அதுக்கு வாய்ப்பே இல்ல., செப்டம்பர் 15 இறுதி: கெடுபிடி காட்டும் டிரம்ப்!

|

டிக்டாக் தடை செய்வதற்கு விதிக்கப்பட்ட காலக்கெடு நீட்டிக்கப்படாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

டிக்டாக், வீசாட் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை

டிக்டாக், வீசாட் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை

இந்தியாவை அடுத்து அமெரிக்காவில் டிக்டாக், வீசாட் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட உத்தரவை குறித்து பார்க்கலாம்.

அச்சுறுத்தல் காரணமாக டிக்டாக்கிற்கு தடை

அச்சுறுத்தல் காரணமாக டிக்டாக்கிற்கு தடை

அமெரிக்க மக்களின் தனிப்பட்ட விவரங்கள், சொத்து விவரங்கள் போன்றவைகள் செயலி மூலமாக சீன கம்யூனிஸ்ட் கட்சி அறிந்து கொள்ள முடியும். இதுபோன்ற அச்சுறுத்தல் காரணமாக சீன செயலியான டிக்டாக்கிற்கு தடை விதித்துள்ளதாக அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

அமெரிக்க நிறுவனத்திடம் விற்றுவிட்டால் தடை தொடராது

அமெரிக்க நிறுவனத்திடம் விற்றுவிட்டால் தடை தொடராது

அமெரிக்க உத்தரவுபடி டிக்டாக் செயலியை அதன் தாய் நிறுவனமான சீனாவின் பைட்டான்ஸ் 90 நாட்களில் அமெரிக்க நிறுவனத்திடம் விற்றுவிட்டால் தடை தொடராத என்பதாகும். அமெரிக்க நிறுவனத்திடம் விற்காதபட்சத்தில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும்.

எப்போதும்போல் நடந்த ஆன்லைன் வகுப்பு: மாணவி வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்- பதிவான வீடியோ!

பல்வேறு நிறுவனங்கள் முயற்சி

பல்வேறு நிறுவனங்கள் முயற்சி

டிக்டாக் அமெரிக்க உரிமத்தை வாங்குவதற்கு பல்வேறு நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றனர். இந்த பட்டியலில் மைக்ரோசாப்ட், டுவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் டிக்டாக் செயலியை வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் வால்மார்ட் நிறுவனம் கைகோர்த்து முயற்சிகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

மெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான காலக்கெடு

மெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான காலக்கெடு

அமெரிக்க அதிபர் உத்தரவின்படி சீன செயலியின் உரிமையை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான காலக்கெடுவாக செப்டம்பர் 15 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த தினம் வரை அதுகுறித்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இதுகுறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், நான் காலக்கெடுவை நீட்டிக்கவில்லை. செப்டம்பர் 15-க்கு பிறகு டிக்டாச் செயலிக்கு காலக்கெடு நீட்டிப்பு இருக்காது என கூறினார்.

பொறுத்திருந்து பார்ப்போம்

பொறுத்திருந்து பார்ப்போம்

செயலி மூடப்படும் அல்லது அதை விற்றுவிடுவார்கள். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக் செயலி அமெரிக்க நிறுவனத்திற்கு கைமாறும் அல்லது மூடப்படும் என குறிப்பிட்டார். இந்தநாள் டிக்டாக் விற்பனை குறித்து எந்தமுடிவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
No Extension of the TikTok's September Deadline Says Donald Trump

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X