4-ம் வகுப்பு மாணவி உருவாக்கிய புதிய செயலி: பள்ளிக் கொடுமைகளை தெரிவிக்க உதவும்.! பலே

|

இப்போது வரும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் செயலிகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். அதன்படி ஒன்பது வயது சிறுமி ஒருவர் பள்ளியில் நடக்கும் கொடுமைகக்கு எதிராக ஒரு
செயலியை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 4-ம் வகுப்பு படிக்கும் மாணவி

4-ம் வகுப்பு படிக்கும் மாணவி

இந்த செயலியை உருவாக்கியவர் மாணவி மெய்தைபாஹீன் மஜாவ், இவர் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் 4-ம்வகுப்பு படிக்கும் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த மாணவி தனக்கு எதிராக பள்ளியில் நடந்தசில கொடுமைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கொடுமையை எப்படி தடுப்பது?

கொடுமையை எப்படி தடுப்பது?

மேலும் அது தொடர்பாக சிந்தித்தும் வந்துள்ளது, தொடர்ந்து இந்தக் கொடுமையை எப்படி தடுப்பது? தம்மை போன்றபாதிக்கப்படுவபவர்களுக்கு யார் உதவுவது என அவர் யோசித்துள்ளார். பின்பு இந்த தொடர் அச்சுறுத்தலுக்கு எதிராகஒரு தீர்வை கண்டுபடிப்பதற்கான முயற்சியில் மெய்தைபாஹீன் மஜாவ் ஈடுபட்டுள்ளார்.

 செயலி

செயலி

அதற்கான வெற்றியின் அடையாளமாக தான் ஒரு செயலியை அவரே கண்டுபிடித்துள்ளார். அவர் கொண்டுவந்த இந்தசெயலி ஆனாது புகாரை எந்த நபர் தெரிவிக்கிறார் என்பதை வெளிப்படுத்தாமல் அதிகாரிகளுக்கு புகாரளிக்கும்படிஅவர் உருவாக்கியுள்ளார்.

அவர் கூறியது என்னவென்றால்

குறிப்பாக இந்த சின்னஞ்சிறு வயதில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியான இவர், ஒரு செயலியை கண்டுபடித்துள்ளது இப்போது பெரிய செய்தியாக உள்ளது. மேலும் அவர் கூறியது என்னவென்றால், நான் நர்சரியில் இருந்தே பள்ளியில் நடைபெறும் கொடுமைகளை அனுபவித்து வந்தேன், அது என்னை மிகவும் பாதித்தது, ஆகவே நான் அதை வெறுக்கிறேன். இதனால் நான் எப்போது
ஒரு தீர்வைத் தேடிக்கொண்டடே இருந்தேன்.

பேட்டியில் கூறியுள்ளார்

வேறு எந்தக் குழுந்தைக்கும் இந்த பாதிப்பு வரக்கூடாது என்று மஜாவ் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்தபேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் மீது நடத்தப்படும் கொடுமை

மேலும் கூகுள் பிளே ஸ்டோரில் விரைவில் இந்த செயலி கிடைக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பின்னர் இதனை
வைத்து அடையாளங்களை வெளிப்படுத்தாமல் பாதிக்கப்பட்டவர்கள், ஆசரியர்கள் யார் வேண்டுமானாலும் தங்கள் மீது நடத்தப்படும் கொடுமைகளுக்கு எதிராக புகாரளிக்கலாம்.

மாநில கல்வி அமைச்சர்

மாநில கல்வி அமைச்சர்

இந்த மாணவியின் முயறசியை மாநில கல்வி அமைச்சர் லக்மென் ரிம்புய் பாராட்டியுள்ளார், பின்பு இவர் ஒரு பொறுப்புள்ள குடிமகளாக வளர்வார் என்று அவர் கூறியுள்ளார். குறிப்பாக சமூக கொடுமைகளை எதிர்த்துப் போராடுவதற்கான அவரது முயற்சிக்கு வாழ்த்துக்கள். அவர் குடிமகளாக இருப்பார். அவளுக்கு வழிகாட்டியதற்காக அவரது பெற்றோர்களையும் வாழ்த்துகிறேன் என ரிம்புய் அவர்கள் கூறியுள்ளார்.

செப்டம்பர் மாதம்

மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மெய்தைபதஹீன் மஜாவ் ஒரு ஆப்-டெவலப்மென்ட் படிப்பில் சேர்ந்ததாகவும்,சில மாதங்களுக்குள்ளேயே அதன் திறன்களைக் கற்றுக்கொண்டு அவள் தேறிவிட்டதாகவும் அவரது தாயார் தசுமார்லின் மஜாவ் கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Nine-year-old girl in Shillong develops anti-bullying application : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X