Home
News

மகராசன்.. வெறும் ரூ.150குள்ள இவ்ளோ நன்மைகளா? பலருக்கும் தெரியாத Airtel-ன் சூப்பர் பிளான்!

ரூ.150க்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஒரு ஏர்டெல் ப்ரீபெய்ட் வவுச்சரை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம். அதன் விலை ரூ,148 ஆகும். இந்த திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இது எத்தனை நாட்களுக்கு செல்லுபடியாகும்? இதோ விவரங்கள்:

ரூ.148 திட்டமானது பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் டேட்டா வவுச்சர் ஆகும். பொதுவாக டேட்டா வவுச்சர்கள் என்றாலே அவைகள் வெறுமனே டேட்டா பலன்களை மட்டுமே வழங்கும். ஆனால் ஏர்டெல்லின் ரூ.148 ஆனது சற்றே வித்தியாசமாக டேட்டாவுடன் சேர்த்து ஓடிடி தளங்களுக்கான அணுகல்களை வழங்குகிறது.

வெறும் ரூ.150குள்ள பலருக்கும் தெரியாத Airtel-ன் சூப்பர் பிளான்!

அதாவது ஏர்டெல் ரூ.148 திட்டமானது எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே ப்ரீமியம் (Xstream Play Premium) உடன் வருகிறது. அறியாதோர்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே என்பது ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு ஓடிடி கன்டென்ட் தளமாகும். உடனே ஏர்டெல் நிறுவனம் அதன் சொந்த டிவி நிகழ்ச்சிகள் அல்லது திரைப்படங்களை தயாரிக்கிறது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.

மாறாக அதன் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிளாட்ஃபார்ம் வழியாக 15 க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களுக்கான அணுகல்களை ஒரே இடத்தில் வழங்குகிறது. அதாவது எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிளாட்ஃபார்ம் வழியாக நீங்கள் வெவ்வேறு ஓடிடி தளங்களில் உள்ள திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை ஒரே இடத்தில் காணலாம்.

அவைகளில் லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), சோனிலைவ் பிரீமியம் (SonyLIV Premium), ஈரோஸ் நவ் (Eros Now), ஹோய்ச்சோய் (Hoichoi) போன்ற பிரபலமான ஓடிடி தளங்களும் அடக்கம். எல்லாவற்றை விட சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ரூ.148 திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே ப்ரீமியமிற்கான இலவச அணுகலை வழங்குகிறது.

டேட்டா நன்மையை பொறுத்தவரை, பார்தி ஏர்டெல்லின் ரூ.148 திட்டமானது 15ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த 15ஜிபி டேட்டாவிற்கு எந்தவிதமான தனிப்பட்ட செல்லுபடியும் கிடையாது; மாறாக இது உங்களுடையய மெயின் அல்லது ஆக்டிவ் ரீசார்ஜின் வேலிடிட்டி (Main or Active Recharge Validity) உடன் ஒற்றுப்போகும்.

யாருக்கெல்லாம் மெயின் ரீசார்ஜ்ஜின் கீழ் கிடைக்கும் (1ஜிபி அல்லது 1.5 ஜிபி அல்லது 2ஜிபி அல்லது 3ஜிபி) டெய்லி டேட்டா லிமிட் ஆனது போதவில்லையோ, அவர்களுக்கெல்லாம் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மலிவான விலையில் ஓடிடி கன்டென்ட் தேவை என்றாலும் கூயோட ரூ.148 டேட்டா வவுச்சரை கண்களை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்யலாம்.

டேட்டா மற்றும் ஓடிடி நன்மைகளை தவிர்த்து ரூ.148-ன் கீழ் வேறெந்த நன்மைகளும் கிடைக்காது. அதாவது வாய்ஸ் கால்கள் அல்லது எஸ்எம்எஸ் போன்ற நன்மைகள் கிடைக்காது. ரூ.148-க்கு அடுத்தபடியாக ஏர்டெல்லின் டேட்டா வவுச்சர் பிரிவில், ரூ.149 திட்டம் உள்ளது. இந்த திட்டம் வெறும் 1ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்கும், ஆனால் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளேவை 30 நாட்களுக்கு வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
No Doubt This Airtel Plan is the Best Data Voucher to Recharge Under Rs 150 Check Rs 148 Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X