டேட்டா லிமிட்டே கிடையாது.. எவ்ளோ வேணா யூஸ் பண்ணிக்கலாம்.. ரூ.400-க்குள் கிடைக்கும் BSNL-ன் சூப்பர் ரீசார்ஜ்!
வெறும் ரூ.400-க்குள் ட்ரூலி அன்லிமிடெட் டேட்டாவை (Truly Unlimited Data) வழங்கும், அதாவது எந்த விதமான டெய்லி டேட்டா லிமிட்டும் இல்லாத "ஒரு தனித்துவமான" பிஎஸ்என்எல் ரீசார்ஜை (BSNL Recharge) பற்றி உங்களில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்!
அதென்ன திட்டம்? அதன் சரியான விலை நிர்ணயம் என்ன? குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

அதென்ன திட்டம்?
அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் கீழ் பல தனித்துவமான திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன.
அவைகளில் ட்ரூலி அன்லிமிடெட் டேட்டாவை வழங்கும் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) பற்றித்தான் நாம் இங்கே பார்க்க உள்ளோம். அது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ட்ரூலி அன்லிமிடெட்எ ஸ்டிவி 398 ரீசார்ஜ் (Truly Unlimited STV 398) ஆகும்.

Airtel-கிட்டயும் இல்ல.. Jio-கிட்டயும் இல்ல!
பிஎஸ்என்எல்-ன் ரூ.398 ரீசார்ஜ்ஜிற்கு போட்டியாக எந்த திட்டமுமே இல்லை. அதாவது ரூ.398-ஐ போல ட்ரூலி அன்லிமிடெட் டேட்டாவை வழங்கும் ஒரு திட்டம் ரிலையன்ஸ் ஜியோவிடமும் (Jio) இல்லை, ஏர்டெல் (Airtel) நிறுவனத்திடமும் இல்லை.
ஆனால் வோடபோன் ஐடியாவிடம் (Vodafone Idea) உள்ளது. இருப்பினும் அது போஸ்ட்பெயிட் (Postpaid) சேவையின் கீழ் மட்டுமே உள்ளது. நாம் இங்கே ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசுவதால் அதை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாதது. ஒட்டுமொத்தமாக பிஎஸ்என்எல்-ன் ரூ.398 க்கு போட்டியாக வேறு எந்த திட்டமும் இல்லை!

BSNL ரூ.398 ரீசார்ஜ்ஜின் வேலிடிட்டி என்ன?
பிஎஸ்என்எல்-ன் ட்ரூலி அன்லிமிடெட் டேட்டா ரீசார்ஜ்ஜின் வேலிடிட்டி (Validity) மொத்தம் 30 நாட்கள் ஆகும். முன்னரே குறிப்பிட்டபடி, இந்த திட்டத்தின் கீழ் ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair usage policy - FUP) லிமிட் என்று எதுவும் கிடையாது.
ஆக முழுதாக 1 மாதத்திற்கு அல்லது 30 நாட்களுக்கும் உங்களுக்கு ட்ரூலி அன்லிமிடெட் டேட்டா அணுக கிடைக்கும்.

டேட்டா மட்டும் தானா.. வாய்ஸ் கால், எஸ்எம்எஸ்கள் உண்டா?
உண்டு! இந்த திட்டத்தின் கீழ் ட்ரூலி அன்லிமிட்ட் வாய்ஸ் கால் நம்மையும் அணுக கிடைக்கும். அதுமட்டுமின்றி தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களும் அணுக கிடைக்கும்.
டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ்களை தவிர்த்து இந்த திட்டத்தின் கீழ் வேறு எந்த கூடுதல் நன்மைகளும் இல்லை.
ஒருவேளை இந்த திட்டத்தின் கீழ் ஓடிடி (OTT) நன்மைகள் சேர்க்கப்பட்டால், இது ஒட்டுமொத்த இந்தியாவிலும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் பெஸ்ட் ப்ரீபெய்ட் பிளான்களில் (Best Prepaid Plan) ஒன்றாக உருமாறும்!

இந்த திட்டத்தில் இருக்கும் ஒரே ஒரு குறை!
அன்லிமிடெட் டேட்டாவை வழங்கும் திட்டமாக இருந்தாலும் கூட பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் பரந்த அளவிலான 4ஜி நெட்வொர்க் (BSNL 4G) இல்லை. ஆகையால் இந்த திட்டம் நிறைய டேட்டாவை வழங்கினாலும் கூட, அதிக இண்டநெட் ஸ்பீட்-ஐ வழங்காது.
சமீபத்தில் வெளியான அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தான் பிஎஸ்என்எல் 4ஜி அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4G அறிமுகத்திற்கு பின்னர் BSNL நிறுவனம் பாட்ஷாவாக மாறலாம்!
ரூ.398 போன்ற நல்ல திட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் சேரும்போது, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் "ஒரு பயனருக்க்கான சராசரி வருவாய்" (Average revenue per user - ARPU) அதிகரிக்கும். இதன் மூலம் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயும் அதிகரிக்கும்.
இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், ரூ.398 போன்ற திட்டங்கள் 4ஜி அறிமுகத்திற்கு பின்னாலும் நீடிக்கும் பட்சத்தில் இந்திய டெலிகாம் துறையில் பிஎஸ்என்எல் ஒரு கேம் சேஞ்சராக (Game Changer) இருக்கலாம்!


Click it and Unblock the Notifications








