வாய்ஸ் ஸ்டேட்டஸை ஷேர் செய்ய முடியும்.

WhatsApp-ல் லாங் வாய்ஸ் ஸ்டேட்டஸ் அறிமுகம்! என்ன பயன்?

முன்னரே குறிப்பிட்டபடி, இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப்பின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷன்கள் (Android and iOS Versions) ஆகிய இரண்டிலுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் வெர்ஷங்களை பெற்ற சில டிவைஸ்களில் லாங் வாய்ஸ் ஸ்டேட்டஸ் ஏற்கனவே அணுக கிடைக்கிறது.

ஒருவேளை, இந்த புதிய அம்சம் இன்னுமும் உங்களுக்கு வரவில்லை என்றால், வாட்ஸ்அப் வழக்கமாக படிப்படியாகவே அப்டேட்களை வெளியிடும் என்பதை இங்கே நினைவூட்ட விரும்புகிறோம். எனவே உங்கள் டிவைஸிற்கு வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் வெர்ஷன் இன்னும் வரவில்லை என்றால், இன்னும் ஓரிரு நாட்கள் காத்திருக்கவும்.

வாட்ஸ்அப்பிற்கு வந்துள்ள புதிய லாங் வாய்ஸ் ஸ்டேட்டஸ் அம்சத்தின் வழியாக, நீண்ட வாய்ஸ் மெசேஜ்களை ஸ்டேட்டஸ் அப்டேட்களாக வைக்க அதை 30-30 வினாடிகளாக பிரிக்க வேண்டிய வேலையை மிச்சப்படுத்தும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இதேபோல வாட்ஸ்அப்பின் ஒட்டுமொத்த பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கு (கடந்த சில வாரங்களில்) பல புதிய அம்சங்கள் அறிமுகமாகி உள்ளன; இன்னும் சில சுவாரசியமான அம்சங்கள் விரைவல் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

நேற்று வாட்ஸ்அப்பில் உள்ள டீஃபால்ட் சாட் வால்பேப்பர் அம்சத்தில் க்ரீன் கலரை தவிர்த்து மேலும் பல கலர் ஆப்ஷன்களை விரைவில் சேர்க்கப்படும் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு ஸ்க்ரீன் ஷாட் வெளியானது இங்கே குறிப்பிடத்தக்கது. ஐஓஎஸ் 24.11.10.70-க்கான லேட்டஸ்ட் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் டீஃபால்ட் சாட் வால்பேப்பரில் மல்டிபிள் கலர் ஆப்ஷன்கள் தேர்வு செய்ய கிடைக்கிறது.

டபுள்யூஏபீட்டாஇன்ஃபோவால் பகிரப்பட்ட ஸ்கிரீன்ஷாட்டின் படி, வாட்ஸ்அப்பில் உள்ள செட்டிங்ஸ் மெனுவின்கீழ் கிடைக்கும் டீஃபால்ட் சாட் தீம் (Default Chat Theme) அம்சத்தின் கீழ், தற்போது மொத்தம் 5 கலர் ஆப்ஷன்கள் அணுக கிடைக்கிறது. டீஃபால்ட் க்ரீன் தீம் உடன் சேர்த்து ப்ளூ, க்ரே, ரெட் மற்றும் பர்பிள் கலர் ஆப்ஷன்கள் அணுக கிடைக்கிறது.

இருப்பினும் தற்போது வரையிலாக புதிய டீஃபால்ட் சாட் தீம் அம்சமானது சோதனை கட்டத்தின்கீழ் மட்டுமே உள்ளது. அதாவது இந்த அம்சத்தை தற்போது எனேபிள் செய்யு முடியாது. ஆனால் கூடிய விரைவில் இது பீட்டா டெஸ்ட்ர்களுக்கு பயன்படுத்த கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஐஓஎஸ்-ஐ தொடர்ந்து ஆண்ட்ராய்டுக்கும் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக வாட்ஸ்அப் ஏஐ ஜெனெரேடட் ப்ரொபைல் போட்டோ ( WhatsApp AI Generated Profile Photo) என்கிற புதிய அம்சம் குறித்த தகவலும் வெளியானது. பெயர் குறிப்பிடுவது போலவே இது வாட்ஸ்அப் செயலிக்கு உள்ளயே ஏஐ ஜெனெரேடட் ப்ரொபைல் போட்டோக்களை உருவாக்கி அதன் பயன்படுத்துவதற்கான விருப்பத்தை வழங்கும்.

இது மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்னொரு பிளாட்பார்ம் ஆன ஃபேஸ்புக்கில் நமக்கு கிடைத்த கிரியேட் அவதார் அம்சத்தை போலவே செயல்பட அதிக வாய்ப்புள்ளது. அதாவது முக அமைப்பு, கண், காது, தலை முடி எப்படி இருக்க வேண்டும் என்கிற பல்வேறு விருப்பங்களின் கீழ் உங்களுடைய ஏஐ புகைப்படத்தை நீங்களே உருவாக்க அனுமதிக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
No More 30 Seconds Splitting Works WhatsApp Introduced 1 Minute Long Voice Status Updates
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X