FASTag ஸ்டிக்கர் தொடர்பாக NHAI புது எச்சரிக்கை.. கார், ஜீப், வேன் ஓட்டுனர்கள் இதை செய்யலனா பெரிய சிக்கல்!
என்எச்ஏஐ (NHAI) என்கிற இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India) ஆனது கார், ஜீப், வேன் மற்றும் பஸ் போன்ற வாகன ஓட்டிகளுக்கும், வாகன உரிமையாளர்களுக்கும்.. ஃபாஸ்டேக் (FASTag) தொடர்பான முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் பாரியர்-ஃப்ரீ டோலிங்கை (Barrier-free tolling), அதாவது தடையற்ற சுங்க கட்டண முறையை அறிமுகப்படுத்த போவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ள வேகத்தில் என்எச்ஏஐ-யிடம் இருந்து இந்த எச்சரிக்கை வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. என்ன எச்சரிக்கை? என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது?

என்ன எச்சரிக்கை? ஃபாஸ்டேக் ஒரு மின்னணு சுங்க கட்டண வசூல் முறை (Electronic toll collection system) ஆகும். இது ஆர்எப்ஐடி (RFID) என்கிற ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பத்தை (Radio Frequency Identification Technology) பயன்படுத்தி, சுங்க கட்டணங்களை தானாகவே கழிக்கும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) வழிகாட்டுதல்களின் படி, ஆர்எப்ஐடி ரீடர்கள் எளிதாக ஸ்கேன் செய்வதற்கு ஏதுவாக, ஃபாஸ்டேக்கை வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் பொருத்த வேண்டும். இருப்பினும், சில பயனர்கள் ஃபாஸ்டேக்கை முன்பக்க கண்ணாடியில் ஒட்டாமல், கையில் வைத்திருப்பதை என்எச்ஏஐ கவனித்துள்ளது.
புதிய நெடுஞ்சாலை திட்டங்கள் மற்றும் தடையற்ற சுங்கச்சாவடி அமைப்புகள் செயல்பாட்டில் இருப்பதால், சுங்க கட்டண வசூல் விதிமுறைகள் தொடர்பான அமலாக்கத்தை என்எச்ஏஐ கடுமையாக்கி வருகிறது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் சமீபத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், பயனர்கள் தங்கள் ஃபாஸ்டேக்கை முன்பக்க கண்ணாடியில் சரியாக பொருத்துமாறு என்எச்ஏஐ வலியுறுத்தியுள்ளது. இந்த வழிகாட்டுதலை பின்பற்ற தவறினால், ஃபாஸ்டேக் பிளாக்லிஸ்ட்டில் சேர்க்கப்படலாம் என்றும் என்எச்ஏஐ எச்சரித்துள்ளது.
ஃபாஸ்டேக்கை முன்பக்கக் கண்ணாடியில் பொருத்துவது ஏன் முக்கியம்? ஃபாஸ்டேக்-ஐ முன்பக்க கண்ணாடியில் பொருத்துவது, சுங்கச்சாவடிகளில் தடையற்ற ஸ்கேனிங்கை உறுதி செய்கிறது, மேலும் கையில் வைத்திருக்கும் டேக்குகளால் ஏற்படும் தேவையற்ற தாமதங்களை தவிர்க்கிறது. இது சீரான போக்குவரத்து ஓட்டத்தை பராமரிக்கவும், நெரிசலை குறைக்கவும் உதவுகிறது.
மேலும், விண்ட் ஸ்க்ரீனில் ஒட்டப்படுவதன் மூலம் ஃபாஸ்டேக் ஆனது தவறாக பயன்படுத்தப்படும் அபாயமும் குறைக்கப்படுகிறது. ஏனெனில் ஒரு வாகனத்தின் விண்ட் ஸ்க்ரீனில் சரியாக பொருத்தப்பட்ட ஃபாஸ்டேக்-ஐ பல வாகனங்களில் எளிதாக பயன்படுத்த முடியாது, இதன் மூலம் மோசடி நடைமுறைகள் தடுக்கப்படும் வாய்ப்புகளும் அதிகம்.
ஃபாஸ்டேக் ஒராண்டு பாஸ் மோசடி: விண்ட் ஸ்க்ரீனில் ஃபாஸ்டேக் ஓட்டுவது குறித்த எச்சரிக்கைக்கு முன்பாக, ஃபாஸ்டேக் ஆண்டு பாஸ் சேவைகளை வழங்கும் போலி இணையதளங்கள் குறித்து வாகன ஓட்டிகளை எச்சரித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு பொது ஆலோசனையை வெளியிட்டிருந்தது. அதன்படி மோசடிக்காரர்கள் அதிகாரப்பூர்வ ஃபாஸ்டேக் தளங்களை போலவே தோற்றமளிக்கும் இணையதளங்களை உருவாக்குகின்றனர்.
பயனர்கள் பாதுகாப்பாக இருக்க கீழே உள்ள விஷயங்களை பின்பற்றுமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிந்துரைக்கிறது:
- அதிகாரப்பூர்வ அரசு தளமான ராஜமார்க்கயாத்ரா ஆப் (FASTag Rajmargyatra app) மூலம் மட்டுமே ஃபாஸ்டேக் சேவைகளை அணுகவும்.
- இணையத்தில் தேடும்போது, விளம்பரதாரர்களின் விளம்பரங்கள் அல்லது அறிமுகமில்லாத இணைப்புகளை கிளிக் செய்வதைத் தவிர்க்கவும்.
- எந்தவொரு தனிப்பட்ட அல்லது கட்டண விவரங்களையும் உள்ளிடுவதற்கு முன் இணையதள முகவரிகளை சரிபார்க்கவும்.
- ஒடிபி-கள், கார்டு விவரங்கள் அல்லது லாக்-இன் சான்றுகள் போன்ற முக்கியமான தகவல்களை, யாருடனும், ஒருபோதும் பகிர வேண்டாம்.
- ஒரு இணையதளம் சந்தேகத்திற்குரியதாக தோன்றினால் அல்லது வழக்கத்திற்கு மாறான அனுமதிகளை (Permissions) கேட்டால் உடனடியாக, அதைவிட்டு வெளியேறவும்.


Click it and Unblock the Notifications