நிவர் புயல்:மின்னணு சாதனங்களை பாதுகாப்பாக கையாளுவது எப்படி? அவசர காலத்தில் உதவும் சாதனங்கள் இதுதான்!

|

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான நிவர் புயல் தீவிரமடைந்து வருகிறது. புயல் வலுவடைந்துள்ள நிலையில் இன்று நள்ளிரவு முதல் அதிகாலைக்குள் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த நேரத்தில் மணிக்கு 145 கிலோமீட்டர் வரை புயல் காற்று வேகம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

காற்றின் வேகம் அதிகரிக்கும்

காற்றின் வேகம் அதிகரிக்கும்

புயல் கரையை கடக்கும் நேரம் நெருங்க நெருங்க காற்றின் வேகம் அதிகமாகவே இருக்கும். அதேபோல் மழை வெளுத்து வாங்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து வட தமிழக கடற்கரை மாவட்டங்களில் வசிக்கும் பொது மக்கள் வெளியில் வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் துண்டிக்க வாய்ப்பு

மின்சாரம் துண்டிக்க வாய்ப்பு

மழை, புயல் தாக்கத்தின் முதல் எதிரொலி மின்சாரத்தில்தான். மின்சாரம் துண்டிப்பு எப்போது என்றே எதிர்பார்க்கமுடியாது. ஒருவேலை நம் பகுதியில் காற்றின் வேகத்தில் மரம் விழுந்து மின்சார கம்பி அறுந்திருந்தாலோ, அதீத மழையால் டிரான்ஸ்ஃபார்மர் போன்ற சாதனங்களில் வெடிப்பு ஏற்பட்டாலோ மழை காலத்தில் அதை உடனடியாக சரி செய்ய முடியாது. சமயத்தில் மின்சாரம் வருவதற்கு நாட்கள் கணக்கில்கூட ஆகலாம்.

லேப்டாப், மொபைல் போன்ற சாதனங்கள்

லேப்டாப், மொபைல் போன்ற சாதனங்கள்

எனவே லேப்டாப், மொபைல் போன்ற சாதனங்களை முழுவதுமாக சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுங்கள். டிவி போன்ற சாதனங்களில் இருந்து மின்சார இணைப்பை துண்டித்து வைத்துக் கொள்வது நல்லது. சிலர் ஆஃப் செய்த நிலையில் இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள் ஆனால் அது முறையல்ல. மின்சார வயரை பிளக்பாயிண்ட்டில் இருந்து தனியாக கலட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

2000 ஆண்டுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் உடல் எச்சங்கள் கண்டுபிடிப்பு:மிக துயரமான மரணம்-அதிர்ச்சி தகவல்2000 ஆண்டுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் உடல் எச்சங்கள் கண்டுபிடிப்பு:மிக துயரமான மரணம்-அதிர்ச்சி தகவல்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வைஃபை மூலம் இணைய சேவையை பயன்படுத்தி வந்திருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையம் பயன்படுத்தும் விதமான ரீசார்ஜை செய்து வைத்துக் கொள்ளுங்கள். மேலும் மொபைல் போனை வேறு எந்த பயன்பாட்டுக்கும் உபயோகிக்காமல் கால் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளவும். பல முக்கியமான விஷயங்களுக்கு மொபைல்போன் பிரதான தேவையாக இருக்கிறது.

மின்சார சாதனம் பாதுகாப்பு

மின்சார சாதனம் பாதுகாப்பு

நாட்கள் கணக்கில் மின்சாரம் இல்லாதபட்சத்தில் ஃபிரிட்ஜ்-ல் உள்ள சாப்பாட்டு பொருட்களை எடுத்து சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீண்ட நேரம் கரண்ட் இல்லையென்றால் ஃப்ரீஜர் பாக்ஸில் உள்ள ஐஸ்கட்டிகள் நீராக வெளியேறும் எனவே அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும்.

அவசரத்தில் கைக்கொடுக்கும் சாதனம்

அவசரத்தில் கைக்கொடுக்கும் சாதனம்

மின்சார சாதனத்துக்குள் தண்ணீர் புகாத வண்ணம் பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொள்ளவும். வீட்டில் பேட்டரி போட்டு வைத்திருக்கக் கூடிய ரேடியோ இருந்தால் அது இந்தகாலக்கட்டத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொழுதுபோக்கிற்கு அதை பயன்படுத்திக் கொள்ளவும்.

பவர் பேங்க் பயன்பாடு

பவர் பேங்க் பயன்பாடு

டார்ச் லைட் போன்ற சாதனங்கள் இருந்தால் அதற்கான பேட்டரியை வாங்கி வைத்துக் கொள்ளவும். எமெர்ஜென்சி லைட் இருந்தால் அதற்கு முழுமையாக சார்ஜ் வைத்துக் கொள்ளவும். அதேபோல் பவர் பேங்க் இருக்கும்பட்சத்தில் அதையும் முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளுங்கள். இதெல்லாம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Nivar Storm: How to Safely Handle Electronic Appliances During Disaster Periods

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X