Home
News

சுங்கச்சாவடிகளில் புது ரூல்ஸ்.. நம்பர் பிளேட், மொபைல் எண், FASTag பேலன்ஸ் ரெடியா வைங்க.. ஏன்? NHAI விளக்கம்!

இந்தியாவானது - தடையற்ற சுங்கக் கட்டண முறையை நோக்கி நகரும் நிலையில், எம்எல்எப்எப் (MLFF) என்கிற பலவழி தடையற்ற போக்குவரத்து (Multi-Lane Free Flow) சுங்கக் கட்டண முறை எவ்வாறு செயல்படுகிறது? வாகன ஓட்டிகள் ஏன் சில நேரங்களில் இருமடங்கு சுங்கக் கட்டணத்தை செலுத்த நேரிடுகிறது? அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஒரு பொது விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு, வாகனங்கள் நிற்காமல் கடந்து செல்லும் எம்எல்எப்எப் வழித்தடங்கள் அதிகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரும் சூழலில் இந்த விளக்கம் வெளியாகியுள்ளது. இந்த புதிய செயல்முறை - நெடுஞ்சாலை பயணத்தை வேகமாகவும், சுமூகமாகவும் மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், தவறவிட்ட அல்லது செலுத்தப்படாத ஃபாஸ்டேக் கட்டணங்களை உரிய நேரத்தில் செலுத்த தவறினால் அபராதம் விதிக்கப்படலாம் என்பதால், ஓட்டுநர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று என்எச்ஏஐ கூறுகிறது.

நம்பர் பிளேட், மொபைல் எண், FASTag பேலன்ஸ் ரெடியா வைங்க.. ஏன்?

எம்எல்எப்எப் முறையின் கீழ் தடையற்ற சுங்கக் கட்டணம் என்றால் என்ன? எம்எல்எப்எப் முறையானது, தானியங்கி ஃபாஸ்டேக் அடிப்படையிலான மின்னணு சுங்கக் கட்டண வசூல் அமைப்பின் மூலம் தடையற்ற சுங்கக் கட்டண வசூலை சாத்தியமாக்குகிறது. பிஸிக்கல் தடைகள் அல்லது சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக, மேலே உள்ள கேன்ட்ரிகளில் பொருத்தப்பட்ட கேமராக்கள் மற்றும் சென்சார்கள், வாகனங்கள் சீரான வேகத்தில் கடந்து செல்லும்போது, ​​அவற்றை தானாகவே கண்டறிந்து, ஃபாஸ்டேக்-களை படித்து, மின்னணு முறையில் சுங்கக் கட்டணங்களைக் கழிக்கின்றன.

இந்த ஏற்பாடு போக்குவரத்து நெரிசலை நீக்குகிறது, பயண நேரத்தை குறைக்கிறது மற்றும் எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்துகிறது. இருப்பினும், நேரடி சோதனை சாவடி இல்லாததால், சுங்கக் கட்டண இணக்கம் என்பது ஃபாஸ்டேக் நிலை, இருப்புத் தொகை மற்றும் சரியான வாகன அடையாளம் ஆகியவற்றை முழுமையாக சார்ந்துள்ளது.

நீங்கள் ஏன் அடிக்கடி ஒரு மின்னணு அறிவிப்பை (e-Notice) பெறலாம்? என்எச்ஏஐ-இன் கூற்றுப்படி படி, பின்வரும் சமயங்களில் உங்களுக்கு இ-நோடீஸ் கிடைக்கலாம்: ஒரு வாகனம் எம்எல்எப்எப் சுங்கச்சாவடியைக கடக்கும்போது, அது ஃபாஸ்டேக் கட்டணம் செலுத்த தவறும்போது, ​​செலுத்தப்படாமல் போகும்போது அல்லது கண்டறியப்படாமல் போகும்போது இ-நோடீஸ் கிடைக்கலாம்

இத்தகைய சந்தர்ப்பங்களில், கணினி அமைப்பு அந்த பயணத்தை பதிவுசெய்து, வாகனத்தின் பதிவு விவரங்களுடன் இணைக்கப்பட்ட ஒரு மின்னணு அறிவிப்பை உருவாக்குகிறது. இந்த அறிவிப்பு டிஜிட்டல் முறையில் வெளியிடப்படுகிறது. இது, வாகன உரிமையாளர் நிலுவையில் உள்ள சுங்கக் கட்டணத்தை அபராதமின்றி, ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமைகிறது.

டபுள் சார்ஜை தவிர்க்க 72 மணி நேரத்திற்குள் கட்டணம் செலுத்த வேண்டும்: ஒரு மின்னணு அறிவிப்பு வெளியிடப்பட்ட 72 மணி நேரத்திற்குள் வாகன ஓட்டிகள் நிலுவையில் உள்ள சுங்கக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று என்எச்ஏஐ தெளிவாக கூறியுள்ளது. ஒருவேளை 72 மணி நேரத்திற்குப் பிறகு செலுத்தினால்.. என்ன ஆகும்?

72 மணி நேரம் கழித்து செலுத்தினால் சுங்கக் கட்டணம் இரு மடங்கு (2x) ஆகும். இதனால் தான் சில பயனர்களுக்கு பின்னர் அதிக கழிவுகள் விதிக்கப்படலாம்; இந்த அபராதம் எம்எல்எப்எப் சாலையை பயன்படுத்தியதற்காக விதிக்கப்படவில்லை, மாறாக தவறவிட்ட சுங்கக் கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்த தவறியதற்காகவே விதிக்கப்படுகிறது.

டபுள் சார்ஜை தவிர்ப்பது எப்படி? தடையற்ற எம்எல்எப்எப் பயணத்தை உறுதிசெய்ய, என்எச்ஏஐ பின்வருவனவற்றை செய்யுமாறு கார், ஜீப், வேன் போன்ற வாகனஓட்டிகளை பரிந்துரைக்கிறது:
1. ஃபாஸ்டேக் -ஐ எல்லா நேரங்களிலும் செயல்பாட்டில் வைத்திருக்கவும்
2. ஃபாஸ்டேக் வாலட்டில் போதுமான பேலன்ஸை பராமரிக்கவும்
3. உங்கள் வாகனத்தில் - எச்எஸ்ஆர்பி (HSRP) என்கிற ஹை-செக்யூரிட்டி ரிஜிஸ்ட்ரேஷன் பிளேட்டை (High Security Registration Plate) பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்
4. பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட அறிவிப்புகளை தவறாமல் சரிபார்க்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
NHAI Explained MLFF toll system Works Who Need to Pay Double Charge and How to Avoid That
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X