Home
News

UPI.. ரூ.2,000 மேல் கதை முடிந்தது.. GPay, Paytm, PhonePe வைத்து இருப்பவர்களுக்கு இந்திய அரசு கொடுத்த விளக்கம்!

கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ (UPI) ஆப்கள் வழியாக செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், ரூ.2,000 மேல் பரிவர்த்தனை செய்யும்போது கட்டணம் இருக்க வாய்ப்புள்ளது.

ஆனால், இது தனிநபர்களுக்கு இருக்காது, வணிக ரீதியாக செய்யப்படும் பரிவர்த்தனைகளில் வணிகர்களுக்கு மட்டுமே விதிக்கப்படும் என்று இந்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இதுவரையில் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஆனால், வணிகர் தள்ளுபடி கட்டணம் - எம்டிஆர் (Merchant Discount Rate - MDR) விதிக்கப்பட உள்ளது.

UPI.. ரூ.2,000 மேல் கதை முடிந்தது.. GPay, Paytm, PhonePe வைத்திருந்தா?

இதற்கான மசோதா ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், இந்த எம்டிஆர் கட்டணம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும் என்று இந்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அதே நேரத்தில், பர்சன்-டு-பர்சன் (P2P) பரிவர்த்தனைகளுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் உறுதியளித்துள்ளது. ஆகவே, இது பர்சன்-டு-மெர்ச்சன்ட் (P2M) பரிவர்த்தனைகளுக்கு பொருந்தலாம்.

அதிலும், முற்றிலும் வணிகர்கள் மட்டுமே இந்த கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும். சொல்லப்போனால், எம்டிஆர் கட்டணமானது அனைத்து வகையான வணிகர்களுக்கும் அல்லது அனைத்து பணப்பரிவர்த்தனைகளுக்கும் ஒட்டுமொத்தமாக பொருந்தாது. குறிப்பிட்ட ஒரு வரம்பிற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இது நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.

பரிவர்த்தனை வரம்பானது, ரூ.2,000 மேல் செல்லும்போது இந்த கட்டணம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இப்படி நடைபெறும் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.25 சதவீதம் முதல் 0.4 சதவீதம் வரை எம்டிஆர் கட்டணம் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதிகபட்ச வரம்பு (Ceiling Limit) விதிக்கப்பட இருக்கிறது. இது வணிகர்கள் மீதான நிதிச்சுமை தவிர்த்து உச்சவரம்பை நிர்ணயிக்க உள்ளது.

ஆகவே, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு (Person-to-Person) செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகள் மற்றும் சிறு வணிகர்களிடம் பெரும்பாலும் செய்யப்படும் குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகள் முழுமையாக கட்டணமின்றி தொடர இருக்கிறது. இதனால், எந்த கட்டணமும் செலுத்த வேண்டி இருக்காது. வழக்கம்போல பரிவர்த்தனைகளை தொடரலாம்.

மேலும், விசா (Visa) மற்றும் மாஸ்டர்கார்டு (Mastercard) போன்ற கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் (Credit Card & Debit Card) சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதனால், அந்த நிறுவனங்களின் அழுத்தத்தின் காரணமாகவே யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்க இந்திய அரசு திட்டமிடுகிறது என்று கூறப்பட்டது.

இந்திய அரசு இதையும் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. வெளிநாட்டு அழுத்தங்கள் ஏதாவது இருந்திருந்தால், 2016 ஆம் ஆண்டில் யுபிஐ வழியாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை இந்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்காது. அதேபோல ஜனவரி 2020 ஆம் ஆண்டு முதல் தனிநபர்கள் மற்றும் வணிகர்களுக்கு இதை இலவசமாக்கி அதை உயர்த்தி இருக்காது என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இறுதியாக, யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பதா அல்லது வேண்டாமா மற்றும் அதற்கான கட்டண விகிதங்கள் எப்படி நிர்ணயிக்கலாம் என்பதை இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (NPCI) கீழ் இயங்கும் யுபிஐ மற்றும் சேவைகள் வழிகாட்டுதல் குழு முடிவெடுத்து அறிவிக்கும். அதுவரையில் எந்த கட்டணமும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
No Charges For P2P UPI Transactions Google Pay PhonePe Paytm Will Continue To Be Free Of Charge
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X