உங்கள் போனில் 'நைட் மோடு' யூஸ் பண்ணுறீங்களா? வெளியான திடுக்கிடும் தகவல் இது தான்..

|

உங்கள் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் இரவு நேர பயன்பாட்டிற்காகப் பிரத்தியேக நைட் மோடு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஐபோனில் இது நைட் ஷிப்ட் மோடு என்றும், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இது நைட் மோடு என்றும் வருகிறது. குறிப்பாக இந்த நைட் மோடுகள் உங்கள் தூக்க முறைகளில் சாதகமான விளைவை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது. ஆனால், சமீபத்திய ஆய்வின் முடிவுகள் இதை முற்றிலுமாக மறுக்கும் விதத்தில் சில திடுக்கிடும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

உங்கள் போனில் உள்ள நைட் மோடு உங்களைப் பாதுகாப்பாக வைத்துள்ளதா?

உங்கள் போனில் உள்ள நைட் மோடு உங்களைப் பாதுகாப்பாக வைத்துள்ளதா?

உண்மையில் உங்கள் போனில் உள்ள நைட் மோடு உங்களைப் பாதுகாப்பாக வைத்துள்ளதா என்று தெரிந்துகொள்ளலாம். ப்ரிகாம் யூத் பல்கலைக்கழகம் (Brigham Young University) சமீபத்தில் இது தொடர்பான ஒரு புதிய ஆய்வை மேற்கொண்டுள்ளது, அதன் முடிவுகள் உங்கள் தலையை கிறங்கடிக்கக் கூடிய செய்திகளைக் கொண்டு வந்துள்ளது.

உங்களின் கண்களுக்கும் உங்களின் தூக்கத்திற்கும் ஆபத்தா?

உங்களின் கண்களுக்கும் உங்களின் தூக்கத்திற்கும் ஆபத்தா?

ஆப்பிள் நிறுவனம் தனது iOS 9 ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் சாதனத்தில் நைட் ஷிப்டை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் உங்கள் டிஸ்பிளேவுக்கு ஒரு வார்ம் லைட்டை சேர்க்கிறது. இதையே தான் ஆண்ட்ராய்டு போனின் நைட் மோடும் செய்கிறது.பிரகாசமான ப்ளூ லைட் ஒளியில் நீங்கள் உங்கள் சாதனத்தை இயக்கும் போது அது உங்களின் கண்களைச் சேதப்படுத்தும் மற்றும் உங்கள் தூக்கத்தை பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, BYU இன் ஆராய்ச்சியாளர்கள் இதை ஏற்கவில்லை.

மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!

ஆப்பிளின் நைட் ஷிப்ட் பயன்முறை

ஆப்பிளின் நைட் ஷிப்ட் பயன்முறை

இதற்காக நடத்தப்பட்ட ஆய்வின் தகவல்கள் ஆப்பிளின் நைட் ஷிப்ட் பயன்முறை பயனர்களின் தூக்கத்திற்கு எதிராகச் செயல்படுகிறது என்றும், அதே நேரத்தில் குறைந்த பிரகாசமான ஒளி தீங்கு விளைவிக்கும் என்றும் பயனரின் உடல் கடிகாரத்துடன் விளையாடுகிறது என்றும் கூறுகிறது.

பயனர்களின் தூக்கத்தில் ஏற்படும் மாற்றங்களை ஆராய ப்ளூ லைட் ஒளியின் விளைவுகள் குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டனர், முதலில், அவர்கள் பரிசோதனை செய்தவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்தனர்.

மூன்று குழுவாக பயனர்களை பிரித்து சோதனை

மூன்று குழுவாக பயனர்களை பிரித்து சோதனை

இதில் ஒரு குழு இரவில் நைட் ஷிப்ட் பயன்முறையுடன் தங்கள் சாதனங்களைப் பயன்படுத்தியது, மற்றொரு குழு இரவில் தங்கள் ஸ்மார்ட்போனைப் நார்மல் மோடில் பயன்படுத்துகிறது, கடைசியாக படுக்கைக்கு முன் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தாத ஒரு குழுவுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ஆய்வின் இரண்டாம் கட்டத்தில், ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் பங்கேற்கும் மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்தனர்.

