அடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை

|

வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் இருந்து விலகி இருக்குமாறு இந்திய ராணுவம், தங்களது அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. அவர்கள் தங்கள் பேஸ்புக் கணக்குகளை செயலிழக்கச் செய்யும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர், மேலும் எந்தவொரு உத்தியோகபூர்வ தகவல்தொடர்புக்கும் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தகவல் திருடும் அபாயம்...

தகவல் திருடும் அபாயம்...

வாட்ஸ் ஆப் மூலம் அனைத்து தகவலும் திருடும் அபாயம் இருப்பதால் எந்த அதிகாரப்பூர்வ தகவலை பகிர வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் வாட்ஸ் ஆப் என்பது ஹேக்கர்களால் எளிதாக தகவல்களை எடுத்து அனைவரிடமும் பகிர முடியும் என்பதால் உத்தியோகப்பூர்வ தகவலை பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

சமூகவலைதள கொள்கையை பின்பற்றும் இந்திய ராணுவம்...

சமூகவலைதள கொள்கையை பின்பற்றும் இந்திய ராணுவம்...

கடந்த 2016 ஆம் ஆண்டு ராணுவ சைபர் குழு சமூகவலைதள போக்குகளை ஆராய்ந்து, வீரர்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் சிக்கல்களை கண்டறிந்தது. அன்றுமுதல் சமூகவலைதளம் குறித்து பல்வேறு கொள்கைகளை பின்பற்றி வருகிறது.

பேஸ்புக் கணக்குகளை செயலிழக்க அறிவுரை.,

பேஸ்புக் கணக்குகளை செயலிழக்க அறிவுரை.,

பேஸ்புக் மூலம் உளவு பார்ப்பதாக பல்வேறு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே அனைத்து அதிகாரிகளும் பேஸ்புக் கணக்குகளை செயலிழக்க செய்ய வேண்டும் எனவும் தங்கள் புகைப்படத்தை சீருடையுடன் இருக்கும்படி இருந்தால் அதை நீக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது. அதேபோல் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களின் குடும்பத்தினர்களும், ராணுவத்தில் இருப்பவர்களை சீருடையுடன் இருக்கும்படியான புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தால் நீக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

சீருடையோடு உள்ள புகைப்படத்தை நீக்கும்படி அறிவுரை

சீருடையோடு உள்ள புகைப்படத்தை நீக்கும்படி அறிவுரை

சமூகவலைதளங்களில் கணக்குகளை உருவாக்கும் போது, ​​ராணுவ வீரர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை விவரங்களை வழங்குவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ராணுவ ஊழியர்கள் அல்லது அவர்களது குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் பதிவிட்ட சமூகவலைதள பதிவுகளையோ அல்லது கருத்துகளையோ பகுப்பாய்வு செய்வதன் மூலம் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் குறித்த தகவல்களைப் பெற முடியும்.

இ-மெயில் கணக்குகளை உத்தியோகத்தில் பயன்படுத்த வேண்டாம்..,

இ-மெயில் கணக்குகளை உத்தியோகத்தில் பயன்படுத்த வேண்டாம்..,

அதேபோல் ராணுவ ஊழியர்கள் தங்கள் இ-மெயில் கணக்குகளை உத்தியோக பயன்பாடுகளுடன் இணைக்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

Source: themobileindian.com

Best Mobiles in India

Read more about:
English summary
No Facebook, WhatsApp For Indian Army Officers, Claims Report

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X