Home
News

புதிய விதி.. ரூ.2000 க்கு மேல் UPI வழியாக பணம் அனுப்பினால் GST செலுத்த வேண்டுமா? அமைச்சர் விளக்கம்!

யுபிஐ (UPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface) பயனர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், நிதி அமைச்சகம் ஆனது யுபிஐ பரிவர்த்தனைகளில் ஜிஎஸ்டி வரி பொருந்தக்கூடிய தன்மை தொடர்பான விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

ரூ.2,000க்கு மேல் உள்ள யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஸ்டி வரி விதிக்கும் திட்டத்தை அரசாங்கம் பரிசீலித்து வருகிறதா என்று மாநிலங்களவை உறுப்பினர் ஆன அனில் குமார் யாதவ் கேள்வி எழுப்பினார். சாமானிய மக்களை கடுமையாக பாதிக்கும் அத்தகைய நடவடிக்கையை அறிமுகப்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களிடமிருந்து அரசாங்கத்திற்கு ஏதேனும் பிரதிநிதித்துவம் கிடைத்ததா என்பதையும் அவர் அறிந்துகொள்ள முயன்றார்.

ரூ.2000 க்கு மேல் UPI வழியாக பணம் அனுப்பினால் GST செலுத்த வேண்டுமா?

இந்த கேள்விக்கு பதிலளித்த நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஆன பங்கஜ் சவுத்ரி, இதுபோன்ற முடிவுகள் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளின் அடிப்படையில் தான் எடுக்கப்படுகின்றன என்றும், அத்தகைய பரிந்துரை எதுவும் வரவில்லை என்றும் அவர் பதிலளித்தார். அதாவது ரூ.2000 க்கு மேல் யுபிஐ பேமண்ட் செய்தால் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்கிற எந்த விதியும் அமலுக்கு வரப்போவதில்லை!

அறியாதோர்களுக்கு - ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் விலக்குகள் ஆனது ஜிஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படுகின்றன, இது மத்திய மற்றும் மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களின் உறுப்பினர்களை கொண்ட ஒரு அரசியலமைப்பு அமைப்பாகும். அப்படியான ஜிஸ்டி கவுன்சிலிடம் இருந்து ரூ.2000 யுபிஎ-க்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து எந்த வார்த்தையும் எழவில்லை

சில்லறை வாடிக்கையாளர்கள் மற்றும் சிறு வணிகங்களிடையே இன்று யுபிஐ மிகவும் விரும்பப்படும் ஆன்லைன் கட்டண முறையாக உள்ளது. இதற்குக் காரணம் - அதன் எளிதான செயல்முறை, விரைவான பரிவர்த்தனைகள் மற்றும் கேஷ்பேக் மற்றும் கூப்பன்கள் போன்ற சலுகைகள் தான். ஆனால் அவ்வப்போது யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படலாம் என்று ஊடக அறிக்கைகள் பரவத் தொடங்குகின்றன. அந்த அறிக்கைகளுக்கு தற்போது முடிவு கட்டப்பட்டுள்ளது.

அப்போது 2024 இல் வெளியான திட்டம் என்ன ஆனது? 2024 ஆம் ஆண்டில், ரூ.2,000 க்கு மேல் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படும் சேவைக் கட்டணத்தில் 18% ஜிஎஸ்டி விதிக்கும் ஒரு திட்டம் விவாதத்திற்கு வந்தது. ஆனால் அது விவாத்ததோடு முடிந்துபோனது. இதுவரை ஜிஎஸ்டி கவுன்சில் அதை பரிந்துரைக்கவில்லை.

தற்போது வரையிலாக, பி2பி (P2P) அல்லது பி2எம் (P2M) யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறதா? அதாவது இரண்டு தனிநபர்களுக்கிடையிலான (Peer-to-Peer அல்லது P2P) அல்லது ஒரு நபருக்கும் ஒரு வணிகருக்கும் இடையிலான (Peer-to-Merchant அல்லது P2M) எந்த வகையான யுபிஐ பரிவர்த்தனைக்கும் தற்போது ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை.

நினைவூட்டும் வண்ணம் கடந்த ஏப்ரல் மாதம், நிதி அமைச்சகம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது, அதில் அரசாங்கம் ரூ.2,000 க்கு மேல் யுபிஐ பரிவர்த்தனைகளின் தொகைக்கு எந்த ஜிஎஸ்டி-யையும் விதிக்க விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்தி இருந்தது. குறிப்பாக - ஒருவரிடமிருந்து வணிகருக்கு செய்யப்படும் கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி இருக்காது என்பதை தெளிவு படுத்தியிருந்தது.

இன்னும் சொல்லப்போனால் கடந்த டிசம்பர் 2019 முதலே, இந்திய அரசாங்கம் ஆனது எம்டிஆர் (MDR) என்று சுருக்கமாக அழைக்கப்படும் வணிகர் தள்ளுபடி விகிதத்தை, அதாவது பரிவர்த்தனை கட்டணத்தை நீக்கி உள்ளது. ஒரு பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லாதபோது, அதற்கு ஜிஎஸ்டி விதிப்பது பற்றிய கேள்வி எழுவதில்லை.

பின் குறிப்பு: நீங்கள் யுபிஐ வழியாக பணம் செலுத்தும் வழக்கத்தை / பழக்கத்தை கொண்டிருந்தால்.. அதை தொடர்ந்து செய்யவும். தற்போது நிலவும் ஜிஎஸ்டி பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஒரு ஆப் அல்லது வங்கியால் ஏதேனும் சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டால் மட்டுமே அதற்கு ஜிஎஸ்டி விதிக்கப்படலாம் - ஆனால் பரிவர்த்தனை தொகைக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது!

More from GizBot

Best Mobiles in India

English summary
No GST on UPI transactions above Rs 2000 Finance Ministry Confirmed All You Need to Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X