ஆக்டோபஸ்-க்கு எத்தனை கால்?- 9 கால்., சபாஷ் சரியான பதில்: இதோ ஆதாரம் இருக்கு!

|

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வித்தியாசமான உயிரினங்களும் ஆச்சரியங்களும்

வித்தியாசமான உயிரினங்களும் ஆச்சரியங்களும்

ஒவ்வொரு நாளும் கண்டுபிடிக்கப்படும் வித்தியாசமான உயிரினங்களும் ஆச்சரியங்களும் நம்மை வியப்படைய செய்து கொண்டே இருக்கிறது. இதுபோன்ற விஷயங்கள் நம்மை வியப்படைய செய்வதோடு பூரிக்க வைக்கிறது. உலகில் தொழில்நுட்பங்கள் வளர்ந்துக் கொண்டே போகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களும்., அதற்கு இணையான கண்டுபிடிப்புகளும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

கடலில் உள்ள மர்மங்கள்

கடலில் உள்ள மர்மங்கள்

சில நேரங்களில் சமூகவலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள், நம்மை சில விநாடிகள் உராயவைத்து பார்க்கச் செய்கிறது. குறிப்பாக கடலில் இருக்கும் மர்மங்கள் கோடிக்கணக்கானவை என்றே கூறலாம். உலகம் முழுவதும் அவ்வப்போது கடலில் உள்ள மர்மங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வந்தாலும் அது மிகவும் சொர்ப்பமே.

ஒன்பது கால்கள் உள்ள ஆக்டோபஸ்

ஒன்பது கால்கள் உள்ள ஆக்டோபஸ்

அதன்படி தற்போது ஒன்பது கால்கள் உள்ள ஆக்டோபஸை ஜப்பானில் மீனவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். வடக்கு ஜப்பானில் உள்ள கடற்கரையில் ஆக்டோபஸை கண்டுபிடித்து அதை சமைக்க அந்த மீனவர் முற்பட்டுள்ளார்.

சமைக்கும் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒன்பதாவது கால்

சமைக்கும் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒன்பதாவது கால்

ஆக்டோபஸை பிடித்து இரவு உணவிற்கு கொதிக்கும் நீரில் போடும் போது ஆக்டோபஸில் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடித்துள்ளார். ஆக்டோபஸில் கூடுதலாக ஒரு கால் இருந்துள்ளது. இந்த மாற்றத்தை கண்டு வியந்துள்ளார். இதுகுறித்து மினாமிசான்ரிகு நேச்சர் சென்டரின் ஆராய்ச்சியாளரான டாகுசோ அபே தி மைனிச்சியிடம் கூறியுள்ளார்.

அடடா இது தெரியாம போச்சே: Whatsapp-ஐ ஆஃப்லைனில் இருந்தபடியே பயன்படுத்தலாம்- எப்படி தெரியுமா?அடடா இது தெரியாம போச்சே: Whatsapp-ஐ ஆஃப்லைனில் இருந்தபடியே பயன்படுத்தலாம்- எப்படி தெரியுமா?

விஞ்ஞானிகள் கருத்து

விஞ்ஞானிகள் கருத்து

மீளுருவாக்கம் செயல்பாட்டின் காரணமாக ஒன்பதாவது கால் வளர்ந்திருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒன்பதாவது கால் ஆக்டோபஸின் இடது பக்கத்தில் மூன்றாவது காலின் நடுவில் கூடுதல் மூட்டு உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

அரிய ஆக்டோபஸ் பொதுமக்கள் பார்வையில்

அரிய ஆக்டோபஸ் பொதுமக்கள் பார்வையில்

இந்த அரிய ஆக்டோபஸ் இயற்கை மையத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. இந்த ஆக்டோபஸ் காலை இழந்திருக்கும் எனவும் அது வளர்ச்சி அடையும் போது கூடுதலாக ஒரு கால் இணைப்பு வளர்ந்திருக்கும் எனவும் விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.

சிவப்பு நிறத்தில் 15 சென்டிமீட்டர் நீளம்

சிவப்பு நிறத்தில் 15 சென்டிமீட்டர் நீளம்

சிவப்பு நிறமுடைய இந்த ஆக்டோபஸ் 15 சென்டிமீட்டருக்கும் அதிகமான நீளத்தை கொண்டிருக்கிறது. இந்த ஆக்டோபஸ் ஷிசுகாவா இயற்கை மையத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

File Images

source: dailymail.co.uk

Best Mobiles in India

English summary
Nine Legs Octopus Discovered in Japan: Noticed While Cooking

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X