Home
News

நம்பவே முடியவில்லை, 1926-லேயே இதை எப்படி கணித்தார் டெஸ்லா.?!

முழுக்க முழுக்க எதிர்கால நோக்கத்தோடு, தொலைநோக்கு சிந்தனையோடும் உருவாக்கம் பெற்ற டெஸ்லாவின் யோசனைகளில் ஒரு நம்பவே முடியாத கருவியும் அடக்கம்

மின்னியல், காந்தவியல் ஆகிய துறைகளில் நிக்கோலா டெஸ்லா செய்த புரட்சிகரமான பங்களிப்பை இன்றுவரை உலகம் போற்றிக் கொண்டே தான் இருக்கிறது. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நிகோலா டெஸ்லா நிகழ்த்திய கண்டுபிடிப்புகளும், அவரின் படைப்பாற்றலும், யோசனைகளும் மிகவும் அசாத்தியமானவைகளாய் இருந்தன.

முழுக்க முழுக்க எதிர்கால நோக்கத்தோடு, தொலைநோக்கு சிந்தனையோடும் உருவாக்கம் பெற்ற டெஸ்லாவின் யோசனைகளில் ஒரு நம்பவே முடியாத கருவியும் அடக்கம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்காலவாதி :

எதிர்காலவாதி :

டெஸ்லா ஒரு இயற்பியலாளர், இயந்திர மற்றும் மின்சார பொறியாளர், கண்டுபிடிப்பாளர் மற்றும் எதிர்காலவாதி அதே போல் அருகாமை மீள்தெளிவு நினைவக சக்தி (possessor of a near-eidetic memory) கொண்டவர் ஆவார்.

மீள்தெளிவு நினைவகம் :

மீள்தெளிவு நினைவகம் :

மீள்தெளிவு நினைவகம் (Eidetic memory) என்பதை போட்டோகிராஃபிக் மெமரி என்றும் கூறுவர் அதாவது பார்த்த விடயத்தை நினைவுக்குறியீடுகள் பயன்படுத்தி தெளிவாக மீண்டும் நினைவகப்படுத்தும் உயர் துல்லியமான திறன் ஆகும்.

300 காப்புரிமை :

300 காப்புரிமை :

எட்டு மொழிகளில் பேசிய நிகோலா டெஸ்லா தனது வாழ்நாளில் மொத்தம் 300 காப்புரிமைகளை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கணிப்புகள் :

கணிப்புகள் :

இப்போது சில விடயங்களை டெஸ்லா அப்போதே கணித்திருந்தார் என்றால் அதை நாம் நம்பித்தான் ஆக வேண்டும். குறிப்பாக சக்தி மற்றும் தகவல் தொடர்பு பற்றிய அவரது கணிப்புகள் பல நடைமுறைக்கு வந்துள்ளன.

தீர்க்கதரிசன சக்தி :

தீர்க்கதரிசன சக்தி :

டெஸ்லா எவ்வளவு பெரிய தீர்க்கதரிசன சக்தி கொண்டவராக இருந்திருந்தால் 1926-ஆம் ஆண்டிலேயே ஒரு அடிப்படை நவீன ஸ்மார்ட்போனை விவரித்திருப்பார்..!

ஒருமித்த நிலை :

ஒருமித்த நிலை :

"உலகம் முழுவதும் வயர்லெஸ் வசதி நடைமுறைப் படுத்தப்பட்ட பின்பு அதுவொரு மூளைப்போல செயல்படும் போது அனைத்துமே நிஜத்தின், ஒருமித்த நிலையின் துகள்களாய் செயல்படும்" என்று கூறியுள்ளார்.

தொலைவு :

தொலைவு :

"அந்த நிலையில் தொலைவு பற்றிய கவலையின்றி நாம் யாரிடம் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள முடியும்" என்றுள்ளார் நிகோலா டெஸ்லா..!

நேரடி :

நேரடி :

"இதுமட்டுமின்றி தொலைக்காட்சி மற்றும் டெலிபோனி மூலம் பல மைல்கள் கடந்து இருப்பவரிடம் நேரடியாக முகம் பார்த்து தொடர்பு கொள்ளக் கூடிய வசதியும் ஏற்படும்" என்றுள்ளார்.

எளிமை :

எளிமை :

"குறிப்பாக அந்த கருவிகள் ஆனது நாம் இப்போது உபயோகித்து பயன்படுத்தும் தொலைபேசிகளுடன் ஒப்பிடுகையில் மிக மிக எளிமையானதாக இருக்கும்" என்றும் நிகோலா தெளிவாக கூறியுள்ளார்.

பாக்கெட் :

பாக்கெட் :

"அந்த கருவியை நாம் நமது பாக்கெட்களில் வைத்துக் கொள்ளும் படியாக இருக்கும்" என்று நிகோலா கூறியது தான் அனைத்தை விடவும் மிகப் பெரிய தீர்க்க தரிசனமாகும், இதையெல்லாம் 1926 ஆம் ஆண்டு டெஸ்லா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Nikola Tesla predicted smartphones in 1926. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X