Home
News

ராஜினாமாவை நீட்டிய நீதா அம்பானி.. ரிலையன்ஸில் இருந்து விலகல்.. ஏன்? மனைவியின் பதவியை பறித்த முகேஷ் அம்பானி?

ஆர்ஐஎல் (RIL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் (Reliance Industries Limited) இயக்குநர்கள் குழுவில் (Board of Directors) இருந்து முகேஷ் அம்பானியின் மனைவியான நீதா அம்பானி (Nita Ambani) விலகி உள்ளார். என்ன காரணம்? இதோ விவரங்கள்:

முகேஷ் அம்பானியின் மனைவியான (Mukesh Ambani Wife) நீதா அம்பானியின் பதவியை யாரும் பறிக்கவில்லை. இது முழுக்க முழுக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டிற்கான புதிய தலைவர்களை உருவாக்கும் நோக்கத்தின் கீழ் தான், நீதா அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் இயக்குநர்கள் குழுவில் இருந்து வெளியேறி உள்ளார்.

ராஜினாமாவை நீட்டிய நீதா அம்பானி.. ரிலையன்ஸில் இருந்து விலகல்.. ஏன்?

நீதா அம்பானி இந்த விலகல், அவரது மகன்கள் மற்றும் மகளான - இஷா, ஆகாஷ் மற்றும் ஆனந்த் ஆகியோருக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் பெரிய பொறுப்புகளை வழங்க உள்ளது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால்.. தனது பிள்ளைகளுக்கு வழிவிட வேண்டும் என்கிற எண்ணத்தின் கீழ் தான் நேதா அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் இருந்து வெளியேறி உள்ளார் என்பது போல் தெரிகிறது.

ஏனென்றால், நீதா அம்பானியின் விலகலை தொடர்ந்து இஷா அம்பானி (Isha Ambani), ஆகாஷ் அம்பானி (Akash Ambani) மற்றும் ஆனந்த் அம்பானி (Anant Ambani) ஆகிய மூவரும் ஆயில்-டூ-ரீடெயில் வணிகக் குழுமத்தின் (Oil-to-retail conglomerate) நிர்வாகமற்ற இயக்குநர்களாக (Non-executive directors) நியமிக்கப்பட உள்ளனர்.

நிறுவனத்தின் பங்குதாரர்களின் ஒப்புதல் (Shareholders Approval) கிடைத்ததும் இவர்கள் மூவரும், நிர்வாகமற்ற இயக்குநர்களாக தத்தம் பணிகளை தொடங்குவார்கள். நீதா அம்பானி தனது பதவியில் இருந்து வெளியேறினாலும் கூட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் தலைவர் (Chairman) பதவியில் முகேஷ் அம்பானி தொடர்ந்து பணியாற்ற உள்ளார்.

அம்பானியின் மூன்று வாரிசுகளுமே, கடந்த சில ஆண்டுகளாகவே ரீடெயில், டிஜிட்டல் சேவைகள் மற்றும் எனர்ஜி மற்றும் மெடீரியல்ஸ் (Retail, Digital services and energy and materials) வணிகங்கள் உட்பட ரிலையன்ஸின் முக்கிய வணிகங்களுடன் நெருக்கமாக ஈடுபட்டு வருகின்றன. இவர்கள் பங்களிப்பை கொண்ட வணிகங்கள் எல்லாமே நிறுவனத்தின் முன்னணி வணிகங்கள் ஆகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமின்றி இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி ஆகிய மூவருமே ரிலையன்ஸின் முக்கிய துணை நிறுவனங்களிலும் கூட பலகைகளில் பணியாற்றுகிறார்கள். இயக்குநர்கள் குழுவில் இருந்து நீதா அம்பானி ராஜினாமா செய்திருந்தாலும், அவர் தொடர்ந்து அனைத்து வாரியக் கூட்டங்களிலும் (Board meetings) நிரந்தர அழைப்பாளராக பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் (Reliance Foundation) வழியாக, இந்தியாவுக்கு இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும், அதை செயல்படுத்துவதற்கும், தனது ஆற்றல் மற்றும் நேரத்தை செலவிடுவதற்கான அவரது முடிவை மதித்து, நிதா அம்பானியின் ராஜினாமாவை இயக்குநர்கள் குழு ஏற்றுக்கொண்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவ்ரை, ஜியோ ஏர்ஃபைபர் சேவையானது (Jio Airfiber Service) வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி அறிமுகமாகும் என்று முகேஷ் அம்பானி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முதற்கட்டமாக இது டெல்லி (Delhi), சென்னை (Chennai), மும்பை (Mumbai) மற்றும் கொல்கத்தாவில் (Kolkata) அறிமுகம் செய்யப்படும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

ரிலையன்ஸ் ஜியோவின் "பரம எதிரியான" பார்தி ஏர்டெல் (Bharti Airtel) ஏற்கனவே அதன் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் (Xstream AirFiber) சேவையை ரூ.799 என்கிற தொடக்க விலையின் கீழ் அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையின் கீழ் ஆறு மாத திட்டமும் உள்ளது; அதன் விலை ரூ.4,435 ஆகும். ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்களின் விலை நிர்ணயமானது ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபரை விட மலிவானதாக இருக்கும் என்பதில் சந்தேகேமே வேண்டாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nita Ambani Resigned From Reliance Industries Board Her Childrens Isha Akash Anant To Join RIL Board
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X