என்னது.. 2.5% வட்டி, நோ மினிமம் பேலன்ஸ், இலவச இன்சூரன்ஸ்-ஆ.. இதுக்கு தான் Paytm-ஐ முடிச்சு விட்டீங்களா?
வருகிற மார்ச் 15 ஆம் தேதியோடு பேடிஎம் (Paytm) நிறுவனத்தின் பெரும்பாலான சேவைகள் முடிவுக்கு வரவுள்ளன. பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் (Paytm Payments Bank) மீது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (RBI) விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளே இதற்கு காரணம்!
இதற்கிடையில் ஏர்டெல் பேமன்ட்ஸ் பேங்க்ஸ் (Airtel Payments Bank) சேவையின் கீழ் கிடைக்கும் நன்மைகள் மற்றும் சலுகைகள் பற்றி வெளியான விவரங்கள், பழைய பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் வாடிக்கையாளர்களை மட்டுமின்றி, மற்ற வங்கிகளில் அக்கவுண்ட் வைத்து இருப்பவர்களை கூட சுண்டி இழுக்கும்படி ஈர்க்கும்படி உள்ளன.

ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் ஆனது ஃபாஸ்டேக்-ஐ (FASTag) வழங்க தகுதியான 32 அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் ஒன்று என்பதும், அந்த பட்டியலில் இருந்து பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் எப்போதோ நீக்கப்பட்டு விட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பேமண்ட்ஸ் பேங்க் துறையில், பார்தி ஏர்டெல் நிறுவனத்தை "தூக்கி விடத்தான்" பேடிஎம் நிறுவனத்தின் "கதையை முடித்து விட்டார்களா?" என்கிற கேள்விகள், யூகங்கள் மேலோங்கினாலும் கூட, அதில் எந்த உண்மையும் இல்லை. பேடிஎம் நிறுவனத்தின் இந்த நிலைக்கு காரணம் - பேடிஎம் நிறுவனம் தான்!

அட பேடிஎம் கிடக்குது.. ஏர்டெல் பேங்க் வழியாக என்னென்ன நன்மைகள் மற்றும் பலன்கள் கிடைக்கும்? ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கியில் அக்கவுண்ட் திறக்க என்னென்ன தகுதிகள் (Eligibilities) வேண்டும்? உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் (Airtel Thanks App) வழியாகவே, ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கியில் ஒரு அக்கவுண்ட்டை உருவாக்குவது எப்படி? இதோ விவரங்கள்:
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியில் அக்கவுண்ட் உருவாக்க என்னென்ன தகுதிகள் வேண்டும்? ஆதார் அட்டை (Aadhaar Card), பான் கார்டு (PAN Card) மற்றும் இணைய அணுகலுடன் கூடிய ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் எந்தவொரு ஏர்டெல் சந்தாதாரரும் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியில் ஒரு அக்கவுண்ட்டை உருவாக்கலாம். ஆதார் அடிப்படையிலான எலக்ட்ரானிக் கேஒய்சியை (KYC) பயன்படுத்தி, பேப்பர்லெஸ் ப்ராசஸ் (Paperless Process) மூலம் சில நிமிடங்களில் ஒரு அக்கவுண்ட்டை உருவாக்கலாம்!

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருந்தால் என்னென்ன நன்மைகள் மற்றும் பலன்கள் கிடைக்கும்? ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியானது ஆண்டுக்கு 2.5% வட்டி விகிதத்தை (Annual interest rate of 2.5%) வழங்குகிறது. மேலும் இது ரூ. 1 லட்சத்திற்கான இலவச தனிநபர் விபத்து காப்பீட்டையும் ( Rs.1 Lakh Free Personal Accident Insurance) வழங்குகிறது.
இதுதவிர்த்து ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்க குறைந்தபட்ச பேலன்ஸ் (Minimum balance requirement) எதுவும் தேவை இல்லை. கூடவே உங்களுக்கு விர்ச்சுவல் டெபிட் கார்டும் (Virtual Debit Card) கிடைக்கும். எல்லாவற்றை விடவும் முக்கியமாக 500,000க்கும் மேற்பட்ட பேங்கிங் பாயிண்ட்ஸ் இருப்பதால், ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி சேவைகளை, எங்கு வேண்டுமானலும் மிகவும் எளிதாக அணுகலாம்!
ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் வழியாக ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க்கில் ஒரு அக்கவுண்ட்டை திறப்பது எப்படி உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பை திறக்கவும். அங்கே பை நியூ சர்வீஸ் (Buy New Service) என்கிற விருப்பத்தின் கீழ் ஓப்பன் பேங்க் அக்கவுண்ட் (Open Bank Account) என்பதை கிளிக் செய்யவும்.
பின்னர் கோரப்படும் பான் கார்டு நம்பர் (PAN Card Number) மற்றும் ஆதார் கார்டு நம்பரை (Aadhaar Card Number) உள்ளிடவும். அதனை தொடர்ந்து கேட்கப்படும் பெயர், பிறந்த தேதி, இமெயில் ஐடி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை கொடுத்து, கடைசியாக தேவையான ஆவணங்களையும் கொடுக்கவும்; அவ்வளவு தான்!


Click it and Unblock the Notifications








