வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: இனி ஓடிடி தளங்கள் வெளியீடு இப்படிதான் இருக்கும்- மத்திய அமைச்சர்!

|

அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புதிய விதிகளின் கீழ் புகார்களை தீர்க்கும் சுய ஒழுங்குமுறை அமைப்பில் அரசாங்கத்தால் நியமிக்கப்படும் உறுப்பினர் யாரும் இருக்க மாட்டார்கள் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

பல்வேறு ஓடிடி தளங்கள்

பல்வேறு ஓடிடி தளங்கள்

நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட தளங்களின் பிரதிநிதிகளை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சந்தித்தார். அதன்பின் வெளியான அறிக்கையில் பிரதிநிதிகள் அரசாங்கத்தின் புதிய வழிகாட்டுதல்களை வரவேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓடிடி தளங்கள், டிஜிட்டல் செய்தி ஊடகங்கள்

ஓடிடி தளங்கள், டிஜிட்டல் செய்தி ஊடகங்கள்

ஓடிடி தளங்கள், டிஜிட்டல் செய்தி ஊடகங்களுக்கான புதிய விதிகள் மற்றும் விதிமுறைகள் பிப்ரவரி 25 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது. இதில் உள்ளடக்கத்தை அகற்ற கோரும் திறன் உட்பட பெரும் அதிகாரங்கள் அரசாங்கத்திற்கு வழங்கியதாக விமர்சனங்கள் எழுந்தது.

மத்திய அமைச்சர் ஆலோசனை

மத்திய அமைச்சர் ஆலோசனை

ஓடிடி பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை நடத்தினார். ஓடிடி தளங்கள் அரசிடம் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் ஓடிடி தளங்கள் சுயசார்பு தளமாக விளங்கும் எனவும் அரசு பிரதிநிதியாரும் அதில் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் அமைச்சர் கூறினார்.

மீண்டும் வெடித்த விண்கலன்: வெற்றிகரமான தோல்வியை சந்தித்த எலான் மஸ்க்- வெடித்து சிதறும் வீடியோ!மீண்டும் வெடித்த விண்கலன்: வெற்றிகரமான தோல்வியை சந்தித்த எலான் மஸ்க்- வெடித்து சிதறும் வீடியோ!

சுயசார்புடன் தங்களது உள்ளடக்கம் குறித்து தாங்களே முடிவு செய்யலாம் எனவும் உள்ளடக்கம் சார்ந்த வயது வாரியாக ஐந்து பிரிவுகளாக ஓடிடி தள வெளியீடுகள் இருக்கலாம் என தெரிவித்தார். விதிமுறைகள் அவர்கள் தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் அமைச்சகத்துடன் எந்த பதிவும் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

விதிமுறைக்கான படிவும் விரைவில்

விதிமுறைக்கான படிவும் விரைவில் தயாராக இருக்கும் எனவும் அமைச்சர் அறிக்கையில் குறிப்பிட்டார். விதிகள் தணிக்கைக்கு பதிலாக உள்ளடக்கத்தின் சுய விவரத்தை பொருத்து வகைப்படுத்த கவனம் செலுத்தப்படும் எனவும் இது பயனுள்ள குறைதீர்க்கும் முறையாக இருக்கும் எனவும் கூறினார்.

ஐந்து பிரிவுகளாக வெளியீடு

தளங்களின் வெளியீடுகள் அதன் விவரத்திற்கு ஏற்ப U, U/A 7+, U/A 13+, U/A 16+ மற்றும் A என வகைப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அதேபோல் சுய ஒழுங்குமுறை மட்டத்தில் தீர்க்கப்படாத புகார்களை ஆராய்வதற்கு மத்திய துறைக்கு இடையேயான ஒரு குழு மையம் உருவாக்கப்படும் என பிஐபி அறிக்கை தெரிவித்தது.

Best Mobiles in India

English summary
No Government Appointed Member: Minister Prakash Javadekar Meeting With OTT Representatives

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X