உங்கள் பிறந்தநாள் அன்று விண்வெளியில் என்ன நடந்தது என்று தெரியவேண்டுமா? உடனே இதே ட்ரை செய்யுங்கள்..உங்கள் பிறந்தநாள் அன்று விண்வெளியில் என்ன நடந்தது என்று தெரியவேண்டுமா? உடனே இதே ட்ரை செய்யுங்கள்..

திடுக்கிடும் தகவலை வெளிப்படுத்தியுள்ள ஆய்வின் முடிவு

திடுக்கிடும் தகவலை வெளிப்படுத்தியுள்ள ஆய்வின் முடிவு

இதில் ஒரு குழுவினர் தினமும் ஏழு மணி நேரம் தூங்கியவர்களும், ஆறு மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்கியவர்களும் அடங்குவர். இதில் தூங்குவதற்கு முன் தங்கள் தொலைப்பேசிகளைப் பயன்படுத்தாதவர்கள் நன்றாகத் தூக்கியுள்ளனர் என்றும், அவர்களின் ஆரோக்கியம் நன்றாக இருந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூங்கும் நேரத்தில் தொலைப்பேசிகளைப் பயன்படுத்தியவர்களுக்குத் தூக்கமின்மை போன்ற சிக்கல்கள் எழுந்துள்ளது என்று முடிவுகள் திடுக்கிடும் தகவலை வெளிப்படுத்தியுள்ளது.

பயனர்களின் துக்கத்தை கடினமாக்குகிறதா ஸ்மார்ட்போன்கள்?

பயனர்களின் துக்கத்தை கடினமாக்குகிறதா ஸ்மார்ட்போன்கள்?

குறிப்பாக தங்கள் தொலைப்பேசிகளைப் பயன்படுத்தியவர்கள் நைட் ஷிப்டைப் பயன்படுத்தினாலும், இல்லாவிட்டாலும் தூக்க முறைகளில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. ப்ளூ லைட் ஒளி பயனர்களைத் தூங்கும் நேரத்தில் விழிப்பாக வைத்துள்ளது என்றும், தூங்குவதை மிகவும் கடினமாக்குகிறது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தூக்கம் சரியாக கிடைக்கவில்லை என்றால் உடலின் ஆரோக்கியம் கண்டிப்பாக பாதிப்படையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பொசுக்குன்னு வார்த்தைய விட்டிங்கிளே: இத இந்தியாவுக்கு கொடுக்குறதுல சுத்தமா விருப்பமில்ல- பில் கேட்ஸ்!பொசுக்குன்னு வார்த்தைய விட்டிங்கிளே: இத இந்தியாவுக்கு கொடுக்குறதுல சுத்தமா விருப்பமில்ல- பில் கேட்ஸ்!

நீங்கள் சரியான நேரத்தில் தூங்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் தான் செய்தாக வேண்டும்

நீங்கள் சரியான நேரத்தில் தூங்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் தான் செய்தாக வேண்டும்

இருப்பினும், அந்த தூண்டுதலின் எந்தப் பகுதியானது அறிவாற்றல் மற்றும் உளவியல் தூண்டுதல்களுக்கு எதிராக ஒளி உமிழ்வு காரணமாகச் செயல்படுகிறது என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியது அவசியம். இதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் சரியான நேரத்தில் தூக்கத்தைப் பெறுவதற்குப் போராடும் ஒருவராக இருந்தால், நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு கண்டிப்பாக உங்களின் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு தொலைப்பேசியைப் பயன்படுத்தாமல் இருப்பது தான் உங்களுக்கு ஆரோக்கியமானது. துக்கத்தைச் சரியாகப் பெறுவதற்கான சிறந்த முறை இப்போதைக்கு இது மட்டுமே.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Night Mode On Your iPhone and Android Isnt Helping You To Sleep Better : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X