Home
News

கார், வேன், ஜீப் வைத்திருப்பவர்கள்.. இனி தேசிய நெடுஞ்சாலையில் உஷார் ஆகிடுங்க.. NHAI, Jio போட்ட புது மாற்றம்!

கார், வேன், ஜீப் மட்டுமல்லாமல், பைக்கில் உள்ளிட்ட வாகனங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது, இனிமேல் முன்கூட்டியே உஷார் ஆகிவிட முடியும். இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) ஆனது புதிய அலெர்ட் சிஸ்டத்தை கொண்டுவருகின்றன. ஒட்டுமொத்த வாகன ஓட்டிகளும் இதை தெரிந்து கொள்ள வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது, விபத்து பகுதிகள், விலங்குகள் நடமாடும் பகுதிகள், பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் அவசர கால மாற்றுப்பாதைகள் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயம். இதுகுறித்த அறிவிப்பு பலகைகள் இருந்தாலும், சில நேரங்களில் வாகன ஓட்டிகள் அதை கவனிக்க தவறிவிடுகின்றனர். இதற்காகவே புதிய சிஸ்டம் கொண்டுவரப்படுகிறது.

கார், வேன், ஜீப் வைத்திருப்பவர்கள்.. இனி தேசிய நெடுஞ்சாலையில் உஷார்!

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (National Highways Authority of India) ஆனது 4ஜி மற்றும் 5ஜி சேவைகளில் முன்னணியில் இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலமாக ஜியோவின் 4ஜி மற்றும் 5ஜி சேவையைப் பயன்படுத்தும் பயணிகள் தங்களது மொபைல் போன்களில் முன்கூட்டியே அலெர்ட்களை பெறமுடியும்.

ஆகவே, விபத்து பகுதிகள், விலங்குகள் நடமாடும் பகுதிகள் மட்டுமல்லாமல், பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் அவசர கால மாற்றுப்பாதை ஆகியவற்றின் அலெர்ட்களையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். எஸ்எம்எஸ் (SMS) மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) ஆகியவற்றின் மூலம் இந்த அலெர்ட்கள் கொடுக்கப்பட இருக்கின்றன. ஆகவே, வகனங்களை இயக்குவதில் ஏற்படும் சிரமங்களை இது குறைக்கும்.

மேலும், தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் அவசர காலங்களில் வாகன ஓட்டிகளுக்கு ஹை-பிரியாரிட்டி கால்கள் (High-priority Calls) இதில் செய்யப்படும். இந்த புதிய அலெர்ட் சிஸ்டமானது ராஜ்மார்க்யாத்ரா மொபைல் ஆப் (Rajmargyatra Mobile App) மற்றும் அவசர உதவி எண் 1033 உள்ளிட்ட இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் டிஜிட்டல் தளங்களுடன் படிப்படியாக ஒருங்கிணைக்கப்பட இருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகள் அல்லது அதற்கு அருகில் உள்ள அனைத்து ஜியோ மொபைல் நெட்வொர்க் கஸ்டமர்களுக்கும் இந்த அலெர்ட் சிஸ்டம் வேலை செய்ய இருக்கிறது. ஆகவே, தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் ஆபத்தான மண்டலத்திற்குள் நுழைவதற்கு முன்பாகவே அவர்கள் எச்சரிக்கையாக இருக்க முடியும். இதற்கான ஜியோ நிறுவனத்தின் டெலிகாம் டவர்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

இந்த டவர்கள் ஏற்கனவே இருப்பதால், கூடுதல் வேலையில்லாமல் விரைவாக பயன்படுத்த முடியும். இந்த அலெர்ட் சிஸ்டம் படிப்படியாக அமலுக்கு வர இருக்கின்றன. ஆகவே, அதிக விபத்துகள் நடக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து தொடங்கப்பட வாய்ப்புள்ளது. இது பயணிகளுக்கு கிடைக்கும்போது ஒழுங்குமுறை மற்றும் டேட்டா பாதுகாப்பு சட்டங்களுக்கு இணங்கி வழங்கப்படும்.

முன்னதாக நொய்டா எக்ஸ்பிரஸ்வே, யமுனா எக்ஸ்பிரஸ்வே, எலிவேட்டட் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து காவல்துறையால் கொண்டுவரப்பட்ட ஸ்பீடு லிமிட்டை காண்பிக்கும்படி கூகுள் மேப்பில் (Google Maps) அப்டேட் கொண்டுவரப்பட்டது. இது அந்த சாலையில் செல்லும்போது ரியல் டைமில் வாகன ஓட்டிகளுக்கு காண்பிக்கப்படுகிறது. இதேபோல மற்ற சாலைகளிலும் கொண்டுவரப்பட இருக்கிறது.

இப்படி தேசிய நெடுஞ்சாலை, மாநிலங்களுக்கு சொந்தமான நெடுஞ்சாலை ஆகியவற்றில் பாதுகாப்பாக பயணம் செய்வதற்காக ஆப்கள் மற்றும் தொழில்நுட்பங்களை போக்குவரத்து காவல்துறை மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கையில் எடுத்துள்ளது. இந்த அலெர்ட்களை பயன்படுத்தி முன்கூட்டியே எச்சரிக்கையாக இருக்கும்படி வாகன ஓட்டிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
NHAI With Reliance Jio To Launch Telecom Based Safety Alert System Across National Highways
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X