3 மாதங்களுக்கு வெளி நாட்டவர்களுக்கு மொபைல் சேவை கிடையாது

Posted By: Karthikeyan
3 மாதங்களுக்கு வெளி நாட்டவர்களுக்கு மொபைல் சேவை கிடையாது

இந்தியாவில் சிம் கார்டுகளை வைத்து ஒரு சிலர் தேசத் துரோக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அதனால் தேசத்தின் பாதுகாப்பு, ஒழுங்கு மற்றும் சட்டங்கள் ஆகியவற்றுக்கு குந்தகம் ஏற்படுகிறது.

எனவே இது போன்று சிம் கார்டுகள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக இனி 3 மாதங்களுக்கு இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு சிம் கார்டு இணைப்பு வழங்கக் கூடாது என்று இந்திய அரசு அறிவித்திருக்கிறது.

இதனை தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களிடம் இந்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் இதை உடனடியாகவும் அமல்படுத்த வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து இந்திய தொலைபேசித் துறை, முறையான பாஸ்போர்ட் மற்றும் விசாவில் வந்திருக்கும் வெளிநாட்டு பயணிகளுக்கு உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே முழுமையாக பரிசோதனை செய்தபின் அவர்களுக்கு சிம் கார்டு இணைப்பை வழங்க வேண்டும் தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot