Home
News

ஏகப்பட்ட சொத்து இருக்கு.. ஆனாலும் 800 ரூபாய் மாத சம்பளத்துக்கு வேலைக்குச் சென்ற நீதா அம்பானி.. ஏன் தெரியுமா?

ஜியோ நிறுவனம் இந்தியாவில் கொண்டுவரும் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் ஆசியாவின் டாப் பணக்காரர்கள் பட்டியலில் ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளார்.

அதேபோல் இவர் அடைந்திருக்கும் புகழ், உயரம் அனைத்தும் ஒரே நாளில் கிடைத்தது இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகத் தனது மிகப் பெரிய உழைப்பால் இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்திருக்கிறார். அதேபோல் முகேஷ் அம்பானியின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றவர்கள் அவரின் மனைவி நிதா அம்பானி தொடங்கி மகன்கள், மகள் மற்றும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

800 ரூபாய் மாத சம்பளத்துக்கு வேலைக்குச் சென்ற நீதா அம்பானி.!

இந்நிலையில் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி நிகழ்ச்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்று இப்போது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது கடந்த 1985-ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த நீதா அம்பானிக்கும் திருமணம் நடைபெற்றது. குறிப்பாக இவர்களது திருமணம் காதல் திருமணம் என்று கூறப்படுகிறது. அதேபோல் முகேஷ் அம்பானியைத் திருமணம் செய்வதற்கு முன்பு நீதா அம்பானி பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

800 ரூபாய் மாத சம்பளத்துக்கு வேலைக்குச் சென்ற நீதா அம்பானி.!

அதேபோல் நீதா திருமணத்திற்கு முன்பே மாமனார் அதாவது திருபாய் அம்பானியிடம் திருமணத்திற்குப் பின்பு கூட தன்னுடைய பணியைத் தொடர வேண்டும் அதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு திருபாய் அம்பானியும் சிரித்துக்கொண்டே ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே திருமணத்திற்குப் பின்பு கூட நீதா அம்பானி (Nita Ambani) ஆசிரியை பணியைத் தொடர்ந்தார். இந்நிலையில் தான் முகேஷ் மற்றும் நீதா அம்பானி ஆகியோர் அளித்த பேட்டி அனைத்து சமூகவலைத்தளங்களிலும் வைரலாகி உள்ளது. அந்த பேட்டியில் திருமணத்திற்குப் பின்னர் சன்பிளவர் நர்சரி பள்ளியில் தான் ஆசிரியர் பணிணை தொடர்ந்ததாகக் கூறிய அவர் அங்கு மாதம் சம்பளம் 800 ரூபாய் என்று கூறியது வைரலானது.

குறிப்பாக மிகப் பெரிய குடும்பத்தில் மருமகளான பிறகும் கூட மிகவும் கம்மியான ஊதியத்திற்கு வேலைக்கு வருவதாகக் கூறி தன்னை சுற்றி பலர் கிண்டல் செய்தாலும், ஆசிரியர் பணி தனக்கு மனநிறைவைத் தந்ததால் அதைக் கைவிடவில்லை என்று நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.

800 ரூபாய் மாத சம்பளத்துக்கு வேலைக்குச் சென்ற நீதா அம்பானி.!

அதேசமயம் தன்னுடைய 800 ரூபாய் ஊதியம் அனைவரின் இரவு உணவுக்குச் செலவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் தற்போது நீதா அம்பானி ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கீழ் 13 பள்ளிகளை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் உலகின் மிக விலையுயர்ந்த குடியிருப்புக்கான சொந்தக்காரர் முகேஷ் அம்பானி தான். அதாவது தெற்கு மும்பையில் இருக்கும் அவரின் வீட்டின் பெயர் அன்டிலியா என்று கூறப்படுகிறது. மொத்தம் 27 மாடிகள் கொண்ட இந்த பிரம்மாண்ட கட்டிடத்தில் 600-க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nita Ambani who went to work for monthly salary of 800 rupees even after marriage: Do you know why?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X