விரைவில் : ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுதும் 4ஜிவோல்ட்இ திட்டம்.!
ஏர்டெல் 4ஜிவோல்ட்இ திட்டம் பொறுத்தவரை தற்போதைய நதியாண்டு நிறைவடையும் முன் இந்த சேவைகள் வழங்க ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனம் தற்போது புதிய முயற்சிகளை எடுத்துவருகிறது, இதன் மூலம் தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் கடும் போட்டி ஏற்ப்பட்டுள்ளது, ஐடியா மற்றும் வோடபோன் ஜியோ போன்ற நிறுவனங்கள் தற்சமயம் பல ஆபர்களை அறிவத்த வண்ணம் உள்ளது, ஆனால் ஏர்டெல் நிறுவனம் புதிய முயற்ச்சியாக 4ஜிவோல்ட்இ திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

ஜியோ நிறுவனம் தற்போது அதிகமாக 4ஜிவோல்ட்இ சேவையை அதிகமாக வழங்கிவருகிறது, ஆனால் இதில் இருக்கும் இன்டர்நெட் வேகம் மிக குறைவு எனக் கூறப்படுகிறது, மேலும் ஏர்டெல் 4ஜி இன்டர்நெட் வேகம் பொறுத்தவரை சற்று அதிகம் டவுன்லோடு செய்ய மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவில் வரும்காலத்தில் 4ஜி சேவை அனைத்து இடங்களிலும் மிக எளிமையாக கிடைக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 2ஜி மற்றும் 3ஜி சேவைகள் குறைந்து விடும் என எதிர்பாரக்கப்படுகிறது.

ஏர்டெல் 4ஜிவோல்ட்இ திட்டம் பொறுத்தவரை தற்போதைய நதியாண்டு நிறைவடையும் முன் இந்த சேவைகள் வழங்க ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த ஏர்டெல் திட்டம் பொதுவாக 4ஜி தொழில்நுட்பத்தில் மிகவிரைவில் கால்அழைப்புகளை மேற்க்கொள்ள வழி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் இந்தியாவில் ஆறு நகரங்களில் வோல்ட்இ சோதனை நடத்தப்பட்டுள்ளது என பாரதி ஏர்டெல் தலைமை செயல் அதிகாரியான கோபால் விட்டல் தகவலை தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications