போலி மொபைல் ஆப் பயன்படுத்தி ரூ. 3லட்சம் ஏமாற்றிய 9 கல்லூரி மாணவர்கள்: ஸ்சுவாரசியமான கதை .!
இந்நிலையில், ஒவ்வொரு முறை பொருட்கள் வாங்கியதும் பணம் டிரான்ஸ்பர் ஆகிவிட்டதாக கூறி தங்கள் மொபைலில் ஒரு ஆப்பை திறந்து காட்டி வந்துள்ளனர். இதை கடை உரிமையாளர் வேல்ராஜூம் அதை நம்பியுள்ளார்.
சென்னையில் போலி மொபைல் ஆப்பை பயன்படுத்தி சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் சுமார் 3 லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் ஸ்சுவாரசியமான கதை பின்னணியில் போலீசார் விசாரணை நடத்தி 9 கல்லூரி மாணவர்களை கைது செய்துள்ளனர்.

சூப்பர் மார்க்கெட்:
சென்னை துரைபாக்கத்தில் வேல்ராஜ் என்ற சரவணன் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகின்றார். அங்கு சில கல்லூரி மாணவர்கள் கடந்த மூன்று மாதங்களாக பொருட்கள் வாங்கி வந்துள்ளனர்.

பணம் டிரான்ஸ்பர்:
இந்நிலையில், ஒவ்வொரு முறை பொருட்கள் வாங்கியதும் பணம் டிரான்ஸ்பர் ஆகிவிட்டதாக கூறி தங்கள் மொபைலில் ஒரு ஆப்பை திறந்து காட்டி வந்துள்ளனர். இதை கடை உரிமையாளர் வேல்ராஜூம் அதை நம்பியுள்ளார்.

சுமார் 3 லட்சம் குறைவு:
இந்நிலையில், கடைஉரிமையாளரின் கணக்கில் சுமார் 3 லட்சம் ரூபாய் அளவுக்கு பணம் குறைவாக இருந்துள்ளது. இதை கண்டு மாணவர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது மாணவர்களின் வங்கி கணக்கில் இருந்து எந்த வித பணமும் டிரான்ஸ்பர் செய்யவில்லை என்பதை அறிந்து அவர்களிடம் விசாரித்துள்ளனர்.

காவல் நிலையத்தில் புகார்:
அப்போது மாணவர்கள் பணம் டிரான்ஸ்பர் ஆவதற்கு சிறது காலம் ஆகும் என மழுப்பியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த வேல்ராஜ் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

போலி ஆப் அம்பலமானது:
இந்நிலையில் புகாரின் போரில் போலீசார் கல்லூரி மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். மாணவர்கள் போலியான ஆப் ஒன்றைப் பயன்படுத்தி உரிமையாளரை ஏமாற்றியது தெரியவந்தது. இதில் சமந்தப்பட்ட 9 மாணவர்கள் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications