Home
News

அடுத்தடுத்து டுவிஸ்ட்- நதியில் பதுக்கப்பட்ட ஆதாரங்கள் மீட்பு-முகேஷ்அம்பானி மிரட்டல் வழக்கில் தொடரும் திருப்பம்

மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி வெடி பொருட்களுடன் கார் ஒன்று நிறுத்தப்பட்டது. இந்த காரில் வெடி பொருட்களுடன் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரை எச்சரிக்கும் வகையில் ஒரு கடிதமும் இருந்திருக்கிறது.

 ஜெலட்டின் குச்சிகள் உடன் நின்ற கார்

ஸ்கார்பியோ காரில் ஜெலட்டின் குச்சிகள் மட்டுமின்றி அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான மும்பை இந்தியன்ஸ் அணி பொறிக்கப்பட்டிருந்த பை ஒன்றும் இருந்துள்ளது. அந்த பையில், இது ஒரு டிரைலர் மட்டும்தான் அடுத்தமுறை உங்கள் குடும்பத்தினருக்கு வீசுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழிகளை சரிசெய்க, குட் நைட் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அம்பானி அன்டிலியா வீடு

உலக அளவில், மிக சக்திவாய்ந்த வணிகர்களில் ஒருவரானவர் முகேஷ் அம்பானி. இவரது அன்டிலியா வீடு உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த குடியிருப்புகளில் ஒன்றாகும். இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் அன்டிலியா வீட்டுக்கு அருகே ஸ்கார்பியோ கார் 2.6 கிலோ எடையுள்ள 20 ஜெலட்டின் குச்சிகளோடு நிறுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மிரட்டல் கடிதம்

இது தலைநகரங்கள் மற்றும் சிறிய எழுத்துகள், ரோமானிய இந்தி மற்றும் தவறான எழுத்துப்பிழைகள் கலவையோடு ஒரு கணினியில் இருந்து அச்சிடப்பட்டுள்ளது எனவும் இந்த முறை தங்கள் அடையாளத்தை மறைக்க வேண்டுமென்றே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என போலீஸார் தரப்பில் சந்தேகிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

இதைத்தொடர்ந்து, முகேஷ் அம்பானி வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்தது திருட்டு கார் என்பதும், கார் கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி திருட்டு போனதாக கார் உரிமையாளரும், தொழிலதிபருமான மன்சுக் ஹிரன் புகார் அளித்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

வழக்கில் மும்பை போலீஸ் அதிகாரி

ஸ்கார்பியோ வாகனத்தை திருடியது யார் என்பதை கண்டுபிடிக்க போலீஸார் முயற்சித்தனர். இதுகுறித்து விசாரிக்க போலீஸார் தரப்பில் குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த சம்பவம் முழுதாக திட்டமிட்டு அரங்கேற்றியிருக்கலாம் என போலீஸார் தரப்பில் சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கில் திடீர் திருப்பமாக, அந்த காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரன் இம்மாத தொடக்கத்தில் சிற்றோடை ஒன்றில் பிணமாக மீட்கப்பட்டார். பின்னர், இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க தொடங்கியது. முதல்கட்ட விசாரணையில் மன்சுக் ஹிரனின் நண்பரும், மும்பை போலீஸ் அதிகாரியுமான சச்சின் வாஸுக்கு வழக்கில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சச்சின் வாஸை அதிகாரிகள் கைது செய்தனர்.

ஆதாரங்களை அழிக்க திட்டம்

தொடர்ந்து, நடந்த விசாரணையில், வெடிகுண்டுகளை நானே வைத்தேன். இதனால், இந்த வழக்கில் புலனாய்வு அதிகாரியாக செயல்பட்டு, வெற்றிகரமாக முடித்து வைத்து பதவி உயர்வு மற்றும் நல்ல பெயர் வாங்க விரும்பினேன். இது தொடர்பான, ஆதாரங்களை அழிக்க திட்டமிட்டேன் என்று சச்சின் வாஸ் வாக்குமூலம் அளித்தார்.

அடுத்தடுத்து திருப்பங்களால் அதிர்ச்சி

இதன் அடிப்படையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சச்சின் வாஸை பாந்த்ரா-குர்லா வளாகத்திற்கு அருகே உள்ள மிதி நதிக்கு அழைத்துச் சென்றனர். டைவர்ஸ் உதவியுடன் இரண்டு சிபியுக்கள், ஒரு வாகனத்தின் நம்பர் பிளேட், இரண்டு டி.வி.ஆர் மற்றும் ஒரு மடிக்கணினி போன்ற ஆதாரங்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மீட்டெடுத்தனர். இந்தநிலையில், அடுத்தடுத்து திருப்பங்கள் நிறைந்திருப்பதால், இந்த வழக்கு அம்மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

Best Mobiles in India

English summary
NIA Recovers Computer CPU, Number Plates and More From Mithi River: Mukesh Ambani Security Scare Case
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X