புது ரூல்ஸ்! NHAI உடனடி அமல்.. இவ்வகை FASTag-ஐ காட்டினால் உடனே பிளாக் லிஸ்ட் செய்யப்படும்.. தப்பிப்பது எப்படி?
புதிய வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் (New Annual FASTag Pass) ஆனது வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ள நிலையில், என்எச்ஏஐ (NHAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ( National Highways Authority of India) ஆனது ஃபாஸ்டேக் தொடர்பான தனது கொள்கையை மேலும் நெறிப்படுத்தியுள்ளது.
டேக்-இன்-ஹேண்ட் (Tag-in-hand) என்று பொதுவாக குறிப்பிடப்படும் "லூஸ் ஃபாஸ்டேக்களை" (Loose FASTags) புகாரளித்து, அவற்றை பிளாக்லிஸ்ட்டில் சேர்க்குமாறு சுங்க வரி வசூலிக்கும் முகவர் நிறுவனங்கள் (Toll Collecting Agencies) மற்றும் சலுகைதாரர்களுக்கு (Concessionaires) என்எச்ஏஐ உத்தரவிட்டுள்ளது.

அதாவது - வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களின் கண்ணாடிகளில் ஃபாஸ்டேக்-களை இணைக்காமல் அல்லது வாகனங்களின் கண்ணாடிகளில் ஃபாஸ்டேக்-களை ஒட்டாமல், டோல் கேட் வரும்போதெல்லாம் அதை கைகளில் எடுத்து காட்டுவதே டேக்-இன்-ஹேண்ட் என்று அழைக்கப்படுகிறது. இவ்வகை ஃபாஸ்டேக் தான் தடுப்புப்பட்டியலில் போடப்பட்டு உள்ளது.
இவ்வகை வாகன ஓட்டிகளால் டோல் கேட்டில் போக்குவரத்து நெரிசல், தவறான கட்டணங்களை உருவாக்குதல், க்ளோஸ்டு-லூப் டோலிங் அமைப்புகளுக்குள்ளான தவறான பயன்பாடு மற்றும் மொத்த எலெக்ட்ரானிக் டோல் கலெக்ஷனையும் (Electronic Toll Collection) சீர்குலைப்பது போன்ற சிக்கல்கள் எழுவதாக என்எச்ஏஐ புகார் அளிக்கிறது. இத்தகைய சிக்கல்கள் சுங்கச்சாவடிகளில் தேவையற்ற தாமதங்களையும், பிற பயனர்களுக்கு சிரமத்தையும் ஏற்படுத்துகின்றன என்றும் என்எச்ஏஐ குறிப்பிட்டுள்ளது.
ஃபாஸ்டேக் மற்றும் ஃபாஸ்டேக் சிஸ்டமை நேர்த்தியாக ஒழுங்கப்படுத்தும் நோக்கத்தின் கீழ் ஆகஸ்ட் 15 முதல் அமலுக்கு வரும் வருடாந்திர பாஸ் அமைப்பு மற்றும் மல்டி-லேன் ப்ரீ ஃ ப்ளோ (multi-lane free flow - MLFF) சுங்கச்சாவடி முயற்சிகளுக்கு முன்னதாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இந்த தீர்க்கமான நடவடிக்கை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எனவே இதிலிருந்து தப்பிக்க ஃபாஸ்டேக்-ஐ கண்ணாடியில் ஒட்டவும்!
உடனடி திருத்த நடவடிக்கைகளை எளிதாக்குவதற்காக, என்எச்ஏஐ ஒரு பிரத்யேக இமெயில் ஐடியையும் வழங்கியுள்ளது மற்றும் அதன் சுங்க வசூல் நிறுவனங்கள் மற்றும் சலுகைதாரர்களுக்கு தெளிவான உத்தரவுகளையும் வழங்கியுள்ளது; ஃபாஸ்டேக் தளர்வு தொடர்பாக நிகழ்வுகள் ஏதேனும் நடந்தால் உடனடியாக புகாரளிக்க அறிவுறுத்துகிறது.
இதன்கீழ் புகாரளிக்கப்பட்ட தடுப்புப்பட்டியல் அல்லது ஹாட்லிஸ்ட்டில் உள்ள ஃபாஸ்டேக் மீது என்எச்ஏஐ விரைவான நடவடிக்கைகளை எடுக்கும். 98 சதவீதத்திற்கும் அதிகமான ஊடுருவல் விகிதத்துடன், ஃபாஸ்டேக் ஆனது ஏற்கனவே நாடு முழுவதும் மின்னணு சுங்க வசூல் முறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூடுதலாக வரும் இந்த புதிய முயற்சி, சுங்கச் சாவடிகளின் செயல்திறனை மேலும் மேம்படுத்தும் என்றும், அனைத்து தேசிய நெடுஞ்சாலை பயனர்களுக்கும் மென்மையான மற்றும் வசதியான பயணங்களை உறுதி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ்களுக்கு பிறகு!
புதிதாக வரும் வருடாந்திர ஃபாஸ்டாக் பாஸின் விலை ரூ.3,000 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2025 ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் இது வணிக ரீதியான தனியார் வாகனங்களுக்கு கிடைக்கும். மேலும் இது செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடம் அல்லது 200 பயணங்கள் வரை, என எது முதலில் வருகிறதோ அதுவரை செல்லுபடியாகும்.
இந்த புதிய பாஸ் ஆனது 60 கிமீ வரம்பிற்குள் அமைந்துள்ள சுங்கச்சாவடிகள் தொடர்பான நீண்டகால கவலைகளை நிவர்த்தி செய்கிறது மற்றும் சிங்கிள், மலிவான பரிவர்த்தனை மூலம் சுங்கக் கட்டணங்களை எளிதாக்குகிறது. காத்திருப்பு நேரங்களை குறைப்பதன் மூலமும், நெரிசலை குறைப்பதன் மூலமும், சுங்கச்சாவடிகளில் ஏற்படும் சச்சரவுகளை குறைப்பதன் மூலமும், மில்லியன் கணக்கான தனியார் வாகன உரிமையாளர்களுக்கு விரைவான மற்றும் மென்மையான பயண அனுபவத்தை வழங்குவது உறுதி செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








