Home
News

அடுத்த ஆப்பு.. FASTag யூஸர்களுக்கு கெடு! மார்ச் 15க்குள் இதை செஞ்சிடுங்க.. இல்லனா? NHAI அதிரடி; பாவம் பேடிஎம்!

என்எச்ஏஐ (NHAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India) ஆனது ஃபாஸ்டேக்கை (Fastag) வழங்குவதற்கான தகுதிப்பெற்ற, அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் (Authorized banks) பட்டியலில் இருந்து பேடிஎம்-ஐ (Paytm) அதிரடியாக நீக்கி உள்ளது.

முன்னதாக பிப்ரவரி 29 என்று கொடுக்கப்பட்டு இருந்த கெடு, தற்போது 2024 மார்ச் 15 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது. அதன் பின்னர் பேடிஎம் ஃபாஸ்டேக்ஸ் (Paytm FASTags) செயல்படாது. அதாவது பேடிஎம்-ஐ பயன்படுத்தி இனி ஃபாஸ்டேக்-ஐ வாங்க முடியாது என்று அர்த்தம்.

Paytm FASTag யூஸர்களுக்கு கெடு! மார்ச் 15க்குள் இதை செஞ்சிடுங்க!

ஏற்கனவே பேடிஎம் ஃபாஸ்டேக்ஸ் உள்ளவர்கள் அதை க்ளோஸ் அல்லது டிஆக்டிவேட் செய்யுமாறும், தடையற்ற பயணத்திற்காக புதிய ஃபாஸ்டேக்-ஐ பெருமாறும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. ஒருவேளை உங்களுக்கு புதிய ஃபாஸ்டேக்கை வாங்குவதற்கு என்எச்ஏஐ-ஆல் அங்கீகரிக்கப்பட்ட 32 வங்கிகளை பற்றி தெரியாது என்றால்.. இதோ முழு பட்டியல்:

ஸ்டேட் பேங்க் ஆஃப் வங்கி (State Bank of India)
ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank)
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி (Airtel Payments Bank)
எச்டிஎப்சி வங்கி (HDFC Bank)
ஃபினோ பேமெண்ட்ஸ் வங்கி (Fino Payments Bank)
ஐடிபிஐ வங்கி (IDBI Bank)

Paytm FASTag யூஸர்களுக்கு கெடு! மார்ச் 15க்குள் இதை செஞ்சிடுங்க!

ஐடிஎஃப்சி வங்கி (IDFC Bank)
இந்தியன் வங்கி (Indian Bank)
ஜம்மு மற்றும் காஷ்மீர் வங்கி (Jammu and Kashmir Bank)
இன்டஸ்லேண்ட் வங்கி (Indusland bank)
கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank)
கர்நாடகா வங்கி (Karnataka Bank)
கரூர் வைஸ்யா வங்கி (Karur Vysya Bank)

நாக்பூர் நகரிக் சககாரி வங்கி (Nagpur Nagarik Sahakari bank)
பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank)
சர்ஸ்வத் வங்கி (Sarswat Bank)
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India)
யெஸ் வங்கி (YES Bank)
திருச்சூர் மாவட்ட கூட்டுறவு வங்கி (Thrissur District Cooperative Bank)

Paytm FASTag யூஸர்களுக்கு கெடு! மார்ச் 15க்குள் இதை செஞ்சிடுங்க!

யுசிஓ வங்கி (UCO Bank)
ஆக்சிஸ் வங்கி (Axis Bank)
ஏஆயு ஸ்மால் பைனான்ஸ் வங்கி (AU Small Finance Bank)
மகாராஷ்டிரா வங்கி (Bank of Maharashtra)
கனரா வங்கி (Canara Bank)
காஸ்மோஸ் வங்கி (Cosmos Bank)
பந்தன் வங்கி (Bandhan Bank)

பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda)
பெடரல் வங்கி (Federal Bank)
ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Equitas Small Finance Bank)
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank)
சவுத் இந்தியன் வங்கி (South Indian Bank)
சிட்டி யூனியன் வங்கி (City Union Bank)

பழைய ஃபாஸ்டேக்கை க்ளோஸ் அல்லது டிஆக்டிவேட் செய்வது எப்படி? உங்கள் யூசர் ஐடி, வாலட் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி ஃபாஸ்டேக் பேடிஎம் போர்ட்டலில் லாக்-இன் செய்யவும். பின்னர் சரிபார்ப்பு நோக்கங்களுக்காக உங்கள் ஃபாஸ்டேக் எண் மற்றும் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் போன்ற அத்தியாவசிய தகவல்களை உள்ளிடவும்.

பின்னர் கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்து ஹெல்ப் & சப்போர்ட் விருப்பத்தைக் கண்டறியவும். அங்கே கிடைக்கக்கூடிய விருப்பங்களிலிருந்து 'நான்-ஆர்டர் தொடர்புடைய வினவல்களுக்கு உதவி தேவையா? (Need Help With Non-Order Related Queries?) என்பதை தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஃபாஸ்டேக் ப்ரொபைலை புதுப்பிப்பது தொடர்பான வினவல்கள்' (Queries Related to Updating FASTag Profile) என லேபிளிடப்பட்ட விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

கடைசியாக நான் எனது ஃபாஸ்டேக்கை மூட விரும்புகிறேன் (I Want to Close My FASTag) என்பதை தேர்வுசெய்து, டிஆக்டிவேட் செயல்முறையை முடிக்க வழங்கப்படும் அடுத்தடுத்த வழிமுறைகளை பின்பற்றவும்; அவ்வளவு தான். பின்னர் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 32 வங்கிகளில், ஏதேனும் ஒன்றில் இருந்து புதிய ஃபாஸ்டேக்கை பெறவும்.

Best Mobiles in India

English summary
NHAI Announced to Get New FASTag From one of the 32 Authorised banks Remove Paytm From List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X