Home
News

ஆதாரில் மொபைல் எண்ணை மாற்ற வேண்டுமா? எத்தனை முறை மாற்றம் செய்யலாம்? பலருக்கும் தெரியாத UIDAI விதி!

இந்தியாவில் ஆதார் கார்டு (Aadhaar Card) இல்லாதவர்களைப் பார்க்க முடியாது. ஒவ்வொரு இந்தியருக்கும் மிகவும் முக்கியமான சான்றாக ஆதார் கார்டு மாறிவிட்டது. அதேபோல் பான் கார்டு, பேங்க் அக்கவுண்ட், டிரைவிங் லைன்சென்ஸ், பாஸ்போர்ட் போன்ற ஒட்டுமொத்த ஆவணங்களும் ஆதாருடன் தொடர்பில் இருக்கின்றன.

அதேபோல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் சேவைகளை பெறுவதற்கு ஆதார் கட்டாயம் தேவைப்படுகிறது. அதேபோல் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணும் பல ஆன்லைன் சேவைகளுக்கு முக்கிய பங்காகிறது. ஆனால் மொபைல் எண் மாற்றம் தொடர்பான விதிகள் குறித்து பலருக்கும் சந்தேகங்கள் எழுகின்றன.

ஆதாரில் மொபைல் எண்ணை மாற்ற வேண்டுமா? எத்தனை முறை மாற்றம் செய்யலாம்?

அதாவது புதிய சிம் வாங்கிய பின்பு அல்லது போன் நம்பர் மாற்றிய பிறகு ஆதாரில் அந்த எண்ணை புதுப்பிக்க அவசியம் ஏற்படுகிறது. எனவே ஆதாரில் எத்தனை முறை மொபைல் எண்ணை மாற்றலாம் என்ற கேள்விக்கு பலருக்கும் தெளிவான பதில் தெரியாது. சிலர் இதற்குக் குறிப்பிட்ட வரம்பு இருப்பதாக நம்புகின்றனர்.

ஆனால் இந்த சந்தேகத்திற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெளிவான விளக்கம் கொடுத்துள்ளது. அதன்படி ஆதார் கார்டு இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். குறிப்பாக இதற்கு எந்தவித அதிகபட்ச வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆகவே புதிய சிம் வாங்கினாலும், சேவை வழங்குநரை (ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எஸ், வோடபோன் ஐடியா) மாற்றினாலும் அல்லது பழைய எண்ணை இழந்தாலும் புதிய எண்ணை ஆதாரில் இணைக்க முடியும்.

மொபைல் எண்ணை மாற்ற விரும்புபவர்கள் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகலாம். அங்கு கைரேகை, கண் கருவிழி சரிபார்ப்பு மூலம் அடையாளம் உறுதி செய்யப்படும். அதன்பின்பு விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டதும், புதுப்பிப்பு கோரிக்கை எண் வழங்கப்படும். இதன் மூலம் விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனில் கண்காணிக்கலாம். அதேபோல் ஆதால் செயலி மூலம் மொபைல் எண்ணை மாற்ற முடியும்.

புதிய ஆதார் செயலியில் மொபைல் நம்பர் மாற்றுவது எப்படி?

வழிமுறை-1. முதலில் உங்கள் போனில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோர் வழியாக ஆதார் செயலியைப் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்.

வழிமுறை-2.அடுத்து உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி உள்நுழைந்து, பின்னர் உங்கள் பயோமெட்ரிக்ஸைச் சரிபார்க்கவும்.

வழிமுறை-3. அடுத்து ஆதார் செயலியின் முகப்பு பக்கத்தில் services என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், உங்கள் மொபைல் எண் புதுப்பிக்க
வேண்டுமா அல்லது முகவரியைப் புதுப்பிக்க வேண்டுமா என்ற ஆப்ஷன் தோன்றும்.

வழிமுறை-4. இப்போது நீங்கள் மொபைல் எண் அப்டேட் செய்ய வேண்டுமென்றால் அதற்கான பழைய நம்பரை உள்ளிட்டு ஒடிபி-ஐ பெற்று புதிய நம்பரை உள்ளிட வேண்டும்.

வழிமுறை-5.ஓடிபி சரிபார்ப்பு முடிந்ததும் முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தி உங்கள் பயோமெட்ரிக்ஸைச் சரிபார்க்கவும். அடுத்து இதற்கான கட்டணமாக ரூ.75 செலுத்த வேண்டும். பிறகு, 15 நாட்களில் உங்கள் மொபைல் எண் அப்டேட் ஆகிவிடும்.

ஆதாரில் மொபைல் எண்ணை மாற்ற வேண்டுமா? எத்தனை முறை மாற்றம் செய்யலாம்?

இன்றைய டிஜிட்டல் உலகில், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மிகவும் முக்கியமானதாக உள்ளது. வங்கி சேவைகள் முதல் அரசு நலத்திட்டங்கள் வரை பல்வேறு ஆன்லைன் சேவைகளை பயன்படுத்துவதற்கு, ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் செயலில் இருப்பது அவசியம்.

எனவே, நீங்கள் பயன்படுத்தி வந்த பழைய மொபைல் எண் செயலிழந்திருந்தாலோ அல்லது புதிய எண்ணுக்கு மாறியிருந்தாலோ, அதை விரைவாக ஆதாரில் புதுப்பித்து விடுவது நல்லது. இதனால் ஓடிபி (OTP) சரிபார்ப்பு, ஆன்லைன் அங்கீகாரம் மற்றும் பிற டிஜிட்டல் சேவைகளை எந்த சிக்கலும் இல்லாமல் தொடர்ந்து பயன்படுத்த முடியும். சிறிய மாற்றமாகத் தோன்றினாலும், இந்த புதுப்பிப்பு எதிர்காலத்தில் பல தேவையற்ற சிரமங்களைத் தவிர்க்க உதவும்.

Best Mobiles in India

English summary
No Limit on Aadhaar Mobile Number Updates? UIDAI Clarifies the Rule
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